அது ஒரு கடற்கரையோர கிராமம். இந்தியாவின் தென் எல்லையில் கடைகோடியாய் இருந்த சுவடு தெரியாமல் இருந்திட்ட கிராமம் அது. தனது சிறு சிறு தேவைகளுக்கு தொடங்கி வாழ்வாதாரம் வரைக்கும் கடலையே துணையாக கொண்டிருந்த ஒரு மீனவ சமூகத்தினரே பெரும் சதவிதம். அங்கு ஒரு குட்டி பெண் மேரி…குட்டிப் பெண் மேரிக்கும் அந்த கிராமமே சொர்க்கம். அங்கு கிடைக்கும் கூரியன் கடையின் பழம்பொரி, நீண்டு வளர்ந்திருந்த தென்னை பன மரங்கள்.. கடலில் தினம் எழும் சூரியன் என அவ்வளவும் அந்த கிராமத்தில் கிடைத்திருந்தது அவளுக்கு. அப்படியான மகிழ்ச்சியான ஒரு நாளில்தான் அக்கிராமம் பரபரப்பாகி ஊர் முழுக்க ஒரே பேச்சாக இருந்தது. அது “இங்கிருந்து வானுக்கு ராக்கெட் விட போறாங்களாம்..” என்பதே அது. ஆம் சுதந்திரம் பெற்று 16 வருடங்களே முடிந்திருக்க தும்பா என்னும் அழகிய குக்கிராமத்திலிருந்து ராக்கெட் விட முடிவு செய்தது அரசு. அப்பொழுதிலிருந்து தொடங்கி அந்த கிராமம் ராக்கெட் ஏவுதளமாகும் வரை நடப்பதாக விஷயங்களை வடிவமைத்து இந்தியாவின் முதன் முதல் ராக்கெட் ஏவிய அந்த ஆச்சர்ய கணத்தை குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். ...