Skip to main content

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

 20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது. அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன். என் தலைவன் தோழர் பேராசிரியர் நா. மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார்.

அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்தவாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்”. பேரா. எஸ்.சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது. முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது. தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தையும் வாசித்ததே இல்லை. புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்துநடை வெகு சுவாரசியம். கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா? தெரியவில்லை. ஆனால், இருவரின் உரையாடல் வழியே அறிவியலை இயற்கை சுவாரசியங்களை உண்மைகளை மிக எளிமையாக வாசகருக்கு இதமாக சொல்வது என உறுதியாக சொல்ல முடியும்.

அன்றிலிருந்து பேரா.எஸ்.சிவதாஸ் என்ற பெயர் எங்கு தென்பட்டாலும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் உடனே வாங்குவதும் அவரின் புத்தகங்களை பலரும் படிக்க பரிந்துரைப்பதும் என தொடர்கிறேன். அந்த வகையில் புக்ஸ் பார் சில்ரன் வெளியீட்டில் மாத்தன் மண்புழுவின் வழக்கு என்ற புத்தகமும் வெகு சிறப்பான ஒன்று. வானம் வெளியீட்டிலும் ஒரு புத்தகமும் தோழர் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அதுவும் சிறப்பான ஒன்றே.



அந்த வரிசையில் நான் வாசித்த அடுத்த புத்தகம் கலிலியோவின் வாழ்க்கை வரலாறு. இம்முறையும் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் அவர்கள் கையிலெடுத்து இருப்பது உரையாடலான நாடக வடிவமே. உரையாடல் என்பதில் வாசகனுடனான ஒரு தோழமை இருக்கிறது என்பதை உண்மையாக நம்புகிறார் என்றே தோன்றுகிறது.  

கலிலியோ கண்டுபிடித்தது என்ன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் மதநம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துகொண்டு மதம் அதுகாறும் சொல்லிவந்த உண்மை என்ற ஒன்றை அறிவியலால் பொய் என கண்ட கலிலியோ அறிவியலின் பக்கம் அதாவது உண்மையின் பக்கம் சொல்ல என்ன பாடுபட்டார், என்ன ஆனது அம்மகா உண்மை என்பதை சுவையாக நாடக வடிவில் காட்டுகிறது இப்புத்தகம்.

அதுவரை உலகமே நம்பியிருந்த ஒன்றை இல்லை என மறுத்து சொல்வதென்றால் எத்துனை தைரியம் வேண்டும்? அசட்டு தைரியம் அல்ல அது, ஆழ்ந்து ஆய்வு செய்து கண்டுகொண்ட உண்மை. முற்போக்காளர்கள் இத்தகைய புத்தகங்களை தமிழகம் எங்கும் எடுத்து செல்ல, சொல்ல வேண்டும். பள்ளிகள் தோறும் இப்புத்தகம் வேண்டும். குழந்தைகளை வாசித்தும், வாசித்து நாடகமாக நடத்தவும் பழக்க வேண்டும். சீ.. சீ.. அறிவியல் என்ற காய்ச்சல் இல்லாமல் தைரியமாக எளிமையாக கொண்டு செல்லக் கூடிய புத்தகம் இது என்பதை முற்போக்காளர்கள் அவசியம் படித்து உணர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

என் நம்பிக்கை என உண்மை எதுவோ அதைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் என தான் நம்பியதே உண்மை என்று அதனையே பலரும் ஏற்று ஆக வேண்டும் எனவும் மீறினால் வெறுப்புதான் என்பதான உலகமாக இக்காலம் இருப்பதால் அவசியம் இது போன்ற புத்தகங்களை முற்போக்காளர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

 அசராமல் சமூகத்துக்கு தேவையான புத்தகங்களை கொண்டு வந்து தரும் பாரதி புத்தகாலயத்தாருக்கு மிக்க நன்றி. 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...