Skip to main content

Posts

Showing posts with the label புத்தகம்

கொடி காட்ட வந்தவன் - சிறார் நாவல்

  கொடி காட்ட வந்தவன் – இந்நூலினை வாங்க முன்பதிவு செய்யுங்கள் என விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் ஆதி வள்ளியப்பன் என முகநூலில் இட்ட மாத்திரமே முடிவு செய்து புத்தகத்தை முன் பதிவு செய்து பெற்றேன். நேற்றுதான் இப்புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. இடையில் இவர்களின் முகநூல் பக்கத்தில் இப்புத்தகத்தின் அறிமுகவிழா நடந்ததையும் அதில் பேசியவர்கள் பேச்சு காணொளியாக கிடைப்பதையும் போட்டிருந்தார்கள். அதில் எழுத்தாளர் பாலபாரதியும் இடம் பெற்றிருந்தது வேறு இன்னும் சுவாரசியத்தை கூட்டியது. அப்புறம் என்ன, வந்து சேர்ந்த உடனே வாசிக்க துவங்கினேன். சின்ன புத்தகம் தான். வாசிக்கவும் எளிது. நடையும் சரளமாக இருந்தது. இப்புத்தகத்திற்கும் எனக்கும் ஒரே வயது. புத்தகம் கூட மறுபதிப்பு கண்டுவிட்டது. புத்தக வாசிப்பு அனுபவத்திற்கு போவதற்கு முன் இப்புத்தகத்தை தேடி கண்டடைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறார் நூலாசிரியர் ரேவதி அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு அனுபவமாக இது இருந்திருக்கும்? நினைக்கையிலே சிலிர்க்கிறது. ஒரு அரசியல் வரலாற்று நிகழ்வுப்போக்கினை குழந்தைகளுக்கு எப்படி கடத்துவது? காந்தி என்ற தனிமனிதர் அல்லர், காந்தியி...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...

மந்திரக்குடை - சிறார் நாவல்

  சிறார் நாவல் அல்லது குழந்தைகளுக்கானது என்று வெளியாகும் பலதையும் படித்திடும் பழக்கம் எனக்கு உண்டு. அதில் இரண்டு பலனுண்டு. ஒன்று, என் குழந்தைகளுக்கு புதிதாக கதை கிடைப்பது. மற்றொன்று 44 வயதை கடந்த பின்னும் இன்னும் இனித்திடும் அந்த fantasy part.   ஆக, என்னுடைய அடுத்த வாசிப்பாக இருந்தது   ஞா. கலையரசி அவர்களின் மந்திரக்குடை. குடையை வைத்து என்ன மந்திரம் செய்துவிட முடியும், குடையை பிடித்து கொண்டு பறக்கலாம் என்பதே முதலில் வரும் கற்பனை. சரி, பறக்கிறார்கள் அல்லது பறக்கிறாள்(ன்) .. அப்புறம்? பறந்து எங்கே செல்கிறார்கள்? என்ன ஆனது? ஒருவர் மட்டுமே பறந்தனரா அல்லது பழங்கதை ஒன்றில் வருவது போல இந்திரனின் ஆனையை தொடர் சங்கிலியாக பிடித்து பின் கீழே விழுந்த கதை போலவா? பறப்பதல்லாமல் குடை மழையிலிருந்து வெயிலிலிருந்து காத்திட்ட போதும் வேறு ஏதும் பொத்துகிட்டு வர வழிவகை செய்கிறதா? கடலில் படகாக மாறி ஒரு புதிஅய் உலகை காட்டியதா குடை? …………. படித்துப் பாருங்கள். விலை குறைவுதானே! சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நிச்சயமாய் புக்ஸ் பார் சில்ரனின் படைப்பில் வரவேற்க்கத்க்க ஒன்று என எனக்குத் தோன்றுகிறது. ...

கயிறு - விஷ்ணுபுரம் சரவணன்

  பாரதி புத்தகாலயத்தின் வாத்து ராஜா விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கிளாசிக். ஏற்கெனவே வாசித்து விட்ட போதிலும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் மற்றொரு புத்தகம். அதைத் தொடர்ந்து அவரது சிறார்களுக்கான கதைகளை தேடி தேடி வாசித்து வருகிறேன் கடந்த செவ்வாய் அன்று (30.11.21) அன்று இரவு தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் ஸ்பேசில் தோழர் இ.பா.சிந்தன் சமூக சிந்தனையை தூண்டும் சிறார் புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக வலைத்தளங்களில் வெட்டி அரட்டையை விட்டொழித்து உருப்படியாக செயலாற்றுவது என தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் மக்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வுரையில் இ.பா. சிந்தன் சில புத்தகங்களைப் பட்டியலிட்டார். அவை கொ.மா.கோ இளங்கோவின் சஞ்சீவி மாமா, பச்சை வைரம், உதயசங்கர் தோழரின் மாயக்கண்ணாடி, சோசோவின் விசித்திர கதை முதலியன. இதில் சஞ்சீவி மாமா பச்சை வைரம் மாயக்கண்ணாடி ஆகியவை ஏற்கெனவே நான் வாசித்துவிட்டேன் என்பதும் அவை உண்மையிலேயே மிக தரமானவை என்பதற்கும் அவை பெற்ற விருதுகளே சாட்சி. இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படித்திட கோருகிறேன். இந்தப் பரிந்துரையில் அவர் சொன்ன மற்றொரு புத்தகம் தான் விஷ்ணுபுரம்...

லால் சலாம் - நூல் அறிமுகம்

வணக்கம் தோழர் லெனின் அவர்களே! யார் சொன்னது நீங்கள் இறந்துவிட்டதாக? இறந்த பின்னாலும் அவரது செய்கைகளின் மூலமாக நினைக்கப்படுகிற மாமேதைகளில் ஒருவராக நீங்கள்! இப்படி ஆரம்பித்து பாய்ச்சல் வேகத்தில் ஒரு 32 பக்கங்களில் ஒரு மாமேதையின் வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளையும் வெகு சுவைபட சொல்லி நிற்கும் புத்தகம் இது. அநேக வகைகளில் வாழ்க்கை வரலாறுகள் நாம் படித்திருப்போம். அறிஞர் சாமிநாத சர்மாவின் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு தொடங்கி எண்ணற்றோரின் வாழ்க்கை வரலாறு ஆக்கங்கள் நாம் வாசித்திருப்போம். குறிப்பாக தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்களின் statistics வகை, தோழர் அருணன் அவர்களின் அழகிய தமிழ் வகை, சமீபத்தில் தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய சிறார்களுக்கான மார்க்ஸ் லெனின், தோழர் சுப்பாராவ் அவர்களின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் பல வகைகளில் ஏராளனமானவற்றை படித்திருப்போம். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எழுதப்படும் தலைவரையே விளித்து அவருடன் பேசும் வகையிலான என மாறுபட்ட வகை வாழ்க்கை வரலாறு இது. என்னவென எழுதுவது வாசிப்பு அனுபவத்தை? ஒரு 3d பிம்பமாக ஹாலோகிராம் வடிவில் காம்ரேட் லெனின் அவர்கள் முன்...

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்? - நூல் அறிமுகம்

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன் ? - இப்படி தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகம் நெடு நாளாக தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது . அட்டையில் மற்றொரு பெயர் யூமா வாசுகி . அப்புறமும் இந்தப் புத்தகம் எடுக்காமல் இருப்பது எப்படி ? இன்று காலை உணவு வேளையில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன் . இப்ப எல்லாம் 5 mins read என சில கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்களே , அது போல சொல்வதானால் இப்புத்தகம் ஜஸ்ட் 25 mins read. யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு வழக்கம் போல் அசத்தல் , தமிழ் வாசம் . எம் . எம் . சுசீந்திரன் குழந்தைகளுக்கு வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியர் போலும் . என்ன அழகாக கிரேக்க நாகரீகம் குறித்து பாடம் எடுக்கிறார் . ஒரு மகளுக்கும் அப்பாவிற்கும் இடையே நடக்கும் உரையாடலே இது . எனக்கென்னவோ குறைந்தபட்சம் non-detail எனப்படும் புத்தகமாவது குழந்தைகளுக்கு இப்படி இருக்கலாம் என தோன்றுகிறது . ( சரி , நான் படிச்ச 20 வருஷம் முன்பு இருந்தது நான் டீடெய்ல் புத்தகம் இப்போது இருக்கா ?). கிரீஸ் என தற்போது அழைக்கப்பட்டும் நாடு உலக வரைபடத்தில் என்ன மாதிரி உருவத்துடன் இருக்கிறது என்றால் , " எலும்புகூட்டின் கைவிரல் போன்று...

