Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மானுடம் மலிந்து போனதால் மதிப்பில்லாமல் போனதா?

             இதோ இன்றும் ஒரு செய்தி மதிய உணவு இடைவேளையில் நம் தொண்டையை அடைத்து உணவு இறங்க மறைத்தது. அது திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து இறந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் இது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு ஒரு உச் கொட்டுதலோடு மீண்டும் நம் வேலை பார்ப்போம். தமிழக ஊடகங்களுக்கு ஆகா, இன்றொரு செய்தி கிடைத்துவிட்டது என்ற நிம்மதி உணர்வு. இந்திய ஊடகங்களுக்கு அமிதாப்புக்கு தலைவலி வந்தால் மட்டுமே தலைப்பு செய்தி. எங்கோ ஒரு மூலையில் நேரும் குழந்தை இறப்பென்பது செய்தியல்ல.                        ஏன் இப்படி? நம் வீட்டு குழந்தை லேசாக மூக்கு உறிஞ்சினாலே பிரபல டாக்டரை பார்த்து ஒரு 200 ரூபாயை அழுதுவிட்டுதானே மறுவேலை பார்க்கிறபோது, ஒரு குழந்தை இறப்பு என்பதை, இதில் நம் இனம், நம் நாடு என்ற அடையாளங்களுக்குக் கூட விலக்கில்லாமல் நம்மால் யதார்த்தமாய் ஒரு குற்ற உணர்வு கூட வேண்டாம், குறைந்தபட்ச அனுதாப உணர்வு கூட இல்லாமல் கடக்க முடிகிறது? உணர்வு...

வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள்........

சைப்ரஸ் மரத்தால் நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பான வகையில் ஒரு பெட்டி செய்தேன், எதற்காக? அதில் பை லெடியன் என்ற எனது பெயர் குறிக்கப் பட்டிருந்தது என் வாழ்நாள் முழுவதும் ஓர் எழுத்தாளனாகவே இருந்துவிட்டேன்.. என் மூவாயிரம் கவிதைகளையும், உரைநடையையும் எழுபது பாகங்களாக நான் சேகரித்து வைத்தேன் கடைசியில் அவை அழிந்தும் தொலைந்தும் போய்விடும் என்று எனக்குத் தெரியும் இருந்தும் அவை வீசி எறியப் படக் கூடாது என்றே விரும்பினேன் எனவே அவற்றைப் பூட்டி எ ன் கவனத்திலேயே வைத்திருப்பேன். எனக்கு மகன்களோ என் எழுத்தின் மீது கவனம் கொண்டவர்களோ இல்லை என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றை என் மகளிடம் கொடுத்து என் பேரனிடம் ஒப்படைக்க விடுவதுதான்... - சீனக் கவிஞன் பை ஜூயி (கி பி 772 - 846) தமிழில்: சுந்தர்ஜி பா ங்க் ஒர்க்கர்ஸ் யுனிட்டி பத்திரிகையின் ஏப்ரல் இதழின் முகப்பு அட்டை என்னை பாதித்தபடி இருக்கிறது. மாநகரத்தின் மழை நீர் பெருகிய தெருவின் குறுக்கே, தான் நடக்கவே தள்ளாடும் மனிதர் ஒருவர் மெனக்கெட்டு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு கடக்கும் அந்தக் காட்சி (புகைப்படம்: சி சி விஜயகுமார்) எத்தனையோ சிந்த...

ஆங்கில செய்தி சேனல்கள்

நேற்று முன் தினம் ஏதேச்சையாய் TIMES NOW சேனலை ரிமோட்டில்திருப்பியபோது (அப்பாடா, அர்னாப் கோஸ்வாமி இல்லை), வழக்கம்போல ஒரு "breaking news" ஓடிக்கொண்டிருந்தது. "Democracy at low" என்ற தலைப்பிட்டு ஒருபெண்மணி கையில் மைக்கோடு கத்திக் கொண்டிருந்தார். விஷயம் இதுதான். கேரள மாநில மேதகு(!) ஆளுநர் அவர்களுக்கு சௌதி யில் இருந்து ஒருகொலை மிரட்டல் வந்ததாம். 24 மணி நேரத்திற்குள் அவர் கொலைசெய்யப்படலாம் என்று. சி.பி.எம் கேரள மாநில செயலர் தோழர் பினராயி விஜயன்மீது CBI விசாரணை நடத்த உத்தரவிட்ட அந்த அதிநியாய செயலுக்குத்தான் இந்தமிரட்டலாம். ஒரு ஆளுநர் மீது கொலை மிரட்டல் என்பது உயர்ந்த இந்தியஜனநாயகத்திற்கு எத்தனை பெரிய அவமானம் என்று திரும்ப திரும்ப அந்தபெண்மணி கிட்டதட்ட அலறிக்கொண்டிருந்தார். ஆங்கில செய்தி சேனல்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். மைக்கை கையில் வைத்துக்கொண்டு ஏன் கத்துகிறார்கள் என்பது என் சிற்றறிவுக்கு மட்டும் ஏனோ எட்டமாட்டேன் என்கிறது. என்னங்க, என்ன சொல்ல வர்றீங்க? "ஆயிலா" புயலில் வங்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கையில் அந்த மாநில முத...

கேரளா எழுப்பிய கேள்விகள்

இப்போதுதான் முதல் தடவையாய் என் குடும்பம், அண்ணனுடையது, அப்பா அம்மா என எல்லாரும் கேரள மாநிலம் குருவாயூருக்கு திருமணம் நிமித்தமாய் சென்றிருந்தோம். திருமணத்திற்கு இரன்டு நாள் முன்பே நாங்கள் அங்கிருந்தோம். திருமணம் சாக்காய் வைத்துக்கொண்டு கடவுளின் சொந்த நிலமான கேரளத்தில் சில பகுதிகளையாவது காணலாம் என்பதே எங்கள் திட்டம். திட்டத்தின்படியே முதல் நாள் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 51 யானைகள் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் புன்னத்தூர் யானைகோட்டம் சென்றோம். அப்பப்பா, அது நிச்சயமாய் பிரம்மாண்டம். முதலாவது, விலங்குகள் இருக்கின்ற இடத்தில் ஒரு வீச்சம் இருக்குமே அங்கு இல்லை. குழந்தைகள் போல் ஒவ்வொரு யானையும் பாகனோடு குளிப்பது, தின்பது என்று அட, அட. காண வேண்டும் இலட்சம் கண்கள், சீதாதேவி தன் காலுக்கு நிகரோ பெண்கள் என்று கர்நாடக கீர்த்தனை ஒன்று உண்டு. இலட்சம் கண்கள் தேவைபடாவிட்டாலும், 51ஆவது நிச்சயம் வேண்டும். உள்ளே பிரவேசிக்கும்போதே ஒரு குட்டி யானை தலையாட்டி ஆட்டி எங்களை வரவேற்றது. மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி அம்மாவின் ஆசைக்கிணங...

ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள்?

இப்போது டிசம்பர் மாதம், 1993ஆம் ஆண்டு. இடம்: பேருந்து நிலையம், அயோத்தியா நகரம். காட்சி : 8 வயது சிறுமி கிழிந்த துணி, கலைந்த தலை, கண்ணில் வெறுமை, தொலைத்த நம்பிக்கை என‌ பிச்சைக் கோலத்துடன் கையில் தட்டும், இடுப்பில் ஒரு குழந்தையோடும். சேகர் குப்தா, இந்தியா டுடே பத்திரிகையின் நிருபர் இந்தக் காட்சியை காண்கிறார். என்னவோ தோன்றி சிறுமியின் அருகில் செல்கிறார். குனிந்து சிறுமியிடம் கேட்கிறார், "உன் பேர் என்ன?". சிறுமி,ஒரு வெறுப்புடன் "ஷமீம் பானு" என்கிறாள். குப்தா: "ஏன் பிச்சை எடுக்கிறாய்?, பள்ளிக்கு செல்லலாமே". சிறுமி, "வேறு வழியில்லை, பசிக்குதே" என்கிறாள். அவளே தொடர்ந்து "நானும் பள்ளிக்கு சென்றிருந்தேனே" என்றாள். சொல்லுகையில் அவள் கண்ணில் தோன்றிய ஒளி என்னவென்று விவரிக்க இயலாததாய் இருந்தது. ஒரு கணம் நற்காலத்தின் நினைவுகள் மின்னியதாக இருக்கலாம். "அப்போதெல்லாம், என் வாப்பா என்னை அவரது பளபளவென துடைத்த சைக்கிளில் என்னை முன் வைத்தும், என் அண்ணனை பின்னாடி வைத்தும் பள்ளிக்கு கூட்டி செல்வார். வழியில் எப்படியோ என்னை தேடி வந்து என்னை முத்தமிடும் பட்...

எக்காள‌ம்

மீண்டும் அதே சத்தம் சத்தம் இம்முறை அதிகமாய் நான் எழுத உட்காரும்போதுதான் இந்த சத்தம் ரொம்ப நாளாய் இது தொடர்கிறது நானும் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் மீண்டும் மீண்டும் எக்காள‌ ச‌த்த‌ம் க‌ளுக்கு, க‌ளுக்கு என்ற‌ ஏள‌ன‌ ச‌த்த‌ம் கொஞ்ச‌ம் எழுதி கொஞ்ச‌ம் எழுதி க‌ச‌க்கி போட்ட‌வ‌ற்றையெல்லாம் தின்னு கொழுத்து, வ‌யிறு புடைத்து என்னைப் பார்த்தே எக்காள‌ முழ‌க்க‌ம் செய்கிற‌து குப்பைத்தொட்டி இதோ நான் மீண்டும் அத‌ன் வ‌யிற்றை நிர‌ப்புகிறேன் எக்காள‌ம் எழுப்ப‌ட்டும் அத‌ன் வ‌யிற்றுக்கு நான் இரையிடாத‌ அந்நாள்வ‌ரை...