Skip to main content

Posts

Showing posts with the label அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி - அ. கரீம்

பு த்தக கண்காட்சியில் பிப்ரவர் மாதம் வாங்கியது. அப்படியே தினமும் என்னைப் படி படி எனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அது சரி, இது போன்ற இன்னும் சில புத்தகங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, அதற்கு என்ன செய்ய இயலும்? எழுத்தாளருக்கு எழுத்து வர ஒரு mood தேவைப்படுவது போல வாசகருக்கும் வாசிக்க ஒரு mood தேவைப்படுகிறது. அப்படியான ஒரு மூடில் வாசிக்கத் துவங்கி ஒரே மூச்சில் முடித்த புத்தகம் தான் நண்பர் தோழர் அ. கரீம் அவர்களின் 'அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி'.   நான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த எதிர்ப்பார்ப்பை, சிதார் மரங்கள்... தாண்டி அகல்யாவுக்கும் ஒரே ரொட்டி அப்படியே தக்க வைத்துள்ளது. அதே வார்த்தைகளின் எளிமை, எளிய மனிதர்களின் வாழ்வு கூடியவரைக்கும் அச்சு அசலாய், தேவையற்ற வார்த்தைகள் திணிப்பு என இல்லாமல் சிறப்பாய் இருக்கு இத்தொகுப்பும் என சொல்லலாம்.    முதலிலேயே சொல்லிவிடுகிறேன் அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, பஷீரின் கடைசி கிடாய், அன்பே ஆசியா... என இவை மூன்றோட...