Skip to main content

Posts

Showing posts with the label குழந்தைகள் உளவியல்

சஞ்சீவி மாமா - சிறார் நாவல் குறித்து

சஞ்சீவி மாமா ( இந்தியாவுக்கு நேரு மாமா … இந்த தெருவுக்கு யாரு மாமா ? ) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு . பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு . கொ . மா . கோ இளங்கோ என்றவுடன் தயக்கமின்றி உடனே அந்த புத்தகத்தை எடுத்தேன் . அன்று இரவே வாசிக்கத் துவங்கினேன் . சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும் . அப்படியான ஒரு புத்தகம் இது .   தொடரும் சாதி ஆணவக் கொலைகள் , சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு . பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம் தொடர் நிகழ்வாகிறது..   இந்நாவலின் காலம் அவ்வளவாக கக்கூஸ்கள் இல்லாத காலம் . தோட்டி என்பவர்களே மலம் அள்ளும் வாளிகளை தூக்கிக் கொண்டு திரிந்த காலம் . அப்படியான தோட்டியான சஞ்சீவி என்பவருக்கும் அக்கிராமத்தின் சிறிய ஹீரோ பேச்சிராசு என்பவனுக்கும் இடையேயான உறவே இந்நாவல் தோட்டி என்றவுடன் தோட்டியின் மகன் ...

மானுடம் மலிந்து போனதால் மதிப்பில்லாமல் போனதா?

             இதோ இன்றும் ஒரு செய்தி மதிய உணவு இடைவேளையில் நம் தொண்டையை அடைத்து உணவு இறங்க மறைத்தது. அது திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து இறந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் இது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு ஒரு உச் கொட்டுதலோடு மீண்டும் நம் வேலை பார்ப்போம். தமிழக ஊடகங்களுக்கு ஆகா, இன்றொரு செய்தி கிடைத்துவிட்டது என்ற நிம்மதி உணர்வு. இந்திய ஊடகங்களுக்கு அமிதாப்புக்கு தலைவலி வந்தால் மட்டுமே தலைப்பு செய்தி. எங்கோ ஒரு மூலையில் நேரும் குழந்தை இறப்பென்பது செய்தியல்ல.                        ஏன் இப்படி? நம் வீட்டு குழந்தை லேசாக மூக்கு உறிஞ்சினாலே பிரபல டாக்டரை பார்த்து ஒரு 200 ரூபாயை அழுதுவிட்டுதானே மறுவேலை பார்க்கிறபோது, ஒரு குழந்தை இறப்பு என்பதை, இதில் நம் இனம், நம் நாடு என்ற அடையாளங்களுக்குக் கூட விலக்கில்லாமல் நம்மால் யதார்த்தமாய் ஒரு குற்ற உணர்வு கூட வேண்டாம், குறைந்தபட்ச அனுதாப உணர்வு கூட இல்லாமல் கடக்க முடிகிறது? உணர்வு...

எரியும் பனிக்காடு படித்த பூக்குட்டி

பொதுவாகவே புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தினை அது ஏதாவது வகையிலும் ஏற்படுத்த வல்லவை. ஒரு சில நம்முள் அதிர்வுகள் ஏற்படுத்தலாம், அசைத்தும் போடலாம். சிலவே நம்மை புரட்டி போட, நம்மை முற்றாக குலைத்து விட மிகுந்த சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலானது (அநேகமாக எல்லாமும்), எளிய மக்களின் ஏழ்மையைம், அவமானங்களையும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முற்றாக சுரண்டுதலையும், சுரண்டலை, அவமானங்களை எதிர்த்து விடுதலை வேண்டி அவர்களின் கூட்டு போராட்ட நிகழ்வையும், உணர்வையுமே சொல்பவனவாக உள்ளன. சில அவ்வாறான எளிய மனிதர்களாக இருந்து பின் பெரும் தலைவர்களாக அவர்கள் மாறிய வாழ்க்கை வரலாற்றினையும், பலகோடி எளிய மனிதர்களுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்த பல புரட்சி நாயகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களாகவும், எளிய மனிதர்களின் வாழ்க்கை முன்னெடுக்க வல்ல தத்துவ நூல்களாகவும் உள்ளன. இவ்வகையான புத்தகங்களில் பலருக்கும் பலவித தேர்வுகள் இருக்கலாம். சிலருக்கு ஏன், பலருக்கும் ” மார்க்ஸிம் கார்க்கியின் அழியா காவியம் தாய் ” , நிரஞ்சனாவின் அற்புத படைப்பு “நினைவுகள் அழிவத...