நிழல் இராணுவங்கள் - இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் - நூல் அறிமுகம்

இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்? எங்கள் மீது அவர்களுள் இத்தனை வன்மமா? இந்த வன்மம் திடீரென்று அவர்களுள் வந்துவிட்டதா, இல்லை அந்த வன்மம் அவர்கள் மனதில் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது, இப்போது திடீரென்று பொங்கியதா? அவர்களின் இத்திடீர் வன்மம் ஏற்பட நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? – கலவர பூமிகளில் பாதிக்கப்பட்ட வா ழ்விழந்த மத சிறுபான்மையினர்களின் கேள்விகள் தான் இவை. இங்கே இந்திய திருநாட்டில் பெரும்பாலும் கலவரங்களின் பொது இரை இஸ்லாமியர்களே. எப்படி இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு மீதான மத துவேஷத்திற்கு இரையானார்கள்? இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 90 சதமானமாக இருக்கும் இந்து மக்களுக்கு வெறும் 5.3 சதமானம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களின் மீதான பயம் ஏன்? ஆர்.எஸ்.எஸ் ஒரு டிசிப்பிளின் சொல்லிக் கொடுக்கிற, தேசபக்தியை ஊட்டுகிற ஒரு அமைப்பு, அவ்வளவே. அதை போய் நாட்டில் நடக்கிற கலவரங்கள் பலவற்றிற்கும் பங்காளிகள் ஆக்குவது சரியா? ஆங்காங்கே தீவிரவாத குணம் கொண்ட இந்து அமைப்புகள் சில செய்யும் ...

சர்வாதிகாரி - சார்லி சாப்ளின், தமிழில் : ஆதி வள்ளியப்பன் - நூல் அறிமுகம்

............. "பிறகு சித்திரவதை முகாம்கள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். போர்த்தந்திர வியூகம் வகுக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார். ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவரை அப்படியே விட்டுவிட்டு சட்டென்று தொலைபேசியில் பேசப் போய்விடுகிறார். தன் ஓவியம், தன் சிற்பத்துக்கு சட்டென "போஸ்" கொடுத்துக் கொண்டு நிற்கிறார். அடுத்த நிமிடம் வெளியே வந்துவிடுகிறார். இப்படியாக சர்வாதிகாரியின் ஒரு நாள் சுறுசுறுப்பாகவும் ப ரப்புரடனும் நகர்கிறது. அதேவேளை, பெரும் குழப்படியாகவும் இருக்கிறது.” மேற்கண்ட வாக்கியங்கள் படிக்கையில் உங்கள் மனதுக்கு உடனே வரும் அந்த நபரின் முகம் எப்படி இருக்கிறது? அவர் யாராக இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இதுதான் இந்தப் புத்தகத்தின் இலக்கு. அவரது சித்திரம் குறித்த உங்களின் சரியான மதிப்பீடே இந்தப் புத்தகத்தின் வெற்றி. அநேகம் பேர் சரியான நபரை உத்தேசித்திருப்பீர்கள் என்பது திண்ணம். மௌனப் படங்களின் தன்னிகரில்லாத நாயகன் என அறியப்படும் சார்லி சாப்ளின் அவர்கள் பேசி நடித்த ஒரே படம், “The Great Dictator”. யூடியூப்பில் இன்றும் அதை கண்டு மகிழலாம். அந்தப் படத்தின் கதை வசனத்தை,...

நீலத்தங்கம் - இரா. முருகவேள் : : புத்தக அறிமுகம்

இந்த புத்தகத்தை யாரெல்லாம் படிக்கலாம்? கோயமுத்தூர் வாசிகள் முதலில் படிக்க வேண்டும். நம் ஊரில் என்ன நடக்கிறது அதன் பின்னணி என்ன என்பதை நாமே அறியாவிட்டால் எப்படி? அடுத்து திருப்பூர் நாகர்கோவில் வாசிகள் மற்றும் சென்னை வாசிகள். அப்புறம் என்ன, விரைவில் தமிழகமெங்கும் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக உள்ளதால் எல்லா தமிழக மக்களும். ஸ்மார்ட் சிட்டி கோதாவில் பல விஷயங்கள் நடந்து வரும் புதுச்சேரி மக்களுக்கு இந்த அபாய பின்னணி தெரியவேண்டியது அவசியம். சரி, அப்புறம் யாரெல்லாம் படிக்க வேண்டும ் என்கிறீர்களா? எப்போதும் மக்களுக்காக களம் காணும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவசியம் வாங்கிப் படித்தாக வேண்டும். களத்தில் அறிவு இன்றி எப்படி? அப்புறம் தலித் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக சொல்லி நிற்கும் கட்சியினர் அதன் உறுப்பினர்கள். ஏனென்றால் எப்போதும் பாதிப்பு அடித்தட்டு மக்களுக்கு தான் முதலில் நேரும். சரி, இவர்கள் படித்தால் மட்டும் போதுமா? தரமான குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்றும், நீர் என்பது வணிக பொருளல்ல எப்போதும் என நினைப்பவர்களும், இந்த கம்யூனிஸ்டுகள் எப்போதும் பயமுறுத்துவத...

பிறிதொரு பொழுதில் - ஒரு போராளியின் அனுபவங்கள்

நாள்தோறும் நான் காணும் மனிதர்கள், சூழல்கள் இவற்றில் நாம் எவ்வாறு “வினை” புரிகிறோம் என்பது ஒரு முக்கியமான அரசியல். அந்த அரசியலை முன் வைக்கிறது பரிந்துரைக்கிறது இந்த நூல் என்றே நினைக்கிறேன். ரமேஷ் பாபுவின் எழுத்துக்கள் எனக்குப் புதிதல்ல. ஆனாலும் ஒன்றாக தொகுப்பாக பார்க்கையில் இன்னும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த நூலில் சமூகத்தின் இருண்ட வெளி மக்கள் மீதான கனிவும், அவர்களின் தேவை குறித்த புரிதலும், அவர்களோடு உறவாட, இணைந்து செயல்பட நினைக்கும் பரிவும், வரலாற்றை மறுவாசிப்பு செய்தலும் என எல்லாம் இருக்கிறது. ”மனிதர்களை உற்றுப் பார்ப்போம்”- இந்த நூலில் ஆக சிறந்தது என நிச்சயமாய் சொல்லலாம். மேம்பாலத்தில் வாழ்க்கை நடத்தும் முதியவர் ஒருவரோடு ரமேஷ் பாபு நிகழ்த்திய உரையாடல். நான் அன்றாடம் சந்திக்கும்(கண்ணுறுகிறோமா?!) சாதாரணர்கள் பின்னான வாழ்க்கை குறித்த ரமேஷ் பாபுவின் பார்வை நிச்சயமாய் நாமும் கை கொள்ள வேண்டியது. கணப்பொழுதுவில் இம்முதியவர்களை நாமும் கடந்து வருகிறோம், பல சமயங்களில் நம் சிந்தனையில் அவர்கள் பதிவதுமில்லை. மேம்பால கைப்பிடிச் சுவர்களும் இவர்களும் ஒன்றாகவே காலப்போக்கில் நமக்கு படுகிறது. அ...

பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்

பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிமுகமான பெயராக இருக்கிறார். வாழ்த்துக்கள்.  அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி நூலினை தொடர்ந்து அவர் இந்தியாவில் எப்போதோ நிகழ்த்திய உரையாடலினை (கவனிக்கவும், உரையல்ல!) சற்றும் சளைக்காமல், ஒரே நேரத்தில் தமிழிலும், அதன் ஆங்கில மூலத்தினையும், விற்பனை சந்தை குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல், சமூக கடமையாக மட்டுமே கருதி அச்சிட்டு வெளியிடும் அவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் அப்புத்தகங்களை, “இருளும் ஒளியும்” நூலில் தோழர் ச. தமிழ்செல்வன் சொல்வதைப் போல தோள் வலிக்க ஏந்தி பொதுவெளியில் சேர்ப்போம். அது ஒன்றே நம் கடமை. நிற்க. பாவ்லோ பிரையரே குறித்து இன்னமும் இன்னமும் ஏதாவது செய்திகள் கிடைக்காதா, அவை நமக்கு ஏதேனும் சொல்லிச் செல்லாதா என ஒரு அதிகாலை வேளையில் இணையத்தை துழாவிய போது ஒரு அதிசயமான, ஆச்சரியமான செய்தி கிடைத்தது. இன்னமும் மாறா புல்லரிப்போடே தொடர்கிறேன்.  ஆண்டு 1962, இடம் பிரேசில் நாடு. MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும...