Skip to main content

Posts

Showing posts from 2020

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங்களி

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்

தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க . சினிமா குறித்ததாகட்டும் , இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள் , எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை . எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம் , அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள் , பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880 இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல் . சும்மா எதுவும் சொல்வதில்லை , தியடோர் பாஸ்கரன் அவர்கள் . ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார் . ஆம் மக்களே , The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது . வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க . “ வெள்ளை வெள்ளை கொக்குகளா "

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற

பார்த்தீனியம் - தமிழ்நதி

ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு " பார்த்தீனியம் ". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு . அப்படியே ஷோபாசக்தி அவர்களின் " ம் ", “ கொரில்லா ", “ இச்சா " என தொடர்ந்து கூர்வாளின் நிழலில் , நீண்ட காத்திருப்பு என தொடர்ந்து இப்போது பார்த்தீனியம் . சில பெயர்கள் மறந்துவிட்டன . { ஒரு பனை ... என தொடங்கும் நூலும் இதில் அடக்கம் }. நாவல்கள் வாசிப்பில் ஒரு சுக அனுபவம் இருக்கிறது . அது நமக்காக காலங்களை கடத்தும் . கொரானா நோய் தொற்று பரவல் ஊரடங்கு என வெறுமை சூழந்திருந்த காலத்தில் பரணி , தமயந்தி , அமரநாயகம் , தனபாக்கியம் , ஜெனிபர் என பாவப்பட்ட ஈழதமிழர்களோடும் , எங்கே வானூர்தியும் ஹெலிகாப்டரும் தலைக்குமேல் பொம்ப் இடுமோ என்ற கவலையுமாக 512 பக்கங்கள் சுவாரசியமாக கடக்க செய்திட்ட எழுத்து வித்தைக்கும் , நாவல் நிகழ் காலத்தில் நம்மை காலமாற்றம் செய்தமைக்காக தமிழ்நதி பாராட்டுக்குரியவர் . 80 களில் நடக்கும் கதை களம் . இதில் எத்தனை கதாபாத்திர

நீண்ட காத்திருப்பு - அறிமுகம்

எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை . ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை . இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்காமல் நெஞ்சம் கனத்து படிக்க முடியாமல் வைக்கப்பட்ட புத்தகங்களில் இது சேராது . ஆனாலும் , ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது , இப்புத்தகம் தன்னுடைய வார்த்தைகளில் அதை பொதிந்து வைத்திருக்கிறது . ஒரு மூச்சில் படித்துவிட என்னால் முடிந்தது . போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் சிறை அனுபவமும் , விடுதலைக்கான பின்னான சில தினங்களுமே இப்புத்தகம் . இலங்கை கடற்படையின் அதிகாரி கொமடோர் அஜித் போயகொட போரில் விடுதலைப்புலிகளால் சிறைபிடிக்கப்படுகிறார் . அவரோடு அப்போரில் கைதான ஒருவர் என தொடங்கி , பின் 22 பேர் இணைகின்றனர் . சிறை வாழ்வின் ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான எந்த சிந்தனையும் இல்லை , எனினும் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை . ஆனாலும் போரில் இராணுவம் முன்னேறும் தருணங்களில் இவர்கள் சிக்கலுக்கும் , புலிகள் முன்னேறும் தருணங்களில் ஆசுவாசமும் பெறுகிறார்கள் . இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் கடைசிவரை கொமடோராகவே இலங்கை அ

