சந்திராயன்
விண்கலம் வானில் பறந்தது.
மங்கல்யான்
மார்ஸ் எனப்படும் செவ்வாய்
கிரகத்தை சுற்றி வருகிறது.
இவையெல்லாம்
செய்தியாகவே (பெருமிதமான)
இருந்தன.
எப்பொழுது
அந்த மங்கல்யான் விண்கலம்
உருவாக்கத்தில்,
செயல்பாட்டில்
பெண்கள் தான் பின்னணி என்னும்போது
தான் சுவாரசியம் தட்டியது.
அட,
இது
என்னப்பா புது விஷயம் என
ஆர்வம் கூடியது. உடனே
அவர்கள் யார் எங்குள்ளனர்
என்பது குறித்த விபரங்கள்
தேடுகையில் டிவிட்டரில்
இந்தப் புத்தகம் பிடிபட்டது.
{டிவிட்டரில்
உள்ள புத்தக பிரியர்கள்
அவசியம் அக்ஷ்யா முகுல்
அவர்களின் டிவிட்டர் ஹேண்டிலை
பின் தொடர்க).
மின்னி
வைடு என்பவர் எழுதிய THOSE
MAGNIFICIENT WOMEN AND THEIR FLYING MACHINES- ISRO'S MISSION TO
MARS.. செவ்வாய்
கிரகத்தை சுற்றி அது குறித்த
செய்திகளை கண்டறிய நம் இஸ்ரோவால்
அனுப்பப்பட்ட விண்கலமே
மங்கல்யான். கொஞ்சம்
போல வானியல் குறித்த ஒரு
அடிப்படை அறிவு தேவைப்படுகிறது
இப்புத்தகத்தை வாசிக்க.
அதே
சமயம், சின்ன
சின்னதாய் வானியல் குறித்தும்,
செவ்வாய்
கிரகத்தினை குறித்தும்,
இஸ்ரோவின்
விண்கலங்கள் உருவாக்கம்
முதல் அவை விண்ணில் செலுத்தப்படும்
வரையிலான பல விஷயங்கள் புதிதாக
சுவாரசியமாக இருக்கின்றன..
அவையும்
புத்தகத்தை தொய்வில்லாமல்
கடக்க உதவுகின்றன.
நம்ம
எடை 100 கிலோ
என பூமியில் இருந்தா அங்கே
செவ்வாய் கிரகத்தில் 64
என
இருக்குமாம். (64 என
நினைக்கிறேன், ஆனா
நிச்சயமா எடை கம்மிதான்).
கேட்கவே
சந்தோஷமா இருக்கு.
அய்யய்யோ,
சயின்ஸ்
குறித்த அதுவும் ஆங்கில
புத்தகமா என பயப்படாமல்
அணுகலாம். எளிமையாகத்தான்
இருக்கு.
ஒரு
பேலோடு (இதுதான்
அங்க வான்வெளியில் சுற்றபோவது)
தயாரிப்பில்,
அதை
ஏற்றிச் செல்லும் விண்கல
உருவாக்கத்தில், பின்
அந்த விண்கலத்தோடு இந்த
பேலோடினை வெற்றிகரமாக
இணைப்பதில், இந்த
விண்கலத்தின் வெற்றிகரமான
ஏவுவதில், மிக
முக்கியமாக அந்த நீள் வட்டப்
பாதையில் அந்த பேலோடினை சுற்ற
வைப்பதில் என மங்கல்யான்
செயல்திட்டத்தில் பல்வேறு
பெண்கள் செயலாற்றி இருக்கின்றனர்.
இதற்கே
அந்த பிராஜக்டின் தலைவர்
அருணன் சுமார் 40%
அளவிற்கு
பெண்கள் பங்களிப்பு என பெருமிதம்
கொள்கின்றார். இந்த
அருணன் தான் இத்திட்டத்தில்
பெண்களை நம்பி ஒப்படைத்தது.
இந்த
மங்கல்யான் போலவேதான் பல
திட்டங்களிலும்.
ஆனால்
இதில் சிறப்பு என்னவென்றால்,
எக்ஸியூட்டிவ்
மற்றும் கிரியேட்டிவ் ஆகிய
மிக முக்கியமான இடங்களில்
பெண்கள் இருந்ததுதான்.
மின்னி வைடு இந்தப் பெண்களை அணுகி அவர்களை அறிய முயல்கிறார். அதே சமயம் அவர்கள் வேலையையும் புரிந்து கொள்ள முயல்கிறார். இரண்டையும் நமக்கு தரும்போது இந்தப் புத்தகத்தின் சுவாரசியம் கூடுகிறது. பெண்களின் பங்களிப்பு இருந்தாலும், பெண்கள் என ஒதுக்குதல் இல்லை என்றாலும், பெண்கள் இன்னமும் இஸ்ரோவின் டைரக்டர் ஆகவில்லை என்பது உண்மை. இரண்டாவது, இஸ்ரோவில் கணவன் மனைவியாய் இருவரும் அந்த துறையில் வேலை பார்ப்பது இயல்பான ஒன்று என்றபோதும், அப்படியாக இல்லாத பெண்களும் தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு கால நேரம் தெரியாமல வேலையில் கவனம் செலுத்த முடிகிறது. ஒருவர் பிரசவத்திற்கு அலுவலகத்திலிருந்து நேரே மருத்துவமனைக்கு சென்ற நிகழ்வும் இருக்கிறது. அநேக சயிண்டிஸ்டுகள் தெய்வ நம்பிகையோடே இருக்கிறார்கள். சிலர் விதிவிலக்காவே இருக்கிறார்கள். தெய்வ நம்பிக்கையோடு இருந்த போதும் ஒரு சிலர் தாங்கள் தம்மை தாண்டி ஒரு விஷயம் என்பதாகவே கடவுளை நம்புவதும், அதே சமயம் சடங்குகளை மறுத்தும் வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
ஐஐடியில்
படித்தவர்களாக பெரும்பான்மையானோர்
இருப்பதில்லை என்பது ஒரு
முக்கிய செய்தி.
இதுவரையில்
அங்கே இருப்பவர்கள் மற்ற
எல்லா துறையையும் போலவே அரசுப்
பள்ளியில் படித்தவர்களாகவே
இருப்பதை அறிய முடிகிறது.
அது
போலவே சயின்ஸின் மற்ற படிப்புகளை
படித்தவர்களாக இருப்பதும்
முக்கியமானது. இங்கேதான்
+1 +2 படிப்புகளில்
அரசுகள் செகண்ட் குரூப்
எனப்படும் பியூர் சயின்ஸ்
வகுப்புகளை மூடுவதை நாம்
கவலையோடு பார்க்க முடிகிறது.
1000 கோடி
ரூபாய் செலவு செய்து ராக்கெட்
அனுப்பி என்ன? இங்கே
மண்ணில் மலம் அள்ளுதல் உள்ளிட்ட
இழி செயல்கள் மனிதனைக் கொண்டே
நடப்பது தொடர்கிறதே என்ற
கேள்விக்கு ஒரு பதிலும்
இப்புத்தகத்தில் கிடைக்கிறது.
முதலில்
வெளிநாடுகள் செய்வதை போல
இங்கே அதீத பொருட்செலவில்
விண்கலங்கள் அனுப்பப்படுவதில்லை.
இப்புத்தகத்தில்
ஒரு இடத்தில், மார்ஸ்
கிரகத்திற்கு நாசா செலவு
செய்தது சுமார் 650
கோடி
டாலர், மார்டியன்
என்ற படத்திற்கு ஹாலிவுட்
செலவு செய்தது ரூ.116
கோடி
டாலர், ஆனால்
இஸ்ரோ செலவு செய்தது ரூபாய்
74 மில்லியன்
டாலர் மட்டுமே. இன்னொரு
வகையில் சொல்வதானால்,
இந்தியர்
ஒவ்வொவருவம் ரூ.4க்கும்
குறைவாகவே அவர்கள் பங்களிப்பு
இருந்திருக்கிறது.
இதில்
இஸ்ரோ மிச்சப்படுத்தி சில
தொகையும் அரசுக்கு திருப்பி
கொடுத்திருக்கிறது.
வெறும்
வான்வெளி ஆராய்ச்சிக்கு
மட்டுமல்ல, இத்தேசத்தின்
கடல் வளம், மண்
வளம் ஆகியவற்றை துல்லியமாக
அறிந்து மக்களுக்கு உதவவும்,
உத்திராகாண்ட
பகுதியில் மேகவெடிப்பு நிகழ
உள்ளதை கணித்து சிலரை
காப்பாற்றியது, புயல்
காலங்களில் சரியாக கணித்து
சொல்லும் சாடிலைட் செயல்பாடுகளில்
இஸ்ரோ மிகுந்த முக்கியத்துவம்
செலுத்துகிறதை அறிய முடிகிறது.
என்ன
நடக்கிறது என்பதே எவருக்கும்
தெரியாமல் வெறும் சாடிலைட்கள்,
ராக்கெடுகள்
அனுப்பிக் கொண்டிருந்த இஸ்ரோ
மங்கல்யான் சமயத்தில் அது
குறித்த விஷயங்களை நிகழும்
காலத்தே சமூக வலைத்தளங்களில்
சொன்னதும் மிக முக்கியமானது.
அந்த
முடிவினை எடுக்கவும் ஒரு
பெண்ணே தேவைப்படுவதும்
முக்கியமாகிறது.
அரியலூர்
மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி
என்பவர் இஸ்ரோவில் மிக முக்கிய
பங்களிக்கிறார் என்னும்
செய்தியை படிக்கிறபோது அனிதா
நினைவுக்கு வராமலில்லை.
ஆக,
சரியாக
சமமாக வாய்ப்புகள் அளிக்கப்படுகையில்
பெண்களும், ஒடுக்கப்பட்ட
இனமும் சமூக வளர்ச்சிக்கு
முன்னேற்றத்திற்கு அதிக அதே
சமயம் பொறுப்பான பங்களிக்க
முடியும் என்பதையும் பார்க்க
முடிகிறது.
நன்றி மின்னி வைட்
மின்னி
வைடு அவர்களின் சுவாரசியமான
பேட்டியை இங்கே சுட்டி
படிக்கலாம்
https://www.thehindu.com/society/minnie-vaid-on-the-women-of-isro-remarkable-stories-of-grit-and-determination/article27910839.ece
https://www.thehindu.com/society/minnie-vaid-on-the-women-of-isro-remarkable-stories-of-grit-and-determination/article27910839.ece
Comments