Skip to main content

Posts

Showing posts with the label கதை

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஒரு கோழியின் கதை

ஒரு ஊரில் ஒரு கோழி தன் இடத்தில் இருந்த உணவை உண்டு இனிமையாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு ஒரு தானியம் கிடைக்க, அது அதை விதைத்து பயிராக்கி உண்ணலாமே என நினைத்தது. ”ஆனால் எனக்கு இந்த தானியத்தை விதைக்க உதவுவார்கள்” என புலம்பியது கோழி. “என்னால் உதவ முடியாது, ஆனால் உனக்கு சில காபி கொட்டைகளை தருகிறேன். நீ அதை விதைத்து பணம் பண்ணுவதை விட்டுவிட்டு தானியத்தை பயிரிடுகிறேன் என்கிறாயே” என்றது வாத்து. “என்னாலும் உனக்கு உதவ முடியாது, ஆனாலும் இந்த காபி கொட்டைகள் வளர்ந்தவுடன் அதை நான் உன்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்” என்றது பன்னி. “எனக்கும் அதே நிலைதான், என்னாலும் உதவ முடியாது, ஆனால் என்னால் உனக்கு இந்த காபி கொட்டைகளை விதைக்க பணம் தர முடியும்” என்றது பெருச்சாளி. ஆக, கோழியும் தானியத்திற்கு பதிலாக காபி கொட்டைகளை விதைத்தது. ”எல்லாம் சரி, ஆனால் எனக்கு இந்த காபி கொட்டைகளை வளர்ப்பதற்கு யாரேனும் உதவ வருவார்களா” என வினவியது கோழி. “என்னால் முடியாதுப்பா, இருப்பினும் இந்த காபி பயிர்கள் வளர என்னால் உனக்கு உரம் விற்பனை செய்ய முடியும்” என்றது வாத்து. “எனக்கு உனக்கு உதவுவது முடியாது, இருப்பினும் இந்த ...

முதல் நாள்

அலுவலகம் வந்ததிலிருந்தே ஒரே படபடப்பாய் இருந்தது। செய்வதற்கு வேலைகள் பல இருந்த போதிலும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் இருந்தது। மேனேஜர் ஏதாவது சொல்லபோகிறார் என்று ஒன்று இரண்டு ஃபைல்களை மேஜை மேல் பிரித்து வைத்து விட்டேன்। அபிக்குட்டி ஞாபகமாகவே இருக்கிறது। அபிக்குட்டி இன்றுதான் பள்ளிக்கு முதல்நாள் சென்றிருக்கிறாள்। பயங்கர வாயாடி। பார்க்கிறதையெல்லாம் அப்படியே அபிநயம் பிடித்து காட்டும் சமர்த்துகுட்டி। பேச பேச வாய் ஓயாது அவளுக்கு। நானும் உம்கொட்டிக் கொண்டே இருக்கணும்। அவங்க அப்பாதான் சொல்லுவார், பேசியே பேசியே என்னமா வளர்ந்துட்டுது இந்தக் குட்டி என்று. அவ கைகளை விரித்து, காக்கா வடை கதை சொல்றதை பார்க்கணுமே, அழகு, அழகு. இன்றைக்கு ஸ்கூலுக்கு அவர்தான் கொண்டுபோய் விட்டு வந்தார்। "நீ வந்தா அவ ரொம்ப நடிப்பா" என்று என்னை அலுவலகத்திற்கு போக சொல்லிவிட்டார்। அவருக்கு இன்றைக்கு இரவு ஷிப்ட்। எப்படி இருக்கிறதோ குழந்தை?!. பெரிய ஸ்கூல், ரொம்ப கேர் எடுத்துப்பாங்க, ஒன்றும் பயப்பட வேண்டாம், நிம்மதியாக இருக்கலாம், +2 வரைக்கும் கவலையில்லை என்று என்னென்னமோ சமாதானம்...