வெக்க - நூல் வாசிப்பனுபவம்

முதலிலேயே சொல்லிடறேன் ஆமா, இது புத்தக விமர்சனம் அல்ல. இது மட்டுமல்ல இதற்கு முன் நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவும் இனி வருபவையும் அப்படியே. ஒரு புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன பதிய தோன்றுமோ, அதையே பதிவிடுகிறேன். (அப்பாடா..!). ரொம்ப ரொம்ப தயங்கித்தான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அஞ்ஞாடிக்கு விருதெல்லாம் கொடுத்தது தெரிந்த பிறகுமே எனக்கு தயக்கந்தான். ஏனென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னவோ தோணி புத்தகம் எடுத்தேன். ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கியவுடன் அப்புத்தகத்தை படிப்பதெல்லாம் உடனே சாத்தியப்படுவதில்லை. சில நேரங்களில் அபூர்வமாக உடனே படிப்பதும் உண்டு. அது புத்தகத்தின் அளவினை பொறுத்தது. முதல் 10 பக்கங்களை படித்து முடிப்பதற்குள் ரொம்ப சிரமாகிவிட்டது. இப்படியே இன்னும், 25 பக்கங்கள் போனால் அவ்வளவுதான். 180 பக்கமே உள்ள இந்த நாவல் மட்டுமல்ல, இனி பூமணி அவர்களுக்கு டாட்டா காட்டிவிடலாம் என்று கூட எண்ணந்தான். சென்னையை ஒட்டிய குட்டி நகரமான காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்து இதோ இனி வரும் காலமும் கூட புதுவையிலே என்றான எனக்கு அதாவது முழுக்க முழுக்க வட தமிழகத்துகாரனுக்கு தென் திசை தமி

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு

சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - நூல் அறிமுகம்

2018ஆம்த ஆண்டின் சிறப்பு கவனம் பெற்ற சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்த தோழரது அடுத்த தொகுப்பு அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்திருக்கிறது. கடந்த தொகுப்பு ஒரு கலவர சூழலில் முளைத்திடும் கதைக் களங்களாகவே இருந்தன. மூடுண்ட சமூகமான சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை, அதிர வைக்கும் உண்மைகளை எளிய வார்த்தைகளில் இவரது கதைகள் வாசகருக்கு கடத்தி நின்றன. தாழிடப்பட்ட கதவுகள் தொகுப்பினை பட ித்த எவருடைய மனநிலையும் கொதித்தே போயிருக்கும். அந்த தொகுப்பினை தொடர்ந்து இந்த தொகுப்பு. முன்னுரையில் ராஜூ முருகன் சொல்வதைப் போல இவரது கதை மாந்தர்கள் அனைவருமே எளியவர்கள். எளிய மனிதர்களின் வாழ்வியல் துன்பங்கள், அவஸ்தைகள், சாதிய முரண்கள், முகம் அறியா நேச கரங்கள் என எல்லாமும் கதை களமாக்கியுள்ளார் கரீம் இயல்பாக. ”சிதார் மரங்களில்..” முத்தாய்ப்பான ஒன்று. காஷ்மீரத்து சோபியன் பகுதியில் 8 வயது ஆசீபாவின் படுபாதகமான படுகொலை அவளது குதிரையின் வாய்மொழியாக. அடுத்து ”பூ மயில்” ஒரு திரைப்படம் போல அழகாய் விரிகிறது, அதிர்ச்சியில் முடிகிறது. ஒரு கணம் உடல் சில்லிட்டு நிற்கிறது. என்ன நடந்தது என்ற விவரணை இல

நீ கரடி என யார் சொன்னது? - நூல் அறிமுகம்

ஒரு கரடி குளிர்கால உறைபனிக்கு பாதுகாப்பாய் கொஞ்ச காலம் தூங்கி எழுந்து பார்த்தா... காட்டைக் காணோம்... அங்கே ஒரு தொழிற்சாலை இருக்கு... என்ன இடம் இதுன்னு தயங்கி தயங்கி கரடி உள்நுழைய... கரடியை கண்டு பயப்படாம வாப்பா என்ன வேஷம் போட்டுட்டு வந்தா விட்டுறவமா என வேலை செய் என தொழிற்சாலை அதிகாரி நிர்பந்தம் செய்ய... இல்லங்க, நான் கரடிதான் மனுஷன் இல்ல என கரடி கெஞ்ச.... இல்லவே இல்ல, நீ கரடி வேஷத்துல மனுசன் என எல்லா அதிகாரிகளும் கடைசியாய் முதலாளியும் சொல்ல.. குழப்பமடைந்த கரடி வேறு வழியின்றி  வேலை செய்ய.. மீண்டும் பனிக்காலம் வந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட.. கரடிக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?... அட போங்க... சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க - நூல் அறிமுகம்

