The River of Kaveri – Tulika Publishers.
சமீபத்தில் வாங்கிய புத்தகம். புத்தகத்தின் பக்கங்களில் ஒரு புறம் வரிகளில் வார்த்தைகள் தைத்து நிற்க, மறு புறம் வெறும் வரிகளாக படங்கள் வண்ணங்கள் சேர்க்கவென்று உள்ளன. குழந்தைகளை சுவாரசியப்படுத்த இப்படி ஒரு ஏற்பாடு. அபிகுட்டி ஒரே மூச்சில் படித்து அப்பா நம்ம காவேரியோட ஆரிஜின் (origin) மற்றும் endplace இரண்டுக்கும் போயிருக்கிறோம் என சந்தோஷப்பட, கீர்த்தனா குட்டியோ, சீரங்கம், காரைக்கால் பேரெல்லாம் வருது, தலைகாவிரி கூட வருதுப்பா என அவள் பார்த்திருந்த ஊர்கள் என அவளும் ஹாப்பி அண்ணாச்சி. கொஞ்சம் அச்சத்தோடேதான் வாங்கினேன், காவிரியின் கதை என்று சொல்கிறார்களே, வெறும் புவி சார்ந்து தகவல்களாக பாடப்புத்தகம் போல் இருக்குமோ என்று. அப்படியெல்லாம் இல்லை, காவிரியின் சார் உள்ள கதைகள் அநேகமும் அதன் இயல்பில் இருக்கு. அப்படியே நைசாக புவிசார் தகவல்களும் இருக்கிறது. ஒரு ஆறு அதன் கதை என்ற வகையில் இந்தப் புத்தகம் சிறப்பு. ரொம்ப அழகா, சிம்பிளா காவிரியின் பிறப்பிலிருந்து அவள் கடல் சென்று சேரும் வரை MAP இருப்பதும் அது எளிமையாக இருப்பதும் சிறப்பு.

Comments