குறுஞ்செய்தி

"வணக்கம் தோழர்". "வணக்கம், எப்படி இருக்கீங்க‌". "டீ சாப்பிடலாமா" "சரி தோழர். இந்த சோம்நாத் சொன்னதை பார்த்தீகளா" செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "என்னது தோழர், அவரது கட்சியை விட்டு தூக்கிட்டோம்ல, பின்ன என்னவாம்" "அட ஏன் தோழர், அவர் சொல்றாரு, கட்சியோட இந்த தோல்விக்கு பிரகாஷ் காரட்தான் காரணமாம்" "என்னங்க, இது. ஏன் இப்படியெல்லாம் உளறிகொட்டுகிறார்" இம்முறையும் செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "இதுகூடவா தெரியாது, கம்யூனிஸ்ட் கட்சியில் கூட்டு தலைமைதானே முடிவு செய்வது, தனி நபர் எப்படி பொறுப்பாக முடியும்." "அப்படி சொல்லுங்க தோழர், அந்த ஆள் எப்படி இத்தனை வருஷமா கட்சியில் இருந்தார், எப்படி கட்சி இப்படிபட்ட ஆளையெல்லாம் வைச்சுக்கிட்டுது" மீண்டும் செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "யார் தோழர், என்ன முக்கியமோ கட் பண்றீங்க" "முக்கியம் கிக்கியம்லாம் இல்ல தோழர், எங்க வூட்டம்மாதான். வேறு வேலை இல்ல, ஊருக்கு போனாலும் நாளைக்கு மூணு நாலு தடவை போன...

கடலோடு விளையாடி... (ஒரு நிகழ்வு அல்லது கதை)

அபிக்குட்டி ரொம்ப அழுது கொண்டிருந்தாள் என்று கடலோடு விளையாட கூட்டிச் சென்றேன். அலைகள் வந்து கால் நனைத்து மீண்டும் திரும்பி செல்வது என்பது பயமாக இருந்தாலும் கொண்டாட்டமாகவும் இருந்தது, அவளுக்கு. எவ்வளவு நேரம் தான் அலைகள் வந்து கால் நனைக்கும் விளையாட்டை விளையாடுவது. போரடிக்குமே என்று மற்றொரு அரதப் பழசான விளையாட்டை தொடங்கினேன். விளையாட்டு பழசாக இருந்தாலும், அபிக்குட்டி புதியவள்தானே. அலைகள் தீண்டும் மணல் வெளியில் அவள் பெயர் எழுதினேன். அலைகள் வந்து அழித்துவிட்டு போயிற்று. ஹொய் என்றொரு பூரிப்பு. மீண்டும் எழுதினேன், மீண்டும் அலை வந்து அழித்தது. இம்முறை அபிக்குட்டி ஏக சந்தோஷம். இதையே சில தடவைகள் தொடர்ந்தேன். இம்முறை அலை வந்து அழிக்க அவள் அழுதாள். அழுகைக்கு காரணம் புரியாமல் சரியென்று அலைகள் நனைக்கும் பகுதியிலிருந்து சற்று தள்ளி பெயரெழுதினேன். அலை எப்படி இதை அழிக்குது பார்க்கலாம் என்று அபிக்குட்டியிடம் சொன்னேன். அவளிடம் அழுகையும் நின்றது. அப்பாடா என்று நினைக்கும் முன்னர் ஒரு பெரிய அலை வந்து பெயர் அழித்துவிட்டுப் போயிற்று. அவள் அழத்தொடங்கிவிட்டாள். அழாதேடா கண்...

எக்காள‌ம்

மீண்டும் அதே சத்தம் சத்தம் இம்முறை அதிகமாய் நான் எழுத உட்காரும்போதுதான் இந்த சத்தம் ரொம்ப நாளாய் இது தொடர்கிறது நானும் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் மீண்டும் மீண்டும் எக்காள‌ ச‌த்த‌ம் க‌ளுக்கு, க‌ளுக்கு என்ற‌ ஏள‌ன‌ ச‌த்த‌ம் கொஞ்ச‌ம் எழுதி கொஞ்ச‌ம் எழுதி க‌ச‌க்கி போட்ட‌வ‌ற்றையெல்லாம் தின்னு கொழுத்து, வ‌யிறு புடைத்து என்னைப் பார்த்தே எக்காள‌ முழ‌க்க‌ம் செய்கிற‌து குப்பைத்தொட்டி இதோ நான் மீண்டும் அத‌ன் வ‌யிற்றை நிர‌ப்புகிறேன் எக்காள‌ம் எழுப்ப‌ட்டும் அத‌ன் வ‌யிற்றுக்கு நான் இரையிடாத‌ அந்நாள்வ‌ரை...