Skip to main content

Posts

Showing posts with the label நூல் அறிமுகம்

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...

THE MURDERER, THE MONARCH AND THE FAKIR - நூல் அறிமுகம்

  யாவரும் அறிந்த உண்மைகளிலும் ஒரு உண்மை ஒளிந்துக் கொண்டே தான் உள்ளது போலும். அது போலவே பலரும் அறிந்த உண்மையையும் மீண்டும் பல காலம் கழித்து அதன் உண்மைத்தன்மையை எவரேனும் காரியமாக அசைத்திட முற்படுகையில் அந்த உண்மையை மீண்டும் மீண்டும் அறுதி செய்ய வேண்டி உள்ளது காலத்தின் தேவையாகிறது. அவ்வாறான சில உண்மைகளை திரும்பவும் உறுதியாக சொல்வதும் ஒளிந்திருந்த அல்லது அவ்வளவாக கவனம் பெறாத சில உண்மைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் ஒரு முக்கியமான புத்தகம் தான் இது.   THE MURDERER, THE MONARCH AND THE FAKIR.   காந்தியடிகளின் கொலை என்பது ஒன்றும் மர்மமான ஒன்றல்ல. எவர் சுட்டார் எதற்காக சுட்டார் என்பதெல்லாம் தெரிந்த உண்மைகள். உண்மையில் சுட்டவன் தன்னை யார் என்று ஒளித்து வைக்கவில்லை , அவனுடைய நோக்கமும் தெளிவானதே. இதிலென்ன சுவாரசியம் மீண்டும் மீண்டும் வருகிறது ? கோட்சே ஆம் நாந்தான் சுட்டேன் என நீதிமன்றத்தில் சொன்னானே பிறகென்ன ? ஆனால் , இவ்வளவுதானா உண்மைகள்… ? கோட்சேவின் தனிப்பட்ட கோபத்தினால் மட்டுமே விளைந்ததா இக்கொலை ? நாந்தான் சுட்டேன் என்று சொன்னதின் பின்னே ஏதேனும் உண்மை மறைக்கப்பட்டதா ? இவைய...

வானவாசிகள் - என் பார்வையில்

  விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே.. இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி…. விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.     பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்ச...

ராஜ வனம் மற்றும் காடர் - நூல் அறிமுகம்

ராஜ வனம்   இத்தோடு அநேகமாக நான்கு அல்லது ஐந்து வனம் குறித்த நூல்களை வாசித்திருக்கிறேன். லஷ்மி சரவணக்குமாரின்{?} ஒரு புலி பற்றிய நூல், அருமைத் தமிழின் சொந்தக்காரர் என் பிரியத்துக்குரிய நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி என்னும் classic, சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த பிரசாந்த் வே அவர்களின் சிறுகதை தொகுப்பான காடர் என்பதைத் தொடர்ந்து ஒரு வனம் குறித்த சிறுகுறுநாவல்.   வறீதையா கானஸ்தந்தின் அவர்களின் மொழியை படித்தவர்களுக்கு அதுவும் அவரது சமீபத்திய குமரி நிலப்பகுதி எழுத்தாளர்களின் (மீனவ சமூகத்தின்?) சிறுகதைகளை வாசித்ததன் மூலம் ஓரளவு நாஞ்சில் நாட்டு dialect எந்த பிரச்சனையும் இல்லாம சமாளிச்சுருலாம் என நினைத்தே ராஜவனம் எடுத்தேன்.   ஆனா அப்படி எல்லாம் இல்ல. இது கொஞ்சம் இன்னமும் மெனக்கட வேண்டி இருந்தது. ஆனாலும் சுகமான அனுபவம். மலையாளம் தமிழும் கலந்து திரிந்து ஒருவித இசைக்கோர்வையாக வரும் நாஞ்சில் நாட்டு வட்டார மொழி வழக்கு பிரமாதம், மயக்குகிறது. அநேகமாக காடுகளை களமாக கொண்டு எழுதுபவர்களால் வனங்களின் அந்த தாவர வளம், வகைகள், விலங்கு வகையினம், மண் வளம் என்பனவற்றின் மீது ஒரு மையல் கொள்ளாமல் எழ...