செல்வா இந்த பெயர் எப்போதும் நான் ஒற்றையாய் அறிந்ததில்லை.. அடைமொழி போலவும் இனிஷியல் போலவும் எப்போதும் SFI செல்வாதான். 90களின் இறுதியில் என நான் நினைக்கிறேன். ஒரு படம். மாணவர்கள் போராட்டம் செய்தார்கள் என போலீஸ் லத்தியால் விளையாடி அவர்களை வேனில் தூக்கி போடும் ஒரு போட்டோ. வேறெங்கு தீக்கதிரில் தான். அப்படித்தான் எனக்கு செல்வா அறிமுகம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் போராடி மண்டை ஒடைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் செல்வா என்ற செய்தி. மீண்டும் தீக்கதிரில்தான ். இப்படியாக எப்போதும் களத்தில் நிற்கும் ஒரு தோழர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்றால், எப்படி இருக்கும் என்ற திரில் ஒரு பக்கம், ரமேஷ்பாபு என்னும் மூத்த SFI தோழரின் "பிறிதொரு பொழுதில்" என புத்தகம் வாசித்த பரவசம் ஒரு பக்கம் என உடனே சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன், “எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க" புத்தகம். வாசகசாலை வெளியீடு. மெரினா எழுச்சி என்னும் சிறு பிரசுரத்திற்குப் பின் இப்புத்தகம். நிச்சயமாக சொல்வேன், களத்தில் நிற்பது மட்டுமல்லாது தீராத வாசிப்பும் ஒரு போராளிக்கு தேவை

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - நூல் அறிமுகம்

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - கருப்பு பிரதிகள் வெளியீடு. 2010. அழகிய பெரியவன் அவர்களின் குறுநாவல்கள் கொண்ட அழகிய படைப்பு. 2010 வெளியீடு. எளிய மனிதர்களின் வாழ்வு அப்படியே அச்சு அசலாய் எழுத்தில் பதிந்துள்ளது. எங்கும் சினிமாத்தனம் இல்லை. ஒரு சிறு விபத்தும் அப்படியே முற்றாக கலைத்து விடுகிறது வாழ்க்கையை. ஆனாலும் வாழ்வதற்கான வேட்கையை விடுவதில்லை அவர்கள். எத்தனை அவலத்துக்குரிய பொழுதிலும் அன்புக்குரிய ஆதரவு ஒன்று அகப்பட்டுவிட்டால் அதன் நிமித்தம் வாழ்வை எப்படியாவது கடத்திவிட ந ினைக்கும் மனங்கள். இயல்பான பேச்சு நடை கொண்ட கதை என்றாலும் அழகிய பெரியவன் தன்னுடைய எழுத்து வலிமையை ஆங்காங்கே விவரிக்க பயன்படும் சிறு தருணங்களில் தவற விடுவதில்லை. 2010ல் எழுதப்பட்ட கதை களங்கள் அப்படியொன்றும் இப்பொழுது மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகமயம் எளிய மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தியுள்ள கோர யுத்தம் இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைக் களங்களை விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன். கருப்பு பிரதிகள் அப்பொழுதே புத்தக வடிவமைப்பில் சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எழுத்துப் பிழையே இல்லை எனலாம். அழகிய அட

My Brigadista Girl - நூல் அறிமுகம்

கம்யூனிஸ புரட்சி நடைபெற்று விடுதலை அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும் புரட்சி அரசு நடத்திய முதல் அரசியல் நிகழ்வு ”அனைவருக்கும் கல்வி”. ரஷ்யா தொடங்கி கியூபா வரையிலும் அதுவே முக்கிய முதல் நிகழ்வு. அதிலும் கியூபாவின் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டமும் செயலாக்கமும் வியப்பளிப்பவை, அனைவருக்கும் உதாரணமாக விளங்க கூடியவை. விடுதலை கிடைக்கின்ற போது வெறும் 40 சதம் மட்டுமே இருந்த அந்நாட்டின் எழுத்தறிவு புரட்சி நடைபெற்ற ஓராண்டில் – ஒன்றரையாண்டில் 100 சதமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தன் நாட்டு குடிகள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றிய உலகின் முதல் நாடு கம்யூனிச கியூபா. இது எப்படி சாத்தியம் ஆனது என்பது மிக சுவாரசியமான உண்மைக் கதை. வாருங்கள் நம் நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாமல் ஆக்குவோம் என அழைத்த தோழர் பிடலின் குரலுக்கு அந்நாட்டின் இளைஞர்கள், மாணவ மாணவியர் என எல்லாரும் தயாராயினர். WE SHALL PREVAIL என கோஷம் முன்வைக்கப்பட கியூப தலைநகராம் ஹவானாவில் 50000 பேர் கையில் புத்தகத்தோடும், 10 அடி உயர மாடல் பென்சிலோடும், ஆம் நாங்கள் வெல்வோம் என பாடிய

