Skip to main content

Posts

Showing posts from April, 2020

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்

தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க . சினிமா குறித்ததாகட்டும் , இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள் , எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை . எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம் , அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள் , பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880 இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல் . சும்மா எதுவும் சொல்வதில்லை , தியடோர் பாஸ்கரன் அவர்கள் . ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார் . ஆம் மக்களே , The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது . வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க . “ வெள்ளை வெள்ளை கொக்குகளா "

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற

பார்த்தீனியம் - தமிழ்நதி

ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு " பார்த்தீனியம் ". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு . அப்படியே ஷோபாசக்தி அவர்களின் " ம் ", “ கொரில்லா ", “ இச்சா " என தொடர்ந்து கூர்வாளின் நிழலில் , நீண்ட காத்திருப்பு என தொடர்ந்து இப்போது பார்த்தீனியம் . சில பெயர்கள் மறந்துவிட்டன . { ஒரு பனை ... என தொடங்கும் நூலும் இதில் அடக்கம் }. நாவல்கள் வாசிப்பில் ஒரு சுக அனுபவம் இருக்கிறது . அது நமக்காக காலங்களை கடத்தும் . கொரானா நோய் தொற்று பரவல் ஊரடங்கு என வெறுமை சூழந்திருந்த காலத்தில் பரணி , தமயந்தி , அமரநாயகம் , தனபாக்கியம் , ஜெனிபர் என பாவப்பட்ட ஈழதமிழர்களோடும் , எங்கே வானூர்தியும் ஹெலிகாப்டரும் தலைக்குமேல் பொம்ப் இடுமோ என்ற கவலையுமாக 512 பக்கங்கள் சுவாரசியமாக கடக்க செய்திட்ட எழுத்து வித்தைக்கும் , நாவல் நிகழ் காலத்தில் நம்மை காலமாற்றம் செய்தமைக்காக தமிழ்நதி பாராட்டுக்குரியவர் . 80 களில் நடக்கும் கதை களம் . இதில் எத்தனை கதாபாத்திர

நீண்ட காத்திருப்பு - அறிமுகம்

எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை . ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை . இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்காமல் நெஞ்சம் கனத்து படிக்க முடியாமல் வைக்கப்பட்ட புத்தகங்களில் இது சேராது . ஆனாலும் , ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது , இப்புத்தகம் தன்னுடைய வார்த்தைகளில் அதை பொதிந்து வைத்திருக்கிறது . ஒரு மூச்சில் படித்துவிட என்னால் முடிந்தது . போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் சிறை அனுபவமும் , விடுதலைக்கான பின்னான சில தினங்களுமே இப்புத்தகம் . இலங்கை கடற்படையின் அதிகாரி கொமடோர் அஜித் போயகொட போரில் விடுதலைப்புலிகளால் சிறைபிடிக்கப்படுகிறார் . அவரோடு அப்போரில் கைதான ஒருவர் என தொடங்கி , பின் 22 பேர் இணைகின்றனர் . சிறை வாழ்வின் ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான எந்த சிந்தனையும் இல்லை , எனினும் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை . ஆனாலும் போரில் இராணுவம் முன்னேறும் தருணங்களில் இவர்கள் சிக்கலுக்கும் , புலிகள் முன்னேறும் தருணங்களில் ஆசுவாசமும் பெறுகிறார்கள் . இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் கடைசிவரை கொமடோராகவே இலங்கை அ