Skip to main content

Posts

Showing posts from July, 2021

மயானக்கரையின் வெளிச்சம் - நூல் அறிமுகம்

மௌனத்தின் சாட்சியங்கள் என்னும் நாவலிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சிறுகதை தொகுப்புடன் தோழர் சம்சுதீன் ஹீரா. முதலில் வாழ்த்துகள் தோழர். 2001-2002 காலக்கட்டத்தில் நான் உதகையிலிருந்து சனி ஞாயிறு விடுமுறைக்காக விஜயா பதிப்பகம் செல்லும்போதும் என்னை தொந்தரவு செய்தது அந்த தெரு முனையில் மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி நின்ற அதிரடிபப்டைவீரர்களின் அந்த செக் போஸ்ட் தான். மத கலவரங்கள் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அந்த இடைப்பட்ட காலத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாத காலத்தும் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் குறுகுறு என பார்த்தப்படி நின்றிட்ட அக்காவலர்கள் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவனான என்னையே தொந்தரவு செய்திடுகையில் சிறுபான்மை மதத்தினருக்கு எத்தகையதொரு கடும் அவஸ்தையாக இருந்திருக்கும்!! அந்த உளவியல் தலையீடு இருக்கிறதல்லவா அதிலிருந்து தொடங்குகிறது சிறுபான்மை மதத்தினருக்கான அவஸ்தையும், அவமானமும். இது சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல, ஒடுக்கபப்ட்ட மக்களுக்கும் தான். காலம் காலமாக எங்கு குற்றம் நடந்தாலும் எந்தவித தடயமும் கிடைத்திராக காலத்தும், முகாந்திரம் ஏ

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி - அ. கரீம்

பு த்தக கண்காட்சியில் பிப்ரவர் மாதம் வாங்கியது. அப்படியே தினமும் என்னைப் படி படி எனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அது சரி, இது போன்ற இன்னும் சில புத்தகங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, அதற்கு என்ன செய்ய இயலும்? எழுத்தாளருக்கு எழுத்து வர ஒரு mood தேவைப்படுவது போல வாசகருக்கும் வாசிக்க ஒரு mood தேவைப்படுகிறது. அப்படியான ஒரு மூடில் வாசிக்கத் துவங்கி ஒரே மூச்சில் முடித்த புத்தகம் தான் நண்பர் தோழர் அ. கரீம் அவர்களின் 'அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி'.   நான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த எதிர்ப்பார்ப்பை, சிதார் மரங்கள்... தாண்டி அகல்யாவுக்கும் ஒரே ரொட்டி அப்படியே தக்க வைத்துள்ளது. அதே வார்த்தைகளின் எளிமை, எளிய மனிதர்களின் வாழ்வு கூடியவரைக்கும் அச்சு அசலாய், தேவையற்ற வார்த்தைகள் திணிப்பு என இல்லாமல் சிறப்பாய் இருக்கு இத்தொகுப்பும் என சொல்லலாம்.    முதலிலேயே சொல்லிவிடுகிறேன் அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, பஷீரின் கடைசி கிடாய், அன்பே ஆசியா... என இவை மூன்றோடு எம்ஜ

ராஜ வனம் மற்றும் காடர் - நூல் அறிமுகம்

ராஜ வனம்   இத்தோடு அநேகமாக நான்கு அல்லது ஐந்து வனம் குறித்த நூல்களை வாசித்திருக்கிறேன். லஷ்மி சரவணக்குமாரின்{?} ஒரு புலி பற்றிய நூல், அருமைத் தமிழின் சொந்தக்காரர் என் பிரியத்துக்குரிய நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி என்னும் classic, சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த பிரசாந்த் வே அவர்களின் சிறுகதை தொகுப்பான காடர் என்பதைத் தொடர்ந்து ஒரு வனம் குறித்த சிறுகுறுநாவல்.   வறீதையா கானஸ்தந்தின் அவர்களின் மொழியை படித்தவர்களுக்கு அதுவும் அவரது சமீபத்திய குமரி நிலப்பகுதி எழுத்தாளர்களின் (மீனவ சமூகத்தின்?) சிறுகதைகளை வாசித்ததன் மூலம் ஓரளவு நாஞ்சில் நாட்டு dialect எந்த பிரச்சனையும் இல்லாம சமாளிச்சுருலாம் என நினைத்தே ராஜவனம் எடுத்தேன்.   ஆனா அப்படி எல்லாம் இல்ல. இது கொஞ்சம் இன்னமும் மெனக்கட வேண்டி இருந்தது. ஆனாலும் சுகமான அனுபவம். மலையாளம் தமிழும் கலந்து திரிந்து ஒருவித இசைக்கோர்வையாக வரும் நாஞ்சில் நாட்டு வட்டார மொழி வழக்கு பிரமாதம், மயக்குகிறது. அநேகமாக காடுகளை களமாக கொண்டு எழுதுபவர்களால் வனங்களின் அந்த தாவர வளம், வகைகள், விலங்கு வகையினம், மண் வளம் என்பனவற்றின் மீது ஒரு மையல் கொள்ளாமல் எழுத முடியவில்லை