Skip to main content

Posts

Showing posts from 2019

துணிவின் பாடகன் - பாந்த் சிங் - நூல் அறிமுகம்

படிச்சாச்சு . பாந்த் சிங் முடிச்சாச்சு . பாரதி புத்தகாலயம் - காம்ரேட் டாக்கீஸ் கூட்டு வெளியீடு . கமலாலயன் தோழரின் சலிப்படைய செய்யாத மொழிபெயர்ப்பு . வாசிக்க எளிதாக இருக்கிறது . போராளியும் கலைஞருமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு ஆதலால் , அவ்வப்போது வருகிற சின்ன சின்ன பாடல் வரிகளோடு புத்தகம் படிக்க சுகமாகிறது . இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு போராளியின் வாழ்க்கை சம்பவங்களே , இப்புத்தகம் . ஆனால் அதோடு சேர்த்து பஞ்சாப் மாநிலம் என்பதன் சிறிதான வரலாறு , மக்களின் கலாச்சாரம் , சீக்கிய மதத்தின் வழிமுறைகள் , கொள்கைகள் , 2000 ஆம் ஆண்டு தொடங்கி பஞ்சாப் மக்களிடையே பரவி வரும் போதை மருந்து கொடும் பழக்கம் என்று கலவையாக பாந்த் சிங் தோழரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது . அதுவே இப்புத்தகத்தின் சிறப்பு . இந்தியாவில் இந்து மதம் அல்லாது வந்த அல்லது புதிதாக தொடங்கப்பட்ட எந்த மதமும் சரி , சாதி அடுக்குகளில் இருந்து தப்பவே இல்லை . குரு நானக் தன்னுடைய மதத்தில் தலித்துகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தும் accommodate செய்தும் காலப் போக்கில் வழக்கம் போல் தலித்துகள் ஒடுக்கப்படுவதும் , ஜாட்

கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் - வறீதையா கான்ஸ்தந்தின் == நூல் அறிமுகம்

கடல்புற வாழ்வியல் குறித்து சமீப காலங்களில் எழுத்துக்கள் மூலம் கவனம் ஈர்க்க செய்தவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள் . இதோ பாரதி புத்தகாலயமும் வறீதையா அவர்களின் படைப்போடு , படைப்பு என சொல்லலாமா , ஆய்வு என சொல்லலாம் . கஜாப் புயல் பின்னணியில் டெல்டா மாவட்டங்களின் கடல்புறத்தில் நிகழ்ந்த அழிவை , விவசாயிகளின் வாழ்வை அப்படியே இருபது ஆண்டு காலத்திற்கு சூறையாடிய கொடும் தன்மையை , இயற்கை அறிவு ( அல்லது தொழில் சார் அடிப்படை அறிவு ), அரசின் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மெத்தனங்கள் மட்டுமல்லாது , எளிய மக்களை " லாபம் " என்னும் ஒற்றை இலக்கில் அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நல கொள்கைகளையும் , அதிகாரிகளின் ஈவு இரக்கமற்ற ஊழல்களையும் , இறுதியாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார் . MNREGA திட்டத்தால் கிராமங்களில் மக்கள் ( இந்த நூலில் பெண்கள் ) வயல் வேலைக்கு வருவதில்லை என்னும் ஒரு குற்றச்சாட்டு பலநாட்களாய் பலரும் சொல்லும் ஒன்று . இந்நூலிலும் ஒரு இடத்தில் ஒரு விவசாயி அப்படி சொல்வதாக வருகிறது . இது குறித்து " என்ன தோழர் , இப்படி சொல்றாரு , அதுமட்டுமில்ல ,

சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் - நூல் அறிமுகம்

" மனிதக் கழிவு அகற்றுவோரைப் பெருமளவில் ரயில்வேத் துறை பணியமர்த்துகிறது . அதற்கு பாவ விமோசனமாக , ரயில்வேயில் சமையலுக்கும் உணவு பரிமாறும் வேலைகளுக்கும் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் . அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் . இந்த வேலைகள் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டிருந்தால் இவர்களைத்தான் அந்த வேலைகளுக்கு எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஒப்பந்தத்திலேயே சேர்க்க வேண்டும்” . --- ஒரு நிமிஷம் இவ்வாசகங்களை கண் மூடி அசை போட்டு பாருங்கள் . கழிவு அகற்றுவோரை உணவுப் பரிமாறும் வேலைகளை செய்ய சொல்வது என்பதென்பது எவ்வளவு புரட்சிகரமானது . தகழி சிவசங்கரன் பிள்ளை தோட்டியின் மகன் நாவலில் புறவாயில் வெளியே நின்று சாப்பாட்டை எட்டி கேட்ச் பிடிக்கும் ஒரு தோட்டி ( நாவலுக்காக இந்த பெயரை பயன்படுத்துகிறேன் ) வீட்டினுள் வந்து சமைத்து அந்த உணவினை அந்த வீட்டு மக்களுக்கு உணவு பரிமாறுகிறார் என்றால் ... இதுதான் affirmative action. ஒரு வேளை இவ்வாசகங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அரசு ஏற்றுக் கொண்டால் ...? ஆனால் , நடந்தது என்ன ...? இவ்வாசகங்கள் பரிந்துரைகள் ஆகின , சட்ட முன்வடிவில் இடம் பெ

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்? - நூல் அறிமுகம்

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன் ? - இப்படி தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகம் நெடு நாளாக தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது . அட்டையில் மற்றொரு பெயர் யூமா வாசுகி . அப்புறமும் இந்தப் புத்தகம் எடுக்காமல் இருப்பது எப்படி ? இன்று காலை உணவு வேளையில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன் . இப்ப எல்லாம் 5 mins read என சில கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்களே , அது போல சொல்வதானால் இப்புத்தகம் ஜஸ்ட் 25 mins read. யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு வழக்கம் போல் அசத்தல் , தமிழ் வாசம் . எம் . எம் . சுசீந்திரன் குழந்தைகளுக்கு வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியர் போலும் . என்ன அழகாக கிரேக்க நாகரீகம் குறித்து பாடம் எடுக்கிறார் . ஒரு மகளுக்கும் அப்பாவிற்கும் இடையே நடக்கும் உரையாடலே இது . எனக்கென்னவோ குறைந்தபட்சம் non-detail எனப்படும் புத்தகமாவது குழந்தைகளுக்கு இப்படி இருக்கலாம் என தோன்றுகிறது . ( சரி , நான் படிச்ச 20 வருஷம் முன்பு இருந்தது நான் டீடெய்ல் புத்தகம் இப்போது இருக்கா ?). கிரீஸ் என தற்போது அழைக்கப்பட்டும் நாடு உலக வரைபடத்தில் என்ன மாதிரி உருவத்துடன் இருக்கிறது என்றால் , " எலும்புகூட்டின் கைவிரல் போன்று

THOSE MAGNIFICIENT WOMEN AND THEIR FLYING MACHINES- ISRO'S MISSION TO MARS. - நூல் அறிமுகம்

சந்திராயன் விண்கலம் வானில் பறந்தது . மங்கல்யான் மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது . இவையெல்லாம் செய்தியாகவே ( பெருமிதமான ) இருந்தன . எப்பொழுது அந்த மங்கல்யான் விண்கலம் உருவாக்கத்தில் , செயல்பாட்டில் பெண்கள் தான் பின்னணி என்னும்போது தான் சுவாரசியம் தட்டியது . அட , இது என்னப்பா புது விஷயம் என ஆர்வம் கூடியது . உடனே அவர்கள் யார் எங்குள்ளனர் என்பது குறித்த விபரங்கள் தேடுகையில் டிவிட்டரில் இந்தப் புத்தகம் பிடிபட்டது . { டிவிட்டரில் உள்ள புத்தக பிரியர்கள் அவசியம் அக்ஷ்யா முகுல் அவர்களின் டிவிட்டர் ஹேண்டிலை பின் தொடர்க ). மின்னி வைடு என்பவர் எழுதிய THOSE MAGNIFICIENT WOMEN AND THEIR FLYING MACHINES- ISRO'S MISSION TO MARS.. செவ்வாய் கிரகத்தை சுற்றி அது குறித்த செய்திகளை கண்டறிய நம் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விண்கலமே மங்கல்யான் . கொஞ்சம் போல வானியல் குறித்த ஒரு அடிப்படை அறிவு தேவைப்படுகிறது இப்புத்தகத்தை வாசிக்க . அதே சமயம் , சின்ன சின்னதாய் வானியல் குறித்தும் , செவ்வாய் கிரகத்தினை குறித்தும் , இஸ்ரோவின் விண்கலங்கள் உருவாக்கம் முதல் அவை வ

