Skip to main content

Posts

Showing posts from September, 2021

லால் சலாம் - நூல் அறிமுகம்

வணக்கம் தோழர் லெனின் அவர்களே! யார் சொன்னது நீங்கள் இறந்துவிட்டதாக? இறந்த பின்னாலும் அவரது செய்கைகளின் மூலமாக நினைக்கப்படுகிற மாமேதைகளில் ஒருவராக நீங்கள்! இப்படி ஆரம்பித்து பாய்ச்சல் வேகத்தில் ஒரு 32 பக்கங்களில் ஒரு மாமேதையின் வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளையும் வெகு சுவைபட சொல்லி நிற்கும் புத்தகம் இது. அநேக வகைகளில் வாழ்க்கை வரலாறுகள் நாம் படித்திருப்போம். அறிஞர் சாமிநாத சர்மாவின் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு தொடங்கி எண்ணற்றோரின் வாழ்க்கை வரலாறு ஆக்கங்கள் நாம் வாசித்திருப்போம். குறிப்பாக தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்களின் statistics வகை, தோழர் அருணன் அவர்களின் அழகிய தமிழ் வகை, சமீபத்தில் தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய சிறார்களுக்கான மார்க்ஸ் லெனின், தோழர் சுப்பாராவ் அவர்களின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் பல வகைகளில் ஏராளனமானவற்றை படித்திருப்போம். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எழுதப்படும் தலைவரையே விளித்து அவருடன் பேசும் வகையிலான என மாறுபட்ட வகை வாழ்க்கை வரலாறு இது. என்னவென எழுதுவது வாசிப்பு அனுபவத்தை? ஒரு 3d பிம்பமாக ஹாலோகிராம் வடிவில் காம்ரேட் லெனின் அவர்கள் முன்