DESPITE THE STATE - நூல் அறிமுகம்

  Despite the state. கடந்த 15-20 நாட்களாக ஒரே புத்தகத்துடன் சுற்றி வருகிறேன் . உலகமயத்திற்கு பின்னான இந்தியாவில் எப்படி மாநிலங்களில் "state” அதாவது அரசு என்னும் identity என்ன role play செய்கிறது என்ற ஆய்வும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளும் கருத்துக்களுமே இந்நூல் . இயக்கங்களில் இருப்பவர்கள் இப்புத்தகத்தை படித்தால் நல்லது . ஏனெனில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் rhetoric வசனங்களின் பின்னே இருக்கும் வெறுமையும் , நாம் எதிர்பாராத திசையில் ஒளிந்திருக்கும் உண்மைகளும் , கண் முன்னே நடந்தாலும் ஒரு மூடு திரை நம் கண் முன் ஒரு மகத்தான உண்மைநிலையை மறைப்பதை கண்டுணர முடியும் . மிசோரம் , ஒரிசா , பீகார் , தமிழ்நாடு , பஞ்சாப் , குஜராத் என இந்த மாநிலங்களுக்கு சென்று அங்கே நடப்பவைகளை கண்டுணர்ந்து பிரச்சனைகளின் தன்மையை உணர stakeholders எனப்படுவோரை பேட்டி கண்டும் தான் வாசித்தவற்றில் இருந்தும் சில உண்மைகளை கண்டடைவது என அசல் ஆய்வினை நடத்தியுள்ளார் இப்பத்திரிகையாளர் . இது தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் சொல்கிறேன் , மீடியாக்களில் விவாதத்தை சரிவர நடத்துபவர்கள் மட்டுமே பெரிய பத்திரிகைய...

நீண்ட காத்திருப்பு - அறிமுகம்

எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை . ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை . இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்காமல் நெஞ்சம் கனத்து படிக்க முடியாமல் வைக்கப்பட்ட புத்தகங்களில் இது சேராது . ஆனாலும் , ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது , இப்புத்தகம் தன்னுடைய வார்த்தைகளில் அதை பொதிந்து வைத்திருக்கிறது . ஒரு மூச்சில் படித்துவிட என்னால் முடிந்தது . போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் சிறை அனுபவமும் , விடுதலைக்கான பின்னான சில தினங்களுமே இப்புத்தகம் . இலங்கை கடற்படையின் அதிகாரி கொமடோர் அஜித் போயகொட போரில் விடுதலைப்புலிகளால் சிறைபிடிக்கப்படுகிறார் . அவரோடு அப்போரில் கைதான ஒருவர் என தொடங்கி , பின் 22 பேர் இணைகின்றனர் . சிறை வாழ்வின் ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான எந்த சிந்தனையும் இல்லை , எனினும் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை . ஆனாலும் போரில் இராணுவம் முன்னேறும் தருணங்களில் இவர்கள் சிக்கலுக்கும் , புலிகள் முன்னேறும் தருணங்களில் ஆசுவாசமும் பெறுகிறார்கள் . இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் கடைசிவரை கொமடோராகவே இலங்கை அ...

நீ கரடி என யார் சொன்னது? - நூல் அறிமுகம்

ஒரு கரடி குளிர்கால உறைபனிக்கு பாதுகாப்பாய் கொஞ்ச காலம் தூங்கி எழுந்து பார்த்தா... காட்டைக் காணோம்... அங்கே ஒரு தொழிற்சாலை இருக்கு... என்ன இடம் இதுன்னு தயங்கி தயங்கி கரடி உள்நுழைய... கரடியை கண்டு பயப்படாம வாப்பா என்ன வேஷம் போட்டுட்டு வந்தா விட்டுறவமா என வேலை செய் என தொழிற்சாலை அதிகாரி நிர்பந்தம் செய்ய... இல்லங்க, நான் கரடிதான் மனுஷன் இல்ல என கரடி கெஞ்ச.... இல்லவே இல்ல, நீ கரடி வேஷத்துல மனுசன் என எல்லா அதிகாரிகளும் கடைசியாய் முதலாளியும் சொல்ல.. குழப்பமடைந்த கரடி வேறு வழியின்றி  வேலை செய்ய.. மீண்டும் பனிக்காலம் வந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட.. கரடிக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?... அட போங்க... சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய...

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - நூல் அறிமுகம்

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - கருப்பு பிரதிகள் வெளியீடு. 2010. அழகிய பெரியவன் அவர்களின் குறுநாவல்கள் கொண்ட அழகிய படைப்பு. 2010 வெளியீடு. எளிய மனிதர்களின் வாழ்வு அப்படியே அச்சு அசலாய் எழுத்தில் பதிந்துள்ளது. எங்கும் சினிமாத்தனம் இல்லை. ஒரு சிறு விபத்தும் அப்படியே முற்றாக கலைத்து விடுகிறது வாழ்க்கையை. ஆனாலும் வாழ்வதற்கான வேட்கையை விடுவதில்லை அவர்கள். எத்தனை அவலத்துக்குரிய பொழுதிலும் அன்புக்குரிய ஆதரவு ஒன்று அகப்பட்டுவிட்டால் அதன் நிமித்தம் வாழ்வை எப்படியாவது கடத்திவிட ந ினைக்கும் மனங்கள். இயல்பான பேச்சு நடை கொண்ட கதை என்றாலும் அழகிய பெரியவன் தன்னுடைய எழுத்து வலிமையை ஆங்காங்கே விவரிக்க பயன்படும் சிறு தருணங்களில் தவற விடுவதில்லை. 2010ல் எழுதப்பட்ட கதை களங்கள் அப்படியொன்றும் இப்பொழுது மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகமயம் எளிய மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தியுள்ள கோர யுத்தம் இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைக் களங்களை விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன். கருப்பு பிரதிகள் அப்பொழுதே புத்தக வடிவமைப்பில் சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எழுத்துப் பிழையே இல்லை எனலாம். அழகிய அட...

