ஒரு கரடி குளிர்கால உறைபனிக்கு பாதுகாப்பாய் கொஞ்ச காலம் தூங்கி எழுந்து பார்த்தா... காட்டைக் காணோம்... அங்கே ஒரு தொழிற்சாலை இருக்கு... என்ன இடம் இதுன்னு தயங்கி தயங்கி கரடி உள்நுழைய... கரடியை கண்டு பயப்படாம வாப்பா என்ன வேஷம் போட்டுட்டு வந்தா விட்டுறவமா என வேலை செய் என தொழிற்சாலை அதிகாரி நிர்பந்தம் செய்ய... இல்லங்க, நான் கரடிதான் மனுஷன் இல்ல என கரடி கெஞ்ச.... இல்லவே இல்ல, நீ கரடி வேஷத்துல மனுசன் என எல்லா அதிகாரிகளும் கடைசியாய் முதலாளியும் சொல்ல.. குழப்பமடைந்த கரடி வேறு வழியின்றி வேலை செய்ய.. மீண்டும் பனிக்காலம் வந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட.. கரடிக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?...
அட போங்க... சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய்தோ அல்ல கதையாய் சொல்லியோ விவாதம் நடத்த முயலுங்கள். பசங்க ஜமாய்ப்பாங்க...
புக்ஸ் பார் சில்ரனின் வெளியீட்டில் தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்களின் மூன்றாவது புத்தகம் இது. லெனின் கதை, இளையோருக்கான மார்க்ஸ் என ரொம்ப அருமையான புத்தகங்களுக்கு அடுத்து இந்த வெளியீடு. அவசியம் வாங்குங்க
Comments