பணிக்கரின் பேத்தி - ஷர்மிளா சய்யித் --- நூல் அறிமுகம்

வாழ்வாங்கு வாழ்தல் என்று சொல்வார்கள். அது சிலருக்குத் தான் அமையும் என்பார்கள். வாழ்வாங்கு வாழ்தல் என்பது குறித்து பலருக்கும் பல புரிதல் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். நான் அப்படி வாழ்வாங்கு வாழ்ந்த (என் புரிதலில்) ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து ரசித்தேன். ஷர்மிளா சய்யித் அவர்களின் "பணிக்கரின் பேத்தி" படித்ததை தான் சொல்கிறேன். பெரு தனக்காரரின் பரம்பரையில் பிறந்து பின் எல்லாம் இழந்து இளம் வயதிலேயே வறுமை பற்ற, பின் தன் அயராது உழைப்பினால் ஓரளவிற்கு ஒரு நிலைக்கு வந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தியின் வாழ்வே பணிக்கரின் பேத்தி. விடாத உழைப்பு, அதற்கான ஒரு பெரு முயற்சி அவை நல்கும் தளராத நம்பிக்கை என இனிதாய் கடக்கிறது வாழ்க்கை. உழைப்பது என்பது நேர்ந்து விட்ட ஒன்றாக முதலில் அமைந்து பின் அது ரசிக்கத்தக்க ஒன்றாக மாறி ஒரு கட்டத்தில் போதையாகவே மாறி போகிறது போல பலருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அவர்கள் மகன்கள் வாழ்வில் செட்டில் ஆகி விட்ட பிறகும் இன்னும் வீட்டுக்கு வீடு பால் ஊற்றும் தொழிலை விடவில்லை. கேட்டால், இது தொழிலப்பா என்பார். இது தொழிலா, ஒரு போதையா

சினிமா கொட்டகை - நூல் அறிமுகம்

சில நூல்களுக்கு அதன் ஆசிரியர் பெயர் ஒன்றே போதும், அந்நூலினை கையில் எடுப்பதற்கு. என்னை பொறுத்தவரையில் அப்படியான பெயர் தியடோர் பாஸ்கரன் என்பது. அதிலும் அவர் சினிமாவைப் பற்றி எழுதுகிறார் என்றால் எனக்கு ஏதும் தயக்கம் இருப்பதில்லை. அப்படியான ஒரு நூல் தான் நான் சமீபத்தில் வாசித்த சினிமா கொட்டகை. சினிமா என்னும் கலை தமிழகத்தில் வந்த புதிதில் அக்கலை பெற்ற வரவேற்பு வியக்கத்தக்கது. மௌன மொழியில் குறும்படங்களாகவே நிறைய வந்துள்ளதாகவும், அவைகளுள் சிலவை பற்றி மட்டுமே குறிப்புகள் கிடைத்துள் ளதாகவும் என்பதான பல புதிய செய்திகள். வெறும் மௌனப் படங்களை பற்றி மட்டும் பேசாமல், திரைக்கலை நமது சமூகத்தின் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், தேவதாசியரை விடுவித்த செய்தி குறித்தும் நிறைய நிறைய தகவல்கள். யமுனா ராஜேந்திரன் அவர்களோடு தியடோர் பாஸ்கரன் நடத்தும் உரையாடல் பகுதி மிக நன்றாக வந்திருக்கிறது. சினிமா என்னும் கலை வரவு குறித்த அரசியல் வாதிகள் நிலைபாட்டில், காந்தி மற்றும் ராஜாஜி அவர்கள் எதிர்நிலைப்பாட்டை எடுக்க, மாமேதை லெனின் அவர்களோ இக்கலை மிக முக்கியமானது, இதை வலுப்படுத்த வேண்டும் என