Skip to main content

Posts

Showing posts from 2016

அதிகாரம் அறிதல் - மீட்சி (ஒல்கா)

இதிகாச ப் புராணங்கள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை , அநேகமாக எக்காலத்தும் . சிறு வயதில் அதன் மாயங்களில் மகிழ்ந்தும் , பின் அதன் வீரத்தில் வியந்தும் , பின் அதன் வளத்தில் கிறங்குவதுமாக இதிகாச புராணங்கள் இருக்கின்றன . நம் நாட்டின் இதிகாசங்களான மகாபாரதம் , ராமாயணம் என இவை இரண்டுமே அநேகரை எப்போதோ ஒரு வயதில் வசீகரித்திருக்க கூடியவையே என்பதில் ஐயமில்லை . இப்புராணங்கள் மூலம் , தோன்றிய கால , உள்ளடகத்தின் நம்பகத்தன்மை ஆகியவை எப்போதுமே விவாதத்திற்கு உரியவை . ராமனும் , சீதையும் , கிருஷ்ணனும் , அனுமானும் , பரதனும் , வாலியும் , வீமனும் இன்றும் நம்மோடு கலந்துள்ள பெயர்களே . நாடு முழுவதும் ஏதோ ஒரு பெயரில் ராமனாக , கிருஷ்ணனாக , அர்ச்சுன்னாக , சீதையாக , பாஞ்சாலியாக பலரை காணலாம் . எனக்கென்னவோ ராமாயணமே ரொம்ப இஷ்டம் . கம்பனும் ஒரு காரணமோ . ஆனால் , நிச்சயமாய் சொல்லலாம் என் தமிழ் ஆர்வத்திற்கு கம்பன் கழகமே காரணம் . சிறுவயதில் இராமனின் வீரத்தில் , அனுமனின் சூரத்தனத்தில் என இராமாயணம் பிடித்திருந்தது . ஒரு சமயத்தில் வாலி மீது இழைக்கப