Skip to main content

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது. எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர். தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு. ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது. புதைக்க கூட இடமில்லை. இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை. இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில்.

இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில், ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது, அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல. ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆம், மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்றனர். சேதம் அதிகம் உள்ள புத்தகங்களை தவிர்த்து மீதம் இருப்பவற்றை சேகரிக்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். முறையாக நூலகங்களில் அடுக்குவது போல் எண்ணிட்டு அடுக்குகின்றனர். இவ்வளவும் செய்த பிறகு அந்த கேள்வியை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நூலகத்திற்கு வாசகர்கள் எங்கிருந்து வருவார்கள்? வருவார்களா?

ஆனால், அவர்களின் அந்த கேள்வியை அர்த்தமற்றதாக்கி வந்து நின்றனர் மக்கள். சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, மருந்துகள் இல்லை, ஆனாலும் வாசிப்பை நோக்கி மக்கள் வந்தனர். புத்தகம் வாசித்தல் மட்டுமல்ல தீவிர வாசிப்பு கொண்ட இளம் போராளி ஒருவர் புத்தகம் வாசிக்க மக்கள் கேட்கின்றனர், விவாதம் செய்கின்றனர், அவர் விவாத தலைமையும் கொள்கிறார். நம்ப முடியாத ஒன்றாக நீங்கள் நினைத்தால், வேறு வழியில்லை எனக்கு உங்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்வதை விட.

அப்படியா ஒரு நூலகமா, இந்த சூழலிலா, எப்படி நூலகம் நடத்தப்படுகின்றது என்ற நமது ஆவலை போலவே பிரான்ஸ் நாட்டு பத்திரியாளர் தெல்ஃபின் மினூய் அவர்களுக்கும் எழ அவர்கள் மிக சிரமப்பட்டு தராயா நகரத்தின் போராளி ஒருவரை தொடர்பு கொள்கிறார். வீடியோ கால்தான் எப்பொழுதும். உங்கள் நூலகத்தை பற்றி பேசுங்கள் என்ற சொன்ன போது அந்த போராளி இடைவிடாமல் பேசுகிறார், நூலகத்தின் வாயிலாக அந்த தாராயா நகரின் கலாச்சாரம், பண்பாடு, எழுத்தாளர்கள், சிரிய கவிஞர்கள், தாராயா நகரின் போர்க்குணமிக்க வரலாறு என எல்லாம் வெளிப்படுகிறது. மினூய் அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க, இதோ இந்த நூல் நம் முன்னே.

இறுதியாய் ஒரு கொடும் நாளில் பஷாரின் விமானங்கள் அம்பரல்லா குண்டுகள் போட்டு தராயா நகரை தகர்க்க, அந்த நூலகமும் தகர்க்கப்படுகிறது. போராளிகள் வேறு வழியின்றி நகரத்தை விட்டு செல்கின்றனர். ஆனாலும், என்ன அந்த போராளிகள் போகும் இடம் தோறும் வாசிப்பை விதைப்பார்கள், தராயா நகரம் என்ற ஒன்று முற்றாய் இற்று விழும் வரை எவரோ ஒருவர் அங்கே சிதிலங்களில் ஒரு பக்கத்தை எடுத்து வாசித்து கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு மிக சிறப்பு. என்ன எளிமை. வார்த்தைகளில் சிக்கனம். அதைவிட வரிகளின் நீளம் குறைவு.

வாசிப்பை நேசிப்போர், ஏன் இந்தப் புத்தகத்தை தவறவிடவேண்டும். என்ன செய்ய தோழர், படிக்கக் நேரமே கிடைக்கலே என்று சொல்வோரும் இப்புத்தகத்தை வாசித்துவிடலாம்.

சிரியாவில் தலைமறைவு நூலகம், தெல்ஃபின் மினூய், தமிழில் : எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு வெளியீடு, விலை: 175, பக்கங்கள் : 144.

குறிப்பு : என் நண்பர் தோழர் ஜெ.பாலசரவணன் மார்ச் மாத புதிய புத்தகம் பேசுது இதழில் எழுதியுள்ள இந்த நூல் அறிமுகத்தை கட்டாயம் வாசியுங்கள். அது இந்த அறிமுகத்தை விட உங்களுக்கு பல செய்திகள் எளிமையாக சொல்லும்.
https://bookday.co.in/book-introduction-library-of-the-underground-in-syria/

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...