Skip to main content

Posts

Showing posts with the label ரமேஷ்பாபு

யார் கைகளில் இந்து ஆலயங்கள்

கோயில்கள் சூழ் ஊரில் பிறந்தவன் நான் . தடுக்கி விழுந்தால் கோயில்கள் என காஞ்சிபுரத்தில் சைவ , வைணவ , ஜைன காஞ்சிகளில் உள்ள பல கோவில்களுக்கும் சென்றுள்ளேன் . சொல்லப் போனால் 1990 களில் மக்கள் நாளொன்றுக்கு ஒரு கோவில் செல்வது வழக்கம் . செவ்வாய் குமரக்கோட்டம் , புதன் ஒரு கோயில் , வியாழன் குரு கோவில் , வெள்ளி காமாட்சியம்மன் , சனி பெருமாள் கோவில் , ஞாயிறு கோனேரிகுப்பம் அம்மன் என எல்லா நாளும் ஏதோ ஒரு கோவிலுக்கு மக்கள் செல்வர் . எங்கோ ஒரு கோவிலில் ஏதோ ஒரு விசேஷம் என வருடந்தோறும் ஏதோ கொண்டாட்ட மனநிலை . வாரந்தோறும் வெள்ளி தேர் , வருடத்திற்கு ஒரு பெருமாள் தேர் , கருட சேவை என பஞ்சமே இல்லை . அப்படியொன்றும் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று எனக்கு இருந்ததாக எப்போதுமே நினைவில் இல்லை . ஆனால் கோயில்கள் செல்வது என்பது காஞ்சி நகர் வாசிகளுக்கே உள்ள பழக்கம் போல . எப்படி ஶ்ரீதர் கபேவில் ரவா தோசை சாப்பிடுவதோ , இந்தியன் காபி ஹவுஸில் சாம்பார் இட்லி சாப்பிடுவதோ , கனக விலாஸில் காபி சாப்பிடுவதோ அதை போல கோயில் செல்வதும் காஞ்சி நக...