Skip to main content

Posts

Showing posts with the label நூல் குறித்து

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்

தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க . சினிமா குறித்ததாகட்டும் , இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள் , எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை . எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம் , அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள் , பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880 இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல் . சும்மா எதுவும் சொல்வதில்லை , தியடோர் பாஸ்கரன் அவர்கள் . ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார் . ஆம் மக்களே , The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது . வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க . “ வெள்ளை வெள்ளை கொக்குகளா ...

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க - நூல் அறிமுகம்

செல்வா இந்த பெயர் எப்போதும் நான் ஒற்றையாய் அறிந்ததில்லை.. அடைமொழி போலவும் இனிஷியல் போலவும் எப்போதும் SFI செல்வாதான். 90களின் இறுதியில் என நான் நினைக்கிறேன். ஒரு படம். மாணவர்கள் போராட்டம் செய்தார்கள் என போலீஸ் லத்தியால் விளையாடி அவர்களை வேனில் தூக்கி போடும் ஒரு போட்டோ. வேறெங்கு தீக்கதிரில் தான். அப்படித்தான் எனக்கு செல்வா அறிமுகம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் போராடி மண்டை ஒடைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் செல்வா என்ற செய்தி. மீண்டும் தீக்கதிரில்தான ். இப்படியாக எப்போதும் களத்தில் நிற்கும் ஒரு தோழர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்றால், எப்படி இருக்கும் என்ற திரில் ஒரு பக்கம், ரமேஷ்பாபு என்னும் மூத்த SFI தோழரின் "பிறிதொரு பொழுதில்" என புத்தகம் வாசித்த பரவசம் ஒரு பக்கம் என உடனே சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன், “எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க" புத்தகம். வாசகசாலை வெளியீடு. மெரினா எழுச்சி என்னும் சிறு பிரசுரத்திற்குப் பின் இப்புத்தகம். நிச்சயமாக சொல்வேன், களத்தில் நிற்பது மட்டுமல்லாது தீராத வாசிப்பும் ஒரு போராளிக்கு தேவை...

சினிமா கொட்டகை - நூல் அறிமுகம்

சில நூல்களுக்கு அதன் ஆசிரியர் பெயர் ஒன்றே போதும், அந்நூலினை கையில் எடுப்பதற்கு. என்னை பொறுத்தவரையில் அப்படியான பெயர் தியடோர் பாஸ்கரன் என்பது. அதிலும் அவர் சினிமாவைப் பற்றி எழுதுகிறார் என்றால் எனக்கு ஏதும் தயக்கம் இருப்பதில்லை. அப்படியான ஒரு நூல் தான் நான் சமீபத்தில் வாசித்த சினிமா கொட்டகை. சினிமா என்னும் கலை தமிழகத்தில் வந்த புதிதில் அக்கலை பெற்ற வரவேற்பு வியக்கத்தக்கது. மௌன மொழியில் குறும்படங்களாகவே நிறைய வந்துள்ளதாகவும், அவைகளுள் சிலவை பற்றி மட்டுமே குறிப்புகள் கிடைத்துள் ளதாகவும் என்பதான பல புதிய செய்திகள். வெறும் மௌனப் படங்களை பற்றி மட்டும் பேசாமல், திரைக்கலை நமது சமூகத்தின் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், தேவதாசியரை விடுவித்த செய்தி குறித்தும் நிறைய நிறைய தகவல்கள். யமுனா ராஜேந்திரன் அவர்களோடு தியடோர் பாஸ்கரன் நடத்தும் உரையாடல் பகுதி மிக நன்றாக வந்திருக்கிறது. சினிமா என்னும் கலை வரவு குறித்த அரசியல் வாதிகள் நிலைபாட்டில், காந்தி மற்றும் ராஜாஜி அவர்கள் எதிர்நிலைப்பாட்டை எடுக்க, மாமேதை லெனின் அவர்களோ இக்கலை மிக முக்கியமானது, இதை வலுப்படுத்த வேண்டும் என...

The River of Kaveri – Tulika Publishers.

The River of Kaveri – Tulika Publishers. சமீபத்தில் வாங்கிய புத்தகம். புத்தகத்தின் பக்கங்களில் ஒரு புறம் வரிகளில் வார்த்தைகள் தைத்து நிற்க, மறு புறம் வெறும் வரிகளாக படங்கள் வண்ணங்கள் சேர்க்கவென்று உள்ளன. குழந்தைகளை சுவாரசியப்படுத்த இப்படி ஒரு ஏற்பாடு. அபிகுட்டி ஒரே மூச்சில் படித்து அப்பா நம்ம காவேரியோட ஆரிஜின் (origin) மற்றும் endplace இரண்டுக்கும் போயிருக்கிறோம் என சந்தோஷப்பட, கீர்த்தனா குட்டியோ, சீரங்கம், காரைக்கால் பேரெல்லாம் வருது, தலைகாவிரி கூட வருதுப்பா என அவள் பார்த்த ிருந்த ஊர்கள் என அவளும் ஹாப்பி அண்ணாச்சி. கொஞ்சம் அச்சத்தோடேதான் வாங்கினேன், காவிரியின் கதை என்று சொல்கிறார்களே, வெறும் புவி சார்ந்து தகவல்களாக பாடப்புத்தகம் போல் இருக்குமோ என்று. அப்படியெல்லாம் இல்லை, காவிரியின் சார் உள்ள கதைகள் அநேகமும் அதன் இயல்பில் இருக்கு. அப்படியே நைசாக புவிசார் தகவல்களும் இருக்கிறது. ஒரு ஆறு அதன் கதை என்ற வகையில் இந்தப் புத்தகம் சிறப்பு. ரொம்ப அழகா, சிம்பிளா காவிரியின் பிறப்பிலிருந்து அவள் கடல் சென்று சேரும் வரை MAP இருப்பதும் அது எளிமையாக இருப்பதும் சிறப்பு.

வாழும் மூதாதையர்கள் - தமிழகப் பூர்வகுடி மக்கள் அறிமுகம்

இரண்டு முக்கிய முன்முடிவுகள் உடைபடுவதில் இருந்து "வாழும் மூதாதையர்கள்" நூல் தொடங்குகிறது. “காட்டில் இருந்து அவர்களை சமதளத்தில் இறக்கி அவர்களை நாகரிகமயப்படுத்த வேண்டும்" என்ற குரலில் ஒரு அபத்தம் இருப்பது இப்புத்தகம் படிக்கையில் தெரிய வரும். அதே சமயம் "மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே " என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.  நூலாசிரியரின் இந்தக் கவலையே இப்புத்தகத்தில் தமிழக பழங்குடிகள் குறித்த ஒரு விரிந்த அறிமுகத்தை தமிழ் சமூகத்திற்கு செய்கிறது என புரிந்துகொள்ளலாம். பழங்குடிகள் குறித்த அறிவாக தமிழ் சமூகத்தில் என்ன இருக்கிறது?! பழங்குடிகள் அநாகரிகமாக சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரிகமாக காட்டுவாசிகள் என்பதாக சொன்னாலும் அவர்கள் அறிவற்ற மூடர்கள், விதி வந்ததே வாழ்க்கை என வாழ்பவர்கள், சமதள மக்களிடம் பயந்து இருப்பவர்கள், ஆபத்தானவர்கள், நாகரிக வாழ்வு குறித்த எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள் என்பதாக இருப்பதாக கொள்ளலாம். இவை அத்தனையும் பொய் என்பதனையும் அவர்களும் முன்னேற்றம் ...

Nine Rupees an hour - disappearing livelihoods of Tamilnadu - நூல் விமர்சனம்

Nine Rupees An Hour – disappearing livelihoods of Tamil Nadu. இந்நூலின் ஆசிரியர் அபர்ணா கார்த்திகேயன் . இவர் பி . சாய்நாத் அவர்களின் மாணவி . இப்போதே ஊகித்திருப்பீர்கள் தானே ! ஆமா , இந்த நாட்டின் எளிய மனிதர்களும் அவர்களது வாழ்வும் , தொழிலும் அவர்கள் கலையும் தான் பேசுபொருள் . நூலின் அடிசரடாக இருக்கும் விஷயங்கள் எளிய மனிதர்களின் அயராத உழைப்பும் அந்த உழைப்பை உழைப்பாகவே அங்கீகரிக்காத பாங்கும் , அதை appropriate செய்யாத பொருளாதார பயன்களும் - பரம்பரை பரம்பரையாக பார்த்து வரும் தொழிலை தனக்குப் பின்னே கடத்த விரும்பயும் கடத்த துணியாத வாழ்வு நிச்சயமற்ற சூழல் - தனித்திறன் கொண்ட தொழில்கள் , அவைகளால் கிடைக்கும் அங்கீகாரம் ஆனால் வாழ்வு ஏற்றம் பெறாத பொருளாதாரம் என்பவனவே . அதே போல , ஏழை எளியர்களின் நாட்டுப்புறக் கலைகள் எனப்படும் அவர்களின் கலைஞானமும் , அக்கலைஞர்களின் அன்றாட வாழ்வும் அக்கலைகளுக்கும் அக்கலைஞர்களுக்குமான சமூக placing என்பனவும் இந்நூலில் பேசுபடு பொருளாக இருக்கிறது . இந்தியாவெங்கும் போலவே தமிழகத்திலும் விவசாயம் தொடர்து நட்டம் தரும் தொழிலாக மாறி அத்தொழிலின் பங்குதாரர்கள்...

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தாழிடப்பட்ட கதவுகள் - நூலினை குறித்து

தாழிடப்பட்ட கதவுகள் , தமிழ் சிறுகதை நூல் வரிசைகளில் நல்லதொரு வரவு . 25 ஆண்டு கால கோவை கலவரங்களின் பின்னணியில் எழுந்து வரும் அடுத்த படைப்பு . ஒவ்வொரு கலவரம் எனப்படுவையும் அந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது. கோவை கலவரமும் அப்படியே . இந்துத்துவ தீய சக்திகள் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போட்டியில் பெரும்பான்மையான இந்துக்களை அதுநாள் வரை இணக்கம், சகோதரத்துவம் பாராட்டியிருந்தவர்களை சிதைத்து எதிரிகளாக மாற்றுவது கோவை, குஜராத், மும்பை என நெடுக நடந்திருக்கிறது. தாழிடப்பட்ட கதவுகள். கதவுகள் என்றிருந்தாலும் அவை திறந்திருக்கும்போதுதான் அங்கே மகிழ்ச்சி, இயல்புத்தன்மை இருப்பதாக தமிழ்ச்சமூகம் நம்புகிறது என நினைக்கிறேன். ஒரு வீடு தாழிட்டு இருந்தால் அங்கே ஏதோ சரியில்லையோ என சந்தேகிக்க வைப்பதும் உண்டு. இன்று அந்த நிலையில்லை. ஆனால், ஒரு 20 வருடங்கள் முன்பெல்லாம் வீடுகளின் கதவுகள் பகல் முழுவதும் திறந்தே இருக்கும். அவ்வகையில் தாழிடப்பட்ட கதவுகள் என பெயர்க்காரணமும் சிறப்பே. மரணங்கள் எல்லாக் கதைகளிலும். மரணங்கள் கலைத்...