தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்
தமிழ்
வாசகர்களுக்கு தியடோர்
பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று
போதும் புத்தகத்தை எடுக்க.
சினிமா
குறித்ததாகட்டும்,
இயற்கை
குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு
புத்தகத்திற்கு செய்யும்
ஆய்வுகள்,
எடுக்கும்
தரவுகள் என எல்லாம் அந்த
புத்தகத்திற்கு மிகவும்
சிறப்பு சேர்ப்பவை.
எளிய
மக்களை வெகுவாக கவரும் வெகுசன
கலைகளாக உருவெடுத்த மேடை
நாடகம்,
அதை
தொடர்ந்து வந்த மௌன படங்கள்,
பின்
வந்த முழுநீள பேசும் படங்கள்
ஆகியவவை 1880இல்
தொடங்கி 1945
வரைக்குமான
காலகட்டத்தில் இந்திய மக்களை
அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ்
ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட
விதமே இந்நூல்.
சும்மா
எதுவும் சொல்வதில்லை,
தியடோர்
பாஸ்கரன் அவர்கள்.
ஒவ்வொரு
தலைப்பின் பின்னும் தான்
எடுத்தாண்ட தரவுகள் குறித்து
ஒரு பெரும் பட்டியலே இடுகிறார்.
ஆம்
மக்களே,
The message bearers என்ற
பெயரில் 1981
காலகட்டத்தில்
தியடோர் பாஸ்கரன் அவர்களால்
எழுதப்பட்ட இந்நூல் 35
வருடங்களுக்கு
பின் தமிழ் வாசகர்களுக்கு
அகநி பதிப்பகத்தின் நல்ல
வடிவமைப்பில் வந்திருக்கிறது.
வெகு
சுவாரசியமான பல்வேறு தகவல்கள்
நூல் முழுக்க.
“வெள்ளை
வெள்ளை கொக்குகளா"
என
நாடக மேடையில் பாடி கே.பி.
ஜானகியம்மாள்
வெள்ளையர்களை வெரூட்டியதும்,
தியாக
பூமி என்னும் திரைப்படம்
வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டதுமே
எனக்கு நினைவில் வரக்கூடிய
சுதந்திரத்திற்கு முன்னான
நாடக திரை தகவல்கள்.
ஆனால்
இப்புத்தகம் படித்து முடித்த
பின் எவ்வளவு கலாச்சார பண்பாட்டு
தலையீடுகள் நாடகங்கள்,
மௌனப்
படங்கள்,
திரைப்படங்கள்
வழியாக தமிழக சென்னை ராஜதானி
மக்களை இந்த காலக்கட்டத்தில்
ஆட்கொண்டு இருக்கிறது என
மலைப்பாக இருக்கின்றது.
முன்னது
மேடை நாடகம்,
அதனைத்
தொடர்ந்து மௌன படங்கள்,
பின்னாக
பேசும் முழுநீள படங்கள்,
இறுதியாக
விடுதலைகால படங்கள் என நான்கு
பகுதிகளாக நூல் பிரிந்துள்ளது.
ஒவ்வொரு
பகுதி முடிவிலும் குறைந்தது
3
பக்கங்களுக்கு
மிகாமல் தரவுகள்.
அதில்
ஆசிரியரது உழைப்பு தெரிகிறது.
நவீன
மேடை நாடகங்கள் எளிதாக மக்களை
சென்றடைவதற்காக புராணங்களையே
பேசுபொருளாக முதலில் கையில்
எடுத்தன.
இதில்
சுவாரசியம் என்னவென்றால்
இதே பாதையை தான் முழு நீளப்
பேசும் படங்களும் எடுத்தன.
சமூக
நீதி,
பாலின
பேதம்,
தேசிய
விடுதலை ஆகியவை குறித்தான
பரீட்சார்த்த முயற்சிகளாக
செய்யப்பட்ட சின்ன சின்ன
தலையீடுகள் எப்படி பிரதான
கருபொருட்களாக மாற்றம் கொண்டது
என்பது தான் நாம் புரிந்து
கொள்ள வேண்டியது.
வெறும்
தலையாட்டல்கள்,
கைதட்டல்களோடு
முடிந்துவிடுகின்ற கலைஞன்
பார்வையாளன் உறவு கலை
பார்வையாளனிடம் எழுப்பும்
கேள்விகள் மூலமே தொடர்கிறது.
பின்
அந்த உறவும் அது தரும் இணக்கமுமே
கலைகளின் வடிவத்தை உள்ளடக்கத்தை
தீர்மானிக்கின்றன.
