காட்டுக்குள் சென்று மரங்களை வெட்டியதால் அவர்களை போலீஸ் பிடித்து சென்றது. புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதால் அவர்கள் வீடு இடிக்கப்பட்டது. நடை பாதையில் தடை போட்டதால் கடை இடிக்கப்பட கடை வைத்தவர்கள் கைதானார்கள். இப்படித்தானே செய்திகளை கேட்டு நாம் பழகி இருக்கிறோம். அதில் என்ன தவறு நடைபாதை நடப்பதற்கு அல்லவா, புறம்போக்கு நிலத்தில் எவர் வேண்டுமானாலும் வீடு கட்டலாமா, காடுகள் அழிக்கப்பட்டு என்ன ஆகும் என்ற கேள்விகள் நம்முள் வராமலா இருக்கின்றன? இதே கேள்விதான் நம்மைப்போன்ற ஒருவர் மாமே தை காரல்மார்க்ஸ் இடம் எழுப்பினார். அதற்கு காரல்மார்க்ஸ் சொன்ன பதில் என்ன? வெறும் 20 ரூபாய்க்கு அழகிய வண்ணப் படங்களுடன் பாரதி புத்தகாலயம் பலபல வண்ணத் தாளில் தோழர் மார்க்ஸ் அவர்களின் பதிலை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிச இயக்க வரலாறு நூற்றாண்டு காலத்தில் இந்தப் புத்தகம் பாரதி புத்தகாலயம் நிறுவனத்தின் நல்வரவு. மாமேதை காம்ரேட் மார்க்ஸ் என்ன சொல்லியிருப்பார்? தோழர்களே நண்பர்களே அதை இந்த புத்தகத்தை வாங்கி தெரிந்து கொள்ளுங்கள். இந்த புத்தகத்தில் கடைசி பக்கத்தில் தோழர் மார்க்ஸ் சொல்கிறார்...