Skip to main content

Posts

Showing posts from November, 2019

Dear Mrs. Naidu - என் வாசிப்பு அனுபவத்தில்

குழந்தை இலக்கியம் குறித்து கருத்து சொல்லவெல்லாம் நான் இல்லை . இருந்தாலும் கடினமாக வார்த்தைகளை , தொடர் சங்கிலிகளாக வாக்கியங்களை அமைத்தல் என்பதை SMS காலத்தில் குழந்தைகள் பெரிதும் விரும்புவதில்லை என்பது என் கணிப்பு . இவையெல்லாம் தாண்டி வாசிக்க வைக்க வேண்டுமென்றால் , ஒன்று அவை சித்திரக்கதையாக இருக்க வேண்டும் அல்லது விஷ்ணுபுரம் சரவணின் வாத்து ராஜா போல் மிகவும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் . என் வீட்டில் அப்படித்தான் , இப்படியே எங்கும் என நான் சொல்லவில்லை . என் அனுமானம் படியே Dear Mrs. Naidu இருக்கிறது . 12-13 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் எளிதாக படிக்கக் கூடிய புத்தகம்தான் . பெங்களூர் மாநகரில் ஒரு ” காக்கா முட்டை ” குழந்தை . பெண் குழந்தை . 12 வயதான சரோஜினி . அவள் தன் பள்ளியில் கொடுக்கப்பட்ட பிராஜெக்ட்களில் ஒன்றாக ஒரு பிரபலத்திற்கு கடிதம் எழுதுகிறாள் . அது ஆன்னி மிஸ்ஸால் கொடுக்கப்பட்டது . சுற்றுச்சுவர் , கேட் போன்றவை இல்லாத வழக்கமான அம்பேத்கர் கார்ப்பரேஷன் ஸ்கூலில் பிராஜெக்ட் கொடுப்பது என்றால

பதிமுகம் - நூல் அறிமுகம்

நீங்கள் கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கடைசியாக படித்த நாவல் வந்து எத்தனை வருடமிருக்கும் ? அந்த வாழ்வியல் அழகில் மயங்கி சொக்கி நின்ற தருணங்களும் அந்த நாவலின் / கதையின் நாயக நாயகிகள் பெயர்களும் உங்களோடு இன்னும் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது தானே ! ஆமாம் அதே போன்று ஒரு அழகியல் பயணத்திற்கு தயாராகுங்கள் . பாரதி புத்தகாலயம் அதற்கான தருணத்தை உண்டாக்கி இருக்கிறது . " பதிமுகம் " என்னும் கோ . செழியன் அவர்களின் குறுநாவலை வெளியிட்டுள்ளது . இதில் மிக முக்கியமானது இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாவரும் இடது சாரி மாணவர் இயக்கத்தை சார்ந்தவர்களே ! ஒரு சிட்டிங்கில் படித்து முடித்தேன் . அப்படியாக நான் கடைசியாக படித்து முடித்த நாவல் பூமணி அவர்களின் " வெக்கை ". அதற்குப் பிறகு பதிமுகம் தான் . கதைக்களம் கேரள தமிழக மாநிலங்களில் எல்லைப் பகுதியில் . பேசும் பொருள் கேரள மாநில மாணவர் சங்க செயல்பாடுகளைப் பற்றி . ஏன் கேரளம் ? இது என்ன கேள்வி , இடதுசாரி அரசியல் என்றாலே கேரளம் தானே . கேரள இடதுசாரிகள் அழகியல் மிகுந்தவர்கள் , உணர்வு மிக்கவர்கள் என்பதில் கேள்வி இருக்க

நிழல் இராணுவங்கள் - இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் - நூல் அறிமுகம்

இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்? எங்கள் மீது அவர்களுள் இத்தனை வன்மமா? இந்த வன்மம் திடீரென்று அவர்களுள் வந்துவிட்டதா, இல்லை அந்த வன்மம் அவர்கள் மனதில் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது, இப்போது திடீரென்று பொங்கியதா? அவர்களின் இத்திடீர் வன்மம் ஏற்பட நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? – கலவர பூமிகளில் பாதிக்கப்பட்ட வா ழ்விழந்த மத சிறுபான்மையினர்களின் கேள்விகள் தான் இவை. இங்கே இந்திய திருநாட்டில் பெரும்பாலும் கலவரங்களின் பொது இரை இஸ்லாமியர்களே. எப்படி இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு மீதான மத துவேஷத்திற்கு இரையானார்கள்? இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 90 சதமானமாக இருக்கும் இந்து மக்களுக்கு வெறும் 5.3 சதமானம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களின் மீதான பயம் ஏன்? ஆர்.எஸ்.எஸ் ஒரு டிசிப்பிளின் சொல்லிக் கொடுக்கிற, தேசபக்தியை ஊட்டுகிற ஒரு அமைப்பு, அவ்வளவே. அதை போய் நாட்டில் நடக்கிற கலவரங்கள் பலவற்றிற்கும் பங்காளிகள் ஆக்குவது சரியா? ஆங்காங்கே தீவிரவாத குணம் கொண்ட இந்து அமைப்புகள் சில செய்யும்