கொடி காட்ட வந்தவன் – இந்நூலினை வாங்க முன்பதிவு செய்யுங்கள் என விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் ஆதி வள்ளியப்பன் என முகநூலில் இட்ட மாத்திரமே முடிவு செய்து புத்தகத்தை முன் பதிவு செய்து பெற்றேன். நேற்றுதான் இப்புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. இடையில் இவர்களின் முகநூல் பக்கத்தில் இப்புத்தகத்தின் அறிமுகவிழா நடந்ததையும் அதில் பேசியவர்கள் பேச்சு காணொளியாக கிடைப்பதையும் போட்டிருந்தார்கள். அதில் எழுத்தாளர் பாலபாரதியும் இடம் பெற்றிருந்தது வேறு இன்னும் சுவாரசியத்தை கூட்டியது. அப்புறம் என்ன, வந்து சேர்ந்த உடனே வாசிக்க துவங்கினேன். சின்ன புத்தகம் தான். வாசிக்கவும் எளிது. நடையும் சரளமாக இருந்தது. இப்புத்தகத்திற்கும் எனக்கும் ஒரே வயது. புத்தகம் கூட மறுபதிப்பு கண்டுவிட்டது. புத்தக வாசிப்பு அனுபவத்திற்கு போவதற்கு முன் இப்புத்தகத்தை தேடி கண்டடைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறார் நூலாசிரியர் ரேவதி அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு அனுபவமாக இது இருந்திருக்கும்? நினைக்கையிலே சிலிர்க்கிறது. ஒரு அரசியல் வரலாற்று நிகழ்வுப்போக்கினை குழந்தைகளுக்கு எப்படி கடத்துவது? காந்தி என்ற தனிமனிதர் அல்லர், காந்தியி...
குரங்கு பெடல் – இரண்டு நாட்கள் முன்பு பார்த்த படம். முதலிலேயே சொல்லிடறேன். அந்த லாங் ஷாட் , டிரோன் ஷாட் என்பதாக தொடங்கி விஎபெக்ஸ் சரியில்ல என்பது மாதிரியான சினிமா மொழி எல்லாம் எனக்கு தெரியாது. நான் எல்லாம் ஒரு சராசரி தமிழன் , சினிமாவும் முக்கியமான உலகம் என்று நம்புகிறேன். அதன் மாயாஜாலத்தில் மகிழ்ந்து போகிறேன் , அவ்வளவே. Disclaimer எல்லாம் முடிஞ்சு , இனி விஷயத்துக்கு வருவோமா.. உண்மையிலேயே என்னை மாதிரி 80 களின் மக்களுக்கு இன்ப நினைவலைகளை இனிமையாய் மீட்டு கொடுக்கும் , எனக்குக் கொடுத்த திரைப்படம் தான் குரங்கு பெடல். நான் ஒன்னும் கிராமத்தில் வளர்ந்தவன் இல்லை. ஆனால் காஞ்சிபுரம் மாதிரியான ஒரு டவுனில் எங்களுக்கு ஒரு குசால் சா இருந்தார் , அவர் ஹவர் சைக்கிள் வச்சிருந்தார் , நாங்களும் ஓட்டி இருக்கோம் , பந்தயம் வைச்சிருக்கோம் , விழுந்து முட்டி எல்லாம் பேத்து இருக்கோம் , பார்த்துக்குங்க. சைக்கிள் … அதுதாங்க வாகனம். நம்ம மனசறிந்து நடக்கும் ஒரே வாகனம் அதுவே. இன்னைக்கு வரை அரை டிரவுசரில் இருக்கும் குசால் சா அப்போது வகை வகையாய் சைக்கிள் வைத்திருந்தார். வேகவதி பாலத்தின் கரையோரத்...