My Brigadista Girl - நூல் அறிமுகம்

கம்யூனிஸ புரட்சி நடைபெற்று விடுதலை அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும் புரட்சி அரசு நடத்திய முதல் அரசியல் நிகழ்வு ”அனைவருக்கும் கல்வி”. ரஷ்யா தொடங்கி கியூபா வரையிலும் அதுவே முக்கிய முதல் நிகழ்வு. அதிலும் கியூபாவின் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டமும் செயலாக்கமும் வியப்பளிப்பவை, அனைவருக்கும் உதாரணமாக விளங்க கூடியவை. விடுதலை கிடைக்கின்ற போது வெறும் 40 சதம் மட்டுமே இருந்த அந்நாட்டின் எழுத்தறிவு புரட்சி நடைபெற்ற ஓராண்டில் – ஒன்றரையாண்டில் 100 சதமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தன் நாட்டு குடிகள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றிய உலகின் முதல் நாடு கம்யூனிச கியூபா. இது எப்படி சாத்தியம் ஆனது என்பது மிக சுவாரசியமான உண்மைக் கதை. வாருங்கள் நம் நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாமல் ஆக்குவோம் என அழைத்த தோழர் பிடலின் குரலுக்கு அந்நாட்டின் இளைஞர்கள், மாணவ மாணவியர் என எல்லாரும் தயாராயினர். WE SHALL PREVAIL என கோஷம் முன்வைக்கப்பட கியூப தலைநகராம் ஹவானாவில் 50000 பேர் கையில் புத்தகத்தோடும், 10 அடி உயர மாடல் பென்சிலோடும், ஆம் நாங்கள் வெல்வோம் என பாடிய...

பணிக்கரின் பேத்தி - ஷர்மிளா சய்யித் --- நூல் அறிமுகம்

வாழ்வாங்கு வாழ்தல் என்று சொல்வார்கள். அது சிலருக்குத் தான் அமையும் என்பார்கள். வாழ்வாங்கு வாழ்தல் என்பது குறித்து பலருக்கும் பல புரிதல் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். நான் அப்படி வாழ்வாங்கு வாழ்ந்த (என் புரிதலில்) ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து ரசித்தேன். ஷர்மிளா சய்யித் அவர்களின் "பணிக்கரின் பேத்தி" படித்ததை தான் சொல்கிறேன். பெரு தனக்காரரின் பரம்பரையில் பிறந்து பின் எல்லாம் இழந்து இளம் வயதிலேயே வறுமை பற்ற, பின் தன் அயராது உழைப்பினால் ஓரளவிற்கு ஒரு நிலைக்கு வந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தியின் வாழ்வே பணிக்கரின் பேத்தி. விடாத உழைப்பு, அதற்கான ஒரு பெரு முயற்சி அவை நல்கும் தளராத நம்பிக்கை என இனிதாய் கடக்கிறது வாழ்க்கை. உழைப்பது என்பது நேர்ந்து விட்ட ஒன்றாக முதலில் அமைந்து பின் அது ரசிக்கத்தக்க ஒன்றாக மாறி ஒரு கட்டத்தில் போதையாகவே மாறி போகிறது போல பலருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அவர்கள் மகன்கள் வாழ்வில் செட்டில் ஆகி விட்ட பிறகும் இன்னும் வீட்டுக்கு வீடு பால் ஊற்றும் தொழிலை விடவில்லை. கேட்டால், இது தொழிலப்பா என்பார். இது தொழிலா, ஒரு போதையா ...

The East was Read - நூல் அறிமுகம்

மிஷா, சோவியத்லைப், ராதுகா பதிப்பகம், சிவப்பு நிற கெட்டி அட்டையில் மாமேதை லெனின் முகம் கொண்ட புத்தகங்கள், அந்த பச்சை நிறம் கொண்ட ஒரு தனி ரக வழவழப்பான அதே சமயம் சற்றே கெட்டியான அட்டையோடு அமைந்த "குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என இவையெல்லாம் அதிகபட்சம் ஒரு 25 ரூபாய்க்குள் கிடைத்திட்ட பொழுதில் நானும் இருந்தேன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. கோவையின் உக்கடம் பகுதியின் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பழைய கடைகளில் 2003ல் கூட நான் வெறும் 10 ரூபாய்க்கு மார்க்ஸிம் கார்க்கியின் தாய் புத்தகம் வாங்கியுள்ளேன். சோவியத் என்ற அந்த சொல்லே ஒரு பாதுகாப்பு உணர்வு மற்றும் ஏதோ நம்மோடது போல ஒரு நினைப்பு. இனி இந்த புத்தகத்திற்கு வருவோம். Leftwordபதிப்பகத்தின் மார்ச் 2019 வெளியீடு EAST WAS READ. ஒரு புத்தகத்தின் அட்டை உள்ளிட்டு மிக கவனத்துடன் வடிவமைப்பதில் தொடர்ந்து இந்த பதிப்பகம் சிறக்கிறது. தவறவே விட கூடாததாகவும், இந்தப் புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற உணர்வினை தோழர் விஜய் பிரசாத் அவர்களின் முன்னுரை நமக்கு கடத்துகிறது. 1896-97 காலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்ச பொழுதில் ஒரு பக்கம் 4...

தினங்களின் குழந்தைகள் - நூல் அறிமுகம்

அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் காலந்தொட்டே அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகின்றன. அவ்வாறான குரல்கள் ஏதோ ஒரு வகையில் கொடூர ஒடுக்குதலை சந்திக்கின்றன. கொடூரமான உயிர் பலியாகவுமே பல சமயங்களில் இருக்கின்றன. லாபம் என்னும் வார்த்தை கொண்டு மக்களின் இயல்பான அடிப்படை தேர்வுகளான உடை உடுத்துதல், உணவு உள்ளிட்ட பலவற்றை நாகரிகம் என்ற வேறொரு சொல்லில் வீழ்த்தி அவர்களை அதே தேர்வுகளில் இருந்து விடுவிப்பதாக சொல்லி பிறிதொன்றில் அடிமை செய்வது என்பது தொடர்கதையாகிறது. அதோடு மட்டுமல்ல, நிலங்களின ் இயற்கையான வளத்தை பாழாக்கி அந்நிலத்தை தனது லாப வேட்கைக்கு அடிமை செய்வதும் இயல்பாகிறது. எல்லாம் உங்கள் நலத்திற்காகவே, வளமான வாழ்விற்காகவே என தேன் வார்த்தைகள் தூவி மாய அடிமை சங்கிலியை வீசி அவர்களை கவ்வுகிறது, முதலாளித்துவம். இவ்வாறான கதைகளும், அதிகாரத்திற்கு எதிராக மிக சன்னமாகவேனும் குரல்கள் எழுப்பிய மாவீரர்களின் கதை தொகுப்புமே இந்நூல். இன்றைக்கு அந்த நாள், நாளை அந்த நாள் என்பதான நாட்களின் கொண்டாட்டம் பின்னே உள்ள உண்மைகளையும், அந்த நாள், இந்த நாள் என்றில்லாது வருடம் முழுக்கே உலகின் ஏதோ ஒரு பகு...

துணிவின் பாடகன் - பாந்த் சிங் - நூல் அறிமுகம்

படிச்சாச்சு . பாந்த் சிங் முடிச்சாச்சு . பாரதி புத்தகாலயம் - காம்ரேட் டாக்கீஸ் கூட்டு வெளியீடு . கமலாலயன் தோழரின் சலிப்படைய செய்யாத மொழிபெயர்ப்பு . வாசிக்க எளிதாக இருக்கிறது . போராளியும் கலைஞருமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு ஆதலால் , அவ்வப்போது வருகிற சின்ன சின்ன பாடல் வரிகளோடு புத்தகம் படிக்க சுகமாகிறது . இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு போராளியின் வாழ்க்கை சம்பவங்களே , இப்புத்தகம் . ஆனால் அதோடு சேர்த்து பஞ்சாப் மாநிலம் என்பதன் சிறிதான வரலாறு , மக்களின் கலாச்சாரம் , சீக்கிய மதத்தின் வழிமுறைகள் , கொள்கைகள் , 2000 ஆம் ஆண்டு தொடங்கி பஞ்சாப் மக்களிடையே பரவி வரும் போதை மருந்து கொடும் பழக்கம் என்று கலவையாக பாந்த் சிங் தோழரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது . அதுவே இப்புத்தகத்தின் சிறப்பு . இந்தியாவில் இந்து மதம் அல்லாது வந்த அல்லது புதிதாக தொடங்கப்பட்ட எந்த மதமும் சரி , சாதி அடுக்குகளில் இருந்து தப்பவே இல்லை . குரு நானக் தன்னுடைய மதத்தில் தலித்துகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தும் accommodate செய்தும் காலப் போக்கில் வழக்கம் போல் தலித்துகள் ஒடுக்கப்படுவதும் , ஜாட்...