Skip to main content

Posts

Showing posts from October, 2009

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன் (பாகம் ‍ 2)

இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். ......... ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது. "நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" ‍ இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில்

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்