ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? உங்களை கார் வாங்கி நீண்ட தூரம் டிரைவ் போக சொல்லும். சவூதி அரேபியா என்னும் அழகிய தேசத்தை ஒரு முறையேனும் முழுசாய் சுத்தி பார்த்துவிட தூண்டும். அந்த ஒட்டகப் பால் எப்படி இருக்கும், கிடைக்குமா என ஏங்க வைக்கும்? அரபி மொழி கத்துப்போமா என யோசிக்க வைக்கும். மத நம்பிக்கை இருக்கோ இல்லையா ஒரு முறை மெக்கா சென்றுவர தோணும். இறைதூதர் வாழ்க்கை வரலாற்றை படிக்க, காயல்பட்டண காற்றில் இருக்கும் வட்டார மொழி வழக்கினை சுவாசிக்க என பலவும் செய்யும். அப்படியான ரசனையான அதகளமான புத்தகமாக எனக்குப் படுகிறது, மணல் பூத்த காடு. திரைப்படம் போல மனதில் காட்சிப் படிவங்களாக எழுத்துக்களை சமைப்பதில் வல்லவராக இருக்கிறார் முகமது யூசூப், மணல் பூத்த காடு நாவலின் ஆசிரியர். எனக்கு இவரது எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது. நாவல் முழுக்கவே டிராவல்தான். சவூதி அரேபியா (17 ஆம் நுற்றாண்டு முதல் தான் சவூதி என்னும் அடைமொழி இணைக்கப்பட்டிருக்கிறது) என்னும் நாட்டின் நீள அகலத்தை, வரலாற்றை, தட்ப வெப்ப சூழலை, மக்களை படிக்க நிச்சயம் இந்த புத்தகம் உதவும். எது குறித்தும் கதையின் நாயகன் அனீசுக்கு எதிர் ...