சாக்ரடீசுக்கு
விஷம் கொடுத்தது ஏன்?
- இப்படி
தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகம்
நெடு நாளாக தொந்தரவு செய்து
கொண்டிருக்கிறது.
அட்டையில்
மற்றொரு பெயர் யூமா வாசுகி.
அப்புறமும்
இந்தப் புத்தகம் எடுக்காமல்
இருப்பது எப்படி ?
இன்று
காலை உணவு வேளையில் எடுத்து
படிக்க ஆரம்பித்தேன்.
இப்ப
எல்லாம் 5
mins read என
சில கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்களே,
அது
போல சொல்வதானால் இப்புத்தகம்
ஜஸ்ட் 25
mins read. யூமா
வாசுகியின் மொழிபெயர்ப்பு
வழக்கம் போல் அசத்தல்,
தமிழ்
வாசம்.
எம்.எம்.
சுசீந்திரன்
குழந்தைகளுக்கு வரலாறு பாடம்
எடுக்கும் ஆசிரியர் போலும்.
என்ன
அழகாக கிரேக்க நாகரீகம்
குறித்து பாடம் எடுக்கிறார்.
ஒரு
மகளுக்கும் அப்பாவிற்கும்
இடையே நடக்கும் உரையாடலே
இது.
எனக்கென்னவோ
குறைந்தபட்சம் non-detail
எனப்படும்
புத்தகமாவது குழந்தைகளுக்கு
இப்படி இருக்கலாம் என தோன்றுகிறது.
(சரி,
நான்
படிச்ச 20
வருஷம்
முன்பு இருந்தது நான் டீடெய்ல்
புத்தகம் இப்போது இருக்கா?).
கிரீஸ்
என தற்போது அழைக்கப்பட்டும்
நாடு உலக வரைபடத்தில் என்ன
மாதிரி உருவத்துடன் இருக்கிறது
என்றால்,
"எலும்புகூட்டின்
கைவிரல் போன்று இருக்கும்"
என
சொல்லும் சுசீந்திரன் சார்,
சபாஷ்.
மற்றொரு
இடமும் சபாஷ் போட வைக்கிறது,
அது,
“மாலுமிகள்
நட்சத்திரங்களிடம் முதலில்
கேட்டது,
கடலில்
பயணம் செல்வதற்கான வழி.
பிறகு
அவர்கள் அதே நட்சத்திரங்களிடமே,
பிரபஞ்சம்
என்னும்,
புரியாத
புதிருக்கான விடையும்
கேட்டார்கள்",
புத்தகத்தில்
இடையே தபோல்கரும்,
கோவிந்த்
பன்சாரே போன்ற பெயர்களும்
வருவது சுவாரசியமானது.
அது
எங்கே வருகிறது என்றால்,
“ராவணனுக்கு
பத்து தலை என்றால்,
அனுமன்
இலங்கைக்குத் தாவினார்
என்றால்,
பேருந்தில்
கால் பந்து விளையாடுகிற
அளவுக்கு இடம் இருக்கிறது
என்று ஒரு நடத்துனர் சொல்வதை
எப்படி ஏற்றுக் கொள்வோமோ
அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்,
புரிந்து
கொள்ள வேண்டும்.
ஆனால்,
புராணங்களின்,
இலக்கியப்
படைப்புகளின்,
மத
நூல்களின் அர்த்தத்தை சரியாகப்
புரிந்துகொள்ளும் திறமை
மிகப் பெரும்பாலானோருக்கு
இல்லை.
இந்தக்
குறைதான் அவர்களை மதத்
தீவிரவாதிகளாகவும்,
பிரிவினைவாதிகளாகவும்
இருக்கிறது.
“...
இந்த
மேற்கண்ட வரிகள் போதுமே
குழந்தைகளோடு உரையாட,
அப்புறம்
என்ன ஆசிரியர்களே,
குழந்தைகளோடு
உரையாட நினைக்கும் பெற்றோர்களே,
வாங்கலாமே
இப்புத்தகத்தை.
பாரதி
புத்தகாலயத்தின் புக்ஸ் பார்
சில்ரன் வெளியீடு.
Comments