Skip to main content

Posts

Showing posts with the label ஆதி வள்ளியப்பன்

நீ கரடி என யார் சொன்னது? - நூல் அறிமுகம்

ஒரு கரடி குளிர்கால உறைபனிக்கு பாதுகாப்பாய் கொஞ்ச காலம் தூங்கி எழுந்து பார்த்தா... காட்டைக் காணோம்... அங்கே ஒரு தொழிற்சாலை இருக்கு... என்ன இடம் இதுன்னு தயங்கி தயங்கி கரடி உள்நுழைய... கரடியை கண்டு பயப்படாம வாப்பா என்ன வேஷம் போட்டுட்டு வந்தா விட்டுறவமா என வேலை செய் என தொழிற்சாலை அதிகாரி நிர்பந்தம் செய்ய... இல்லங்க, நான் கரடிதான் மனுஷன் இல்ல என கரடி கெஞ்ச.... இல்லவே இல்ல, நீ கரடி வேஷத்துல மனுசன் என எல்லா அதிகாரிகளும் கடைசியாய் முதலாளியும் சொல்ல.. குழப்பமடைந்த கரடி வேறு வழியின்றி  வேலை செய்ய.. மீண்டும் பனிக்காலம் வந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட.. கரடிக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?... அட போங்க... சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய...

சர்வாதிகாரி - சார்லி சாப்ளின், தமிழில் : ஆதி வள்ளியப்பன் - நூல் அறிமுகம்

............. "பிறகு சித்திரவதை முகாம்கள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். போர்த்தந்திர வியூகம் வகுக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார். ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவரை அப்படியே விட்டுவிட்டு சட்டென்று தொலைபேசியில் பேசப் போய்விடுகிறார். தன் ஓவியம், தன் சிற்பத்துக்கு சட்டென "போஸ்" கொடுத்துக் கொண்டு நிற்கிறார். அடுத்த நிமிடம் வெளியே வந்துவிடுகிறார். இப்படியாக சர்வாதிகாரியின் ஒரு நாள் சுறுசுறுப்பாகவும் ப ரப்புரடனும் நகர்கிறது. அதேவேளை, பெரும் குழப்படியாகவும் இருக்கிறது.” மேற்கண்ட வாக்கியங்கள் படிக்கையில் உங்கள் மனதுக்கு உடனே வரும் அந்த நபரின் முகம் எப்படி இருக்கிறது? அவர் யாராக இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இதுதான் இந்தப் புத்தகத்தின் இலக்கு. அவரது சித்திரம் குறித்த உங்களின் சரியான மதிப்பீடே இந்தப் புத்தகத்தின் வெற்றி. அநேகம் பேர் சரியான நபரை உத்தேசித்திருப்பீர்கள் என்பது திண்ணம். மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை,...

எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்? - நூல் அறிமுகம்

யுரேகா என குதிக்கனுமா, யாஹூ என கூவனுமா என தெரியலை. அட, இப்படி ஒரு புத்தகமா என சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று அப்படி ஒரு சம்பவம். ஆமாங்க, பாரதி புத்தகாலயம் - ஆதி வள்ளியப்பன் சூப்பர் கூட்டணி மீண்டும் ஹிட் அடிச்சுடுச்சு. புக்ஸ் பார் சில்ரனின் அடுத்த சூப்பர் டூப்பர் படைப்பு. "எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்? - டாக்டர் சூஸ் அவர்களின் ஸ்ணூப்பிஸ் மொழிபெயர்ப்பு. "கரடி என என்னை யார் சொன்னது?" என்னும் சூப்பர் படைப்பு போலவே இதுவும் சூப்பர் வகையறா. ஆதி வள்ளியப்பன் நூல் தேர்வு கவனித்த க்கது. ஒரு கற்பனை கதையாடல் மூலமாக சமூக அவலங்களை சொல்வது என்பதும் அது சுவையாக சொல்வது என்பதும் அவசியம். டாக்டர் சூஸ் அவர்களின் கதை பலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான் படிக்கிறேன். ஒரே உயிரின வகைகளின் இரு வகைகளும், அதன் வகைப்படுத்துதல் காரணமும், அதனால் எழும் உயர்வு தாழ்வும், அந்த வேறுபாட்டை தனது லாபத்திற்கு பயன்படுத்தும் ஒருவரும் என அட கிட்டத்தட்ட கதையவே சொல்லிட்டேனே. இனி, நீங்க அவசியம் வாங்கி படித்துக் கொள்ளுங்க. முதல் முறையா அப்படியே அந்தப் புத்தகத்தை படித்து காண்பித்தேன் எ...