ஆம்,
இப்படித்தான்
என்பதற்கு சாட்சியாக புராணங்களை
பேசுபொருளாக கொண்டு இயங்கிய
மேடை நாடகங்கள் முழுநீள
திரைப்படங்கள் பின் எவ்விதம்
வெள்ளைக்காரர்களுக்கு தலைவலி
கொடுக்க துவங்கியது என்பதையும்
அதனால் கொண்டுவரப்பட்ட தணிக்கை
முறை இவை குறித்து இப்புத்தகம்
சிறப்பாக பேசுகிறது.
இராமர்
சீதை காதையில் கதர் சட்டை
மகிமையும்,
நாடகத்தின்
பாடல்கள் பாட்டுப் புத்தகங்களாக
வந்ததும்,
டூரிங்
டாக்கீஸ் என்ற பெயர் வந்த
விபரமும்,
கார்
உதிரி பாகங்கள் விற்பனையாளர்
படம் எடுத்ததும்,
சிறைக்கு
பின் சுப்பிரமணியம் சிவா
நடத்திய மேடை நாடகங்கள் -
அரிசி
விளைதல்-மகாபலிபுரம்
சிற்பங்கள் -
திருவிழாக்கள்
-
என
இவையெல்லாம் மௌனப் படங்களின்
கருப்பொருள்களாக ஆனதும்-
மௌனப்
படங்களை அடுத்து வந்த பேசும்
படங்களில் ஸ்லைடு போட்டு
பேசியதும் -
வசனங்களை
பேசுவதற்காக திரைக்கு முன்னதாக
ஒருவர் பேசுவதும் -
வாத்தியார்
என்ற பெயர் ஆசிரியரோடு
மட்டுமல்லாமல் கலைகளின்
ஆசான் என்பதாக மாறிய கதையும்
-
மௌன
படக் காலங்களில் ஸ்டூடியோ
என்ற ஒன்றின்றி வெறும்
வெட்டவெளியில் எடுக்கப்பட்டதும்
-
போர்
காலங்களில் சினிமாக்களுக்கு
அரசு ஆதர்வு எதிர்ப்பு -
என
சின்ன சின்ன சுவாரசியங்கள்
செய்திகள் புத்தகத்தை வெகு
சுவாரசியமாக கொண்டு செல்ல
உதவுகின்றன.
அந்தந்த
காலகட்டங்களில் அரசியல்வாதிகள்
அல்லது ஆதிக்க அரசியலை
எதிர்ப்பவர்களது ஆதரவும்,
தலையீடுமே
கலைகளை வீரியமாக்கி இருக்கிறது,
அர்த்தமுள்ள
ஒன்றாக மக்களுக்கு நெருக்கமான
ஒன்றாக மாற்றி இருக்கிறது.
கடைசியாக,
அதிகாரத்தை
மிரட்டி இருக்கிறது,
நெருக்கடிக்கு
உள்ளாக்கி இருக்கிறது,
தடை
செய்ய வைத்திருக்கிறது.
வெகுசன
மக்களின் பிரச்சனைகளை சமுக
அவலங்களை எளிதாக மக்களின்
மொழியில் சொல்கையில் அவை
உத்வேகம் பெறுகின்றன,
எழுச்சி
கொள்கின்றன.
அ.
மங்கையின்
மொழிபெயர்ப்பு சிறப்பித்து
சொல்ல வேண்டியது.
எளிய
வாக்கியங்களில் எளிதான
வார்த்தை பிரயோகங்களில்
செய்தியை வாசகர்களுக்கு
கடத்துவதில் சிரமம் ஏதுமில்லை.
தண்டோராக்காரர்கள்
என்னும் பெயரும் வெகு பொருத்தம்.
சமூக
அரசியல் கூறுகளை அலசி ஆராய்வதற்கான
ஒரு பண்பாட்டு வழிமுறை ஒவ்வொரு
சமூகத்திற்கும் தேவை என்பதாக
ஒரு வரி வருகிறது.
ஆம்,
அவை
எளிய மக்களை தொடும் வகையில்
இருந்தால் அக்கலையும் வளர
போஷிக்கப்பட,
அதனால்
அக்கலை பேசும் பேசுபொருளும்
மக்கள் உணர்வாக மாறும் என்பதுமே
இப்புத்தகம்.
தண்டோராக்காரர்கள்
{தென்னிந்தியாவில்
தேசியவாத அரசியலும்,
பொழுதுபோக்கு
ஊடகங்களும் 1880-1945}
- சு.
தியடோர்
பாஸ்கரன்,
தமிழில்
அ.மங்கை,
அகநி
வெளியீடு,
விலை
220.
பக்கங்கள்
239.
Comments