சந்திராயன் விண்கலம் வானில் பறந்தது . மங்கல்யான் மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது . இவையெல்லாம் செய்தியாகவே ( பெருமிதமான ) இருந்தன . எப்பொழுது அந்த மங்கல்யான் விண்கலம் உருவாக்கத்தில் , செயல்பாட்டில் பெண்கள் தான் பின்னணி என்னும்போது தான் சுவாரசியம் தட்டியது . அட , இது என்னப்பா புது விஷயம் என ஆர்வம் கூடியது . உடனே அவர்கள் யார் எங்குள்ளனர் என்பது குறித்த விபரங்கள் தேடுகையில் டிவிட்டரில் இந்தப் புத்தகம் பிடிபட்டது . { டிவிட்டரில் உள்ள புத்தக பிரியர்கள் அவசியம் அக்ஷ்யா முகுல் அவர்களின் டிவிட்டர் ஹேண்டிலை பின் தொடர்க ). மின்னி வைடு என்பவர் எழுதிய THOSE MAGNIFICIENT WOMEN AND THEIR FLYING MACHINES- ISRO'S MISSION TO MARS.. செவ்வாய் கிரகத்தை சுற்றி அது குறித்த செய்திகளை கண்டறிய நம் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விண்கலமே மங்கல்யான் . கொஞ்சம் போல வானியல் குறித்த ஒரு அடிப்படை அறிவு தேவைப்படுகிறது இப்புத்தகத்தை வாசிக்க . அதே சமயம் , சின்ன சின்னதாய் வானியல் குறித்தும் , செவ்வாய் கிரகத்தினை குறித்தும் , இஸ்ரோவின் விண்கலங்கள் உருவாக்கம் முதல் அவை வ...