வாழும் மூதாதையர்கள் - தமிழகப் பூர்வகுடி மக்கள் அறிமுகம்

இரண்டு முக்கிய முன்முடிவுகள் உடைபடுவதில் இருந்து "வாழும் மூதாதையர்கள்" நூல் தொடங்குகிறது. “காட்டில் இருந்து அவர்களை சமதளத்தில் இறக்கி அவர்களை நாகரிகமயப்படுத்த வேண்டும்" என்ற குரலில் ஒரு அபத்தம் இருப்பது இப்புத்தகம் படிக்கையில் தெரிய வரும். அதே சமயம் "மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே " என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.  நூலாசிரியரின் இந்தக் கவலையே இப்புத்தகத்தில் தமிழக பழங்குடிகள் குறித்த ஒரு விரிந்த அறிமுகத்தை தமிழ் சமூகத்திற்கு செய்கிறது என புரிந்துகொள்ளலாம். பழங்குடிகள் குறித்த அறிவாக தமிழ் சமூகத்தில் என்ன இருக்கிறது?! பழங்குடிகள் அநாகரிகமாக சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரிகமாக காட்டுவாசிகள் என்பதாக சொன்னாலும் அவர்கள் அறிவற்ற மூடர்கள், விதி வந்ததே வாழ்க்கை என வாழ்பவர்கள், சமதள மக்களிடம் பயந்து இருப்பவர்கள், ஆபத்தானவர்கள், நாகரிக வாழ்வு குறித்த எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள் என்பதாக இருப்பதாக கொள்ளலாம். இவை அத்தனையும் பொய் என்பதனையும் அவர்களும் முன்னேற்றம்

Nine Rupees an hour - disappearing livelihoods of Tamilnadu - நூல் விமர்சனம்

Nine Rupees An Hour – disappearing livelihoods of Tamil Nadu. இந்நூலின் ஆசிரியர் அபர்ணா கார்த்திகேயன் . இவர் பி . சாய்நாத் அவர்களின் மாணவி . இப்போதே ஊகித்திருப்பீர்கள் தானே ! ஆமா , இந்த நாட்டின் எளிய மனிதர்களும் அவர்களது வாழ்வும் , தொழிலும் அவர்கள் கலையும் தான் பேசுபொருள் . நூலின் அடிசரடாக இருக்கும் விஷயங்கள் எளிய மனிதர்களின் அயராத உழைப்பும் அந்த உழைப்பை உழைப்பாகவே அங்கீகரிக்காத பாங்கும் , அதை appropriate செய்யாத பொருளாதார பயன்களும் - பரம்பரை பரம்பரையாக பார்த்து வரும் தொழிலை தனக்குப் பின்னே கடத்த விரும்பயும் கடத்த துணியாத வாழ்வு நிச்சயமற்ற சூழல் - தனித்திறன் கொண்ட தொழில்கள் , அவைகளால் கிடைக்கும் அங்கீகாரம் ஆனால் வாழ்வு ஏற்றம் பெறாத பொருளாதாரம் என்பவனவே . அதே போல , ஏழை எளியர்களின் நாட்டுப்புறக் கலைகள் எனப்படும் அவர்களின் கலைஞானமும் , அக்கலைஞர்களின் அன்றாட வாழ்வும் அக்கலைகளுக்கும் அக்கலைஞர்களுக்குமான சமூக placing என்பனவும் இந்நூலில் பேசுபடு பொருளாக இருக்கிறது . இந்தியாவெங்கும் போலவே தமிழகத்திலும் விவசாயம் தொடர்து நட்டம் தரும் தொழிலாக மாறி அத்தொழிலின் பங்குதாரர்கள்