Skip to main content

முதல் நாள்


அலுவலகம் வந்ததிலிருந்தே ஒரே படபடப்பாய் இருந்தது। செய்வதற்கு வேலைகள் பல இருந்த போதிலும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் இருந்தது। மேனேஜர் ஏதாவது சொல்லபோகிறார் என்று ஒன்று இரண்டு ஃபைல்களை மேஜை மேல் பிரித்து வைத்து விட்டேன்। அபிக்குட்டி ஞாபகமாகவே இருக்கிறது। அபிக்குட்டி இன்றுதான் பள்ளிக்கு முதல்நாள் சென்றிருக்கிறாள்। பயங்கர வாயாடி। பார்க்கிறதையெல்லாம் அப்படியே அபிநயம் பிடித்து காட்டும் சமர்த்துகுட்டி। பேச பேச வாய் ஓயாது அவளுக்கு। நானும் உம்கொட்டிக் கொண்டே இருக்கணும்। அவங்க அப்பாதான் சொல்லுவார், பேசியே பேசியே என்னமா வளர்ந்துட்டுது இந்தக் குட்டி என்று. அவ கைகளை விரித்து, காக்கா வடை கதை சொல்றதை பார்க்கணுமே, அழகு, அழகு.

இன்றைக்கு ஸ்கூலுக்கு அவர்தான் கொண்டுபோய் விட்டு வந்தார்। "நீ வந்தா அவ ரொம்ப நடிப்பா" என்று என்னை அலுவலகத்திற்கு போக சொல்லிவிட்டார்। அவருக்கு இன்றைக்கு இரவு ஷிப்ட்। எப்படி இருக்கிறதோ குழந்தை?!. பெரிய ஸ்கூல், ரொம்ப கேர் எடுத்துப்பாங்க, ஒன்றும் பயப்பட வேண்டாம், நிம்மதியாக இருக்கலாம், +2 வரைக்கும் கவலையில்லை என்று என்னென்னமோ சமாதானம் எனக்கு சொல்லியாயிற்று. எனக்குதான் கீதா சொன்னது அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது, "அங்கேயா, ரொம்ப ஸ்டிரிக்ட்டாமே அந்த ஸ்கூல், யாரோ சொல்ல கேள்வி". "கொஞ்சம் ஸ்டிரிக்ட்டா இருப்பது ஒன்னும் தப்பில்ல" ‍ இது என் அப்பா.

தலையெல்லாம் வலிப்பது போலிருந்தது. டீ குடிக்கப் போகலாம் என்றால் மேரியும் இன்று வரவில்லை. எப்படியோ கடிகாரம் மணி 12 காட்டியது. நல்லா இருக்கட்டும், அது. இனி மேனேஜரிடம் போகணும். பொன்னியம்மனை வேண்டிக் கொண்டு அவரை அணுகி, "சார், ஒரு அரை நாள் லீவு வேண்டும், உடம்பு முடியல". மேனேஜர், "எப்பவும் இந்த சாக்குதான், போய் வா" என்றதும் எனக்கு நம்பவே முடியவில்லை. "ரொம்ப தாங்க்ஸ் சார்" ‍ என்று அந்த மனுசன் மனம் மாறுவதர்குள் வெளியேறினேன். இந்த மாசம் ஏகப்பட்ட செலவு என்று அபி அப்பா புலம்ப ஆரம்பித்தாயிற்று. இருந்தாலும் ஏதோ சொல்லி சமாளிக்கலாம் என்று ஆட்டோவில் வீடு செல்லத் தொடங்கினேன். ஸ்கூல் விட்டிருக்குமா, அவர் போயிருப்பாரா, குழந்தை வெளியில எங்காவது நிக்குமா என்று கண்ணிகளாக கவலைகள் வந்தது.

"அப்பா, அபிக்க்குட்டி வந்துட்டாளா" என்றுதான் படியேறினேன். சன் செய்திகளிலிருந்து தலை திருப்பி, "வர்ற நேரம்தான்" என்றார். குழந்தைக்கு வெந்நீர் இருக்கா என்று என் ரூமுக்கு (சமையலறை) செல்வதற்குள் பைக் சத்தம் கேட்டது. "அப்பா, அபிக்குட்டி வந்தாச்சு". "ஏன்டி அலர்றே" என்ற அவரது சொல் எங்கோ தூரமாய் ஒலிக்க ஓடி சென்று குழந்தையை தூக்கினேன். பாவம், அழுதிருக்கும் போலிருக்கிறது. அபிக்குட்டியும் "அம்மா" என்றவாறு என் தோளில் முகம் புதைத்தது.

"கண்ணம்மா, ஸ்கூல்ல என்ன சொன்னாங்க? மிஸ்". "என்ன, வந்தவுடனேயே? ‍ ‍‍‍‍=அவர். "அம்மா, ஸ்கூல்ல மிஸ்ஸு, மிஸ்ஸு பேசாம இருக்கனும், கையைக் கட்டுங்க, வாய் மேல் கை வையிங்க" என்று இடுப்பில் கை வைத்து சொன்னதும் குழந்தையை இழுத்து தோளில் சாய்த்து அணைத்தேன். கண்ணில் நீர் கரகரத்தது. "என்னங்க இது" என்றேன். அவரோ கிண்டலாய், "தமிழிலயா சொன்னாங்க, உங்க மிஸ். இங்கிலிஷ்லதான் எங்க டீச்சர் எல்லாம் பேசுவாங்கன்னு பிரின்ஸிபால் கிழம் சொன்னதே". என் அப்பா, "அபிக்குட்டி pre-kg தானே, LKGக்கு மேலதான் இங்கிலீஷ் இருக்கும், நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க" என்றார். அபிக்குட்டி கேட்டது, "ஏன்ம்மா, அழறே?".

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...