Skip to main content

Posts

Showing posts from October, 2019

THE ANATOMY OF HATE - நூல் அறிமுகம்

வெறுப்பின் உடற்கூறியல் , இப்படி மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன் . ரேவதி லால் என்னும் பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகம் இது . குஜராத் கலவரம் 2002 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று . பாசிசத்தின் தொடக்கம் அது . ஒரு மாநிலத்தில் தொடங்கிய பாசிசம் , பின்பு நாட்டின் அரசு அதிகாரமாக உருப்பெற உதவிய கலவரம் . இந்நூலின் ஆசிரியர் குஜராத் கலவரங்கள் 2002 ல் ஈடுபட்ட மூவரின் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் மூலம் இந்த வெறுப்பின் பின்னணியை அறிய முயல்கிறார் , ' சுமார் 3 வருட உழைப்பில் பல்வேறு சிரமங்கள் இடையே இந்தப் புத்தகம் உருவானது . பாரதி புத்தகாலயத்தின் வெளியீடுகளான ராணா அயூப்பின் குஜராத் கோப்புகள் மற்றும் ஸ்ரீகுமாரின் குஜராத் கலவரம் ஆகிய இரு புத்தகங்களை படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிக அதிர்ச்சிகளை தராது . மூன்று வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள் இந்தக் கலவரங்களில் எவ்வாறு பங்கெடுத்தனர் , கலவரங்களுக்கு பின்னான காலங்களில் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையே ஆசிரியர் ஆய்ந்து இருக்கிறார் . கலவரம் , மோதல் என என்னதான் சொன்னாலும் அதில் ஈடுபட்ட மக்களின் உளவியலும் , சமூக சுழல் ஆகிய கா

சர்வாதிகாரி - சார்லி சாப்ளின், தமிழில் : ஆதி வள்ளியப்பன் - நூல் அறிமுகம்

............. "பிறகு சித்திரவதை முகாம்கள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். போர்த்தந்திர வியூகம் வகுக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார். ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவரை அப்படியே விட்டுவிட்டு சட்டென்று தொலைபேசியில் பேசப் போய்விடுகிறார். தன் ஓவியம், தன் சிற்பத்துக்கு சட்டென "போஸ்" கொடுத்துக் கொண்டு நிற்கிறார். அடுத்த நிமிடம் வெளியே வந்துவிடுகிறார். இப்படியாக சர்வாதிகாரியின் ஒரு நாள் சுறுசுறுப்பாகவும் ப ரப்புரடனும் நகர்கிறது. அதேவேளை, பெரும் குழப்படியாகவும் இருக்கிறது.” மேற்கண்ட வாக்கியங்கள் படிக்கையில் உங்கள் மனதுக்கு உடனே வரும் அந்த நபரின் முகம் எப்படி இருக்கிறது? அவர் யாராக இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இதுதான் இந்தப் புத்தகத்தின் இலக்கு. அவரது சித்திரம் குறித்த உங்களின் சரியான மதிப்பீடே இந்தப் புத்தகத்தின் வெற்றி. அநேகம் பேர் சரியான நபரை உத்தேசித்திருப்பீர்கள் என்பது திண்ணம். மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை,

எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்? - நூல் அறிமுகம்

யுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம். ஆமாங்க, பாரதி புத்தகாலயம் - ஆதி வள்ளியப்பன் சூப்பர் கூட்டணி மீண்டும் ஹிட் அடிச்சுடுச்சு. புக்ஸ் பார் சில்ரனின் அடுத்த சூப்பர் டூப்பர் படைப்பு. "எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? - டாக்டர் சூஸ் அவர்களின் ஸ்ணூப்பிஸ் மொழிபெயர்ப்பு. "கரடி என என்னை யார் சொன்னது?" என்னும் சூப்பர் படைப்பு போலவே இதுவும் சூப்பர் வகையறா. ஆதி வள்ளியப்பன் நூல் தேர்வு கவனித்த க்கது. ஒரு கற்பனை கதையாடல் மூலமாக சமூக அவலங்களை சொல்வது என்பதும் அது சுவையாக சொல்வது என்பதும் அவசியம். டாக்டர் சூஸ் அவர்களின் கதை பலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான் படிக்கிறேன். ஒரே உயிரின வகைகளின் இரு வகைகளும், அதன் வகைப்படுத்துதல் காரணமும், அதனால் எழும் உயர்வு தாழ்வும், அந்த வேறுபாட்டை தனது லாபத்திற்கு பயன்படுத்தும் ஒருவரும் என அட கிட்டத்தட்ட கதையவே சொல்லிட்டேனே. இனி, நீங்க அவசியம் வாங்கி படித்துக் கொள்ளுங்க. முதல் முறையா அப்படியே அந்தப் புத்தகத்தை படித்து காண்பித்தேன் எ

