Skip to main content

Posts

Showing posts from February, 2021

DESPITE THE STATE - நூல் அறிமுகம்

  Despite the state. கடந்த 15-20 நாட்களாக ஒரே புத்தகத்துடன் சுற்றி வருகிறேன் . உலகமயத்திற்கு பின்னான இந்தியாவில் எப்படி மாநிலங்களில் "state” அதாவது அரசு என்னும் identity என்ன role play செய்கிறது என்ற ஆய்வும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளும் கருத்துக்களுமே இந்நூல் . இயக்கங்களில் இருப்பவர்கள் இப்புத்தகத்தை படித்தால் நல்லது . ஏனெனில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் rhetoric வசனங்களின் பின்னே இருக்கும் வெறுமையும் , நாம் எதிர்பாராத திசையில் ஒளிந்திருக்கும் உண்மைகளும் , கண் முன்னே நடந்தாலும் ஒரு மூடு திரை நம் கண் முன் ஒரு மகத்தான உண்மைநிலையை மறைப்பதை கண்டுணர முடியும் . மிசோரம் , ஒரிசா , பீகார் , தமிழ்நாடு , பஞ்சாப் , குஜராத் என இந்த மாநிலங்களுக்கு சென்று அங்கே நடப்பவைகளை கண்டுணர்ந்து பிரச்சனைகளின் தன்மையை உணர stakeholders எனப்படுவோரை பேட்டி கண்டும் தான் வாசித்தவற்றில் இருந்தும் சில உண்மைகளை கண்டடைவது என அசல் ஆய்வினை நடத்தியுள்ளார் இப்பத்திரிகையாளர் . இது தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் சொல்கிறேன் , மீடியாக்களில் விவாதத்தை சரிவர நடத்துபவர்கள் மட்டுமே பெரிய பத்திரிகைய