எந்த
அதிர்ச்சி தரும் தகவலும்
இல்லை. ரொம்ப
சுவாரசியமாக திரில்லர்
போன்றும் இல்லை. இலங்கை
போர் தொடர்பான புத்தகங்களில்
நம்மால் புத்தகத்தை கீழே
வைக்காமல் நெஞ்சம் கனத்து
படிக்க முடியாமல் வைக்கப்பட்ட
புத்தகங்களில் இது சேராது.
ஆனாலும்,
ஏதோ ஒரு ஈர்ப்பு
இருக்கிறது, இப்புத்தகம்
தன்னுடைய வார்த்தைகளில் அதை
பொதிந்து வைத்திருக்கிறது.
ஒரு மூச்சில்
படித்துவிட என்னால் முடிந்தது.
போரில்
சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ
அதிகாரியின் சிறை அனுபவமும்,
விடுதலைக்கான
பின்னான சில தினங்களுமே
இப்புத்தகம். இலங்கை
கடற்படையின் அதிகாரி கொமடோர்
அஜித் போயகொட போரில்
விடுதலைப்புலிகளால்
சிறைபிடிக்கப்படுகிறார்.
அவரோடு அப்போரில்
கைதான ஒருவர் என தொடங்கி,
பின் 22
பேர் இணைகின்றனர்.
சிறை வாழ்வின்
ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான
எந்த சிந்தனையும் இல்லை,
எனினும் மரணம்
குறித்த பயமும் அவர்களுக்கு
அவ்வளவாக இல்லை. ஆனாலும்
போரில் இராணுவம் முன்னேறும்
தருணங்களில் இவர்கள்
சிக்கலுக்கும், புலிகள்
முன்னேறும் தருணங்களில்
ஆசுவாசமும் பெறுகிறார்கள்.
இந்தப்
புத்தகத்தின் கதாநாயகர்
கடைசிவரை கொமடோராகவே இலங்கை
அரசின் பிரதிநிதியாகவே
நடந்துகொள்கிறார்.
அதைவிட
முக்கியம், புலிகளும்
அவ்வாறே நடத்த முயல்கின்றனர்.
ஆனால்,
அதன் பின்னே
செஞ்சிலுவை சங்கத்தின்
பங்கும், உலகத்தின்
பார்வையில் கண்ணியமானவர்கள்
என்ற தோரணையுமே இருக்கிறது
என்பதையும் அவர் குறிப்பிடாமல்
இல்லை. “சார்,
என்ற விளியிலே
கடைசிவரை நடத்துகின்றனர்;
அவர் மேல்
தாக்குதல் நடத்தப்படவில்லை;
சில வேளைகளில்
தனித்த மரியாதையும் கிடைக்கிறது.
சிறைவாழ்க்கையிலும்
அவரது எதிர்கால நம்பிக்கை
என்பது ஒன்று கடந்தகாலங்களின்
நினைவிலும், இரண்டு,
எப்படியும்
இந்த நொடி வாழ்ந்து கடந்துவிட்டால்
அடுத்த நொடி காத்திருக்கிறது
என்ற எண்ணமும் தருகிறது.
சிறைவாழ்வில்
ரொம்ப கடினமான பொழுதுகளிலும்
இந்த எண்ணங்களுமே 8
வருடத்தை
கடக்க வைத்திருக்கிறது.
கொமடோர்
புலிகள் மீது வைக்கும்
விமர்சனமாக 30 வருட
போர் என்பது மனங்களை
அயர்ச்சிக்குள்ளாக்கியது
என்பதும், 10 வருட
காலத்திற்குள்ளாகவே அவர்களை
இலக்கை எட்டி இருக்க வேண்டும்
என்பதாக மட்டுமே இருக்கிறது.
சிங்களவராக
இருந்தும் தமிழ் மக்கள் மேல்
அவருக்கு வெறுப்பு என்பது
இல்லை. மாறாக
போரில் பாதிக்கபட்ட பாவப்பட்டவர்கள்
என்பதாகவே தமிழர்கள் மீதும்
சிங்களவர்கள் மீதுமே இருக்கிறது.
இலங்கை
ராணுவத்தையும் அவர் விமர்சனம்
செய்கிறார். முன்னேற்றம்
கண்டு கடந்து சென்ற ராணுவம்
இலக்கில்லாமல், இதயமே
இல்லாமல் சூறையாடிய தன்மையும்
சொல்லி இருக்கிறார்.
விடுதலை
பெற்று சுனாமி சமயத்தில்
உதவி செய்துவிட தெற்கு இலங்கை
நோக்கிய பயணத்தில் தன்னை
சிறையில் வைத்திருந்த புலிகளின்
பிரதிநிதிகளை பார்க்கிறார்.
அவர்களும்
சேர் எப்படி இருக்கிறீர்கள்
என விசாரிக்கிறார்கள்.
ஒருவர் படகுபயணம்
செய்து அவர் குழந்தையுடன்
இவரை கண்டு செல்கிறார்.
இதில் தான்
மானுட சாரம் வெளிப்படுகிறது.
சிறைக்காலத்தில்
தன்னை புலிகளின் உளவாளி ஆக
செயல்படுகிறார் என அரசு
குற்றச்சாட்டு வைக்க விடுதலைக்கு
பின்னான காலத்தில் அதை அவர்
மறுத்து தன்னை நிரூபிக்கிறார்.
ஆனாலும்,
சந்தேக நிழல்
இன்னமும் மீதி இருக்கிறது.
விடுதலை
பெற்றதன் பின்னான உலகம்
அவருக்கு பெரிய தளர்வையும்,
வருத்தத்தையுமே
தருகிறது. அதிலே
தான் இப்புத்தகமும் பிறக்கிறது.
இதை
படிக்கும் போது என் நினைவுக்கு
ஷோபாசக்தியின் "கொரில்லா"நினைவுக்கு
வராமலில்லை. இப்புத்தகத்திலும்
ஒரு இடத்தில் இவ்வாறு வருகிறது.
அது "புலிகள்
சிங்கள இராணுவத்தினரை
சிறைபிடித்து அவர்களை நடாத்திய
தன்மைக்கும், எதிர்
இயக்கத்தவர்/ஒற்றர்கள்/நம்பிக்கை
துரோகிகள் என்று சிறைபிடித்து
அவர்களை நடத்திய தன்மைக்கும்
பாரிய வித்தியாசம் இருக்கிறது.
வடலி
பதிப்பகம் வெளியீடு,
204 பக்கங்கள்,
நீண்ட
காத்திருப்பு- கொமடோர்
அஜித் போயகொட, தமிழில்
: தேவா
Comments