Skip to main content

Posts

Showing posts from 2012

மானுடம் மலிந்து போனதால் மதிப்பில்லாமல் போனதா?

             இதோ இன்றும் ஒரு செய்தி மதிய உணவு இடைவேளையில் நம் தொண்டையை அடைத்து உணவு இறங்க மறைத்தது. அது திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து இறந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் இது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு ஒரு உச் கொட்டுதலோடு மீண்டும் நம் வேலை பார்ப்போம். தமிழக ஊடகங்களுக்கு ஆகா, இன்றொரு செய்தி கிடைத்துவிட்டது என்ற நிம்மதி உணர்வு. இந்திய ஊடகங்களுக்கு அமிதாப்புக்கு தலைவலி வந்தால் மட்டுமே தலைப்பு செய்தி. எங்கோ ஒரு மூலையில் நேரும் குழந்தை இறப்பென்பது செய்தியல்ல.                        ஏன் இப்படி? நம் வீட்டு குழந்தை லேசாக மூக்கு உறிஞ்சினாலே பிரபல டாக்டரை பார்த்து ஒரு 200 ரூபாயை அழுதுவிட்டுதானே மறுவேலை பார்க்கிறபோது, ஒரு குழந்தை இறப்பு என்பதை, இதில் நம் இனம், நம் நாடு என்ற அடையாளங்களுக்குக் கூட விலக்கில்லாமல் நம்மால் யதார்த்தமாய் ஒரு குற்ற உணர்வு கூட வேண்டாம், குறைந்தபட்ச அனுதாப உணர்வு கூட இல்லாமல் கடக்க முடிகிறது? உணர்வுகள் மறத்த ஊனமான யந்திரன்களாக ஏன் நாம் இருக்கிறோம்?                      நம் தேசத்தில் ஒர

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...

நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...  நியாய விலைக்கடைகளை அரசு நடத்துவது என்பதே பொருட்கள் வெளிச்சந்தையில் நியாய விலைக்கு கிடைப்பதில்லை என்கிறபோது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுப்பது என்பது வெளிச்சந்தையில் பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் மோசமான நிலைக்கு மக்களை தள்ளும்.   வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை குறைக்கவுமே அரசு தொடர்ந்து நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது என்ற நிலையில் தற்போது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் தருவதென்பது மேலும் வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை அரசே ஊக்குவிப்பதாக இருக்கும். புதுவையில் தானே புயல் தாக்கப்பட்டபோது புதுவை அரசின் பான்லே பால் அதன் பார்லர்களில் மட்டுமே அதன் உரிய விலையில் கிடைக்க, வெளிச்சந்தையில் ஈவு இரக்கமில்லாமல் ரூ. 40க்கும் ரூ. 50க்கும் விற்றதே இதற்கு சாட்சி.   நியாய விலைக்கடை என்பது வெளிச்சந்தையில் பொருட்களின் விலைவாசி ஏறும்போதும், சாதாரண மக்களுக்கு அதன் பாதிப்பினை தவிர்த்து மக்களை காக்கும் அருமருந்தாக இருக்கும்போது, பொருட்களுக்கு பணம் என்ற நிலை வந்தால் நாளும் ஏ

பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்

பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிமுகமான பெயராக இருக்கிறார். வாழ்த்துக்கள்.  அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி நூலினை தொடர்ந்து அவர் இந்தியாவில் எப்போதோ நிகழ்த்திய உரையாடலினை (கவனிக்கவும், உரையல்ல!) சற்றும் சளைக்காமல், ஒரே நேரத்தில் தமிழிலும், அதன் ஆங்கில மூலத்தினையும், விற்பனை சந்தை குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல், சமூக கடமையாக மட்டுமே கருதி அச்சிட்டு வெளியிடும் அவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் அப்புத்தகங்களை, “இருளும் ஒளியும்” நூலில் தோழர் ச. தமிழ்செல்வன் சொல்வதைப் போல தோள் வலிக்க ஏந்தி பொதுவெளியில் சேர்ப்போம். அது ஒன்றே நம் கடமை. நிற்க. பாவ்லோ பிரையரே குறித்து இன்னமும் இன்னமும் ஏதாவது செய்திகள் கிடைக்காதா, அவை நமக்கு ஏதேனும் சொல்லிச் செல்லாதா என ஒரு அதிகாலை வேளையில் இணையத்தை துழாவிய போது ஒரு அதிசயமான, ஆச்சரியமான செய்தி கிடைத்தது. இன்னமும் மாறா புல்லரிப்போடே தொடர்கிறேன்.  ஆண்டு 1962, இடம் பிரேசில் நாடு. MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும் எழுத்தற

ஒரு கோழியின் கதை

ஒரு ஊரில் ஒரு கோழி தன் இடத்தில் இருந்த உணவை உண்டு இனிமையாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு ஒரு தானியம் கிடைக்க, அது அதை விதைத்து பயிராக்கி உண்ணலாமே என நினைத்தது. ”ஆனால் எனக்கு இந்த தானியத்தை விதைக்க உதவுவார்கள்” என புலம்பியது கோழி. “என்னால் உதவ முடியாது, ஆனால் உனக்கு சில காபி கொட்டைகளை தருகிறேன். நீ அதை விதைத்து பணம் பண்ணுவதை விட்டுவிட்டு தானியத்தை பயிரிடுகிறேன் என்கிறாயே” என்றது வாத்து. “என்னாலும் உனக்கு உதவ முடியாது, ஆனாலும் இந்த காபி கொட்டைகள் வளர்ந்தவுடன் அதை நான் உன்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்” என்றது பன்னி. “எனக்கும் அதே நிலைதான், என்னாலும் உதவ முடியாது, ஆனால் என்னால் உனக்கு இந்த காபி கொட்டைகளை விதைக்க பணம் தர முடியும்” என்றது பெருச்சாளி. ஆக, கோழியும் தானியத்திற்கு பதிலாக காபி கொட்டைகளை விதைத்தது. ”எல்லாம் சரி, ஆனால் எனக்கு இந்த காபி கொட்டைகளை வளர்ப்பதற்கு யாரேனும் உதவ வருவார்களா” என வினவியது கோழி. “என்னால் முடியாதுப்பா, இருப்பினும் இந்த காபி பயிர்கள் வளர என்னால் உனக்கு உரம் விற்பனை செய்ய முடியும்” என்றது வாத்து. “எனக்கு உனக்கு உதவுவது முடியாது, இருப்பினும் இந்த