நீலத்தங்கம் - இரா. முருகவேள் : : புத்தக அறிமுகம்

இந்த புத்தகத்தை யாரெல்லாம் படிக்கலாம்? கோயமுத்தூர் வாசிகள் முதலில் படிக்க வேண்டும். நம் ஊரில் என்ன நடக்கிறது அதன் பின்னணி என்ன என்பதை நாமே அறியாவிட்டால் எப்படி? அடுத்து திருப்பூர் நாகர்கோவில் வாசிகள் மற்றும் சென்னை வாசிகள். அப்புறம் என்ன, விரைவில் தமிழகமெங்கும் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக உள்ளதால் எல்லா தமிழக மக்களும். ஸ்மார்ட் சிட்டி கோதாவில் பல விஷயங்கள் நடந்து வரும் புதுச்சேரி மக்களுக்கு இந்த அபாய பின்னணி தெரியவேண்டியது அவசியம். சரி, அப்புறம் யாரெல்லாம் படிக்க வேண்டும ் என்கிறீர்களா? எப்போதும் மக்களுக்காக களம் காணும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவசியம் வாங்கிப் படித்தாக வேண்டும். களத்தில் அறிவு இன்றி எப்படி? அப்புறம் தலித் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக சொல்லி நிற்கும் கட்சியினர் அதன் உறுப்பினர்கள். ஏனென்றால் எப்போதும் பாதிப்பு அடித்தட்டு மக்களுக்கு தான் முதலில் நேரும். சரி, இவர்கள் படித்தால் மட்டும் போதுமா? தரமான குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்றும், நீர் என்பது வணிக பொருளல்ல எப்போதும் என நினைப்பவர்களும், இந்த கம்யூனிஸ்டுகள் எப்போதும் பயமுறுத்துவத

அவர்களை எப்படி அழைப்பது - நூல் அறிமுகம்

காட்டுக்குள் சென்று மரங்களை வெட்டியதால் அவர்களை போலீஸ் பிடித்து சென்றது. புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதால் அவர்கள் வீடு இடிக்கப்பட்டது. நடை பாதையில் தடை போட்டதால் கடை இடிக்கப்பட கடை வைத்தவர்கள் கைதானார்கள். இப்படித்தானே செய்திகளை கேட்டு நாம் பழகி இருக்கிறோம். அதில் என்ன தவறு நடைபாதை நடப்பதற்கு அல்லவா, புறம்போக்கு நிலத்தில் எவர் வேண்டுமானாலும் வீடு கட்டலாமா, காடுகள் அழிக்கப்பட்டு என்ன ஆகும் என்ற கேள்விகள் நம்முள் வராமலா இருக்கின்றன? இதே கேள்விதான் நம்மைப்போன்ற ஒருவர் மாமே தை காரல்மார்க்ஸ் இடம் எழுப்பினார். அதற்கு காரல்மார்க்ஸ் சொன்ன பதில் என்ன? வெறும் 20 ரூபாய்க்கு அழகிய வண்ணப் படங்களுடன் பாரதி புத்தகாலயம் பலபல வண்ணத் தாளில் தோழர் மார்க்ஸ் அவர்களின் பதிலை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிச இயக்க வரலாறு நூற்றாண்டு காலத்தில் இந்தப் புத்தகம் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் நல்வரவு. மாமேதை காம்ரேட் மார்க்ஸ் என்ன சொல்லியிருப்பார்? தோழர்களே நண்பர்களே அதை இந்த புத்தகத்தை வாங்கி தெரிந்து கொள்ளுங்கள். இந்த புத்தகத்தில் கடைசி பக்கத்தில் தோழர் மார்க்ஸ் சொல்கிறார்