Skip to main content

பதிமுகம் - நூல் அறிமுகம்


நீங்கள் கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கடைசியாக படித்த நாவல் வந்து எத்தனை வருடமிருக்கும்? அந்த வாழ்வியல் அழகில் மயங்கி சொக்கி நின்ற தருணங்களும் அந்த நாவலின்/கதையின் நாயக நாயகிகள் பெயர்களும் உங்களோடு இன்னும் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது தானே! ஆமாம் அதே போன்று ஒரு அழகியல் பயணத்திற்கு தயாராகுங்கள். பாரதி புத்தகாலயம் அதற்கான தருணத்தை உண்டாக்கி இருக்கிறது. "பதிமுகம்" என்னும் கோ.செழியன் அவர்களின் குறுநாவலை வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாவரும் இடது சாரி மாணவர் இயக்கத்தை சார்ந்தவர்களே! ஒரு சிட்டிங்கில் படித்து முடித்தேன். அப்படியாக நான் கடைசியாக படித்து முடித்த நாவல் பூமணி அவர்களின் "வெக்கை". அதற்குப் பிறகு பதிமுகம் தான்.


கதைக்களம் கேரள தமிழக மாநிலங்களில் எல்லைப் பகுதியில். பேசும் பொருள் கேரள மாநில மாணவர் சங்க செயல்பாடுகளைப் பற்றி. ஏன் கேரளம்? இது என்ன கேள்வி, இடதுசாரி அரசியல் என்றாலே கேரளம் தானே. கேரள இடதுசாரிகள் அழகியல் மிகுந்தவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதில் கேள்வி இருக்காது தானே? கேரள மாநிலத்தில் நடந்த சிபிஐஎம்மின் அகில இந்திய மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வு. புதுச்சேரியிலிருந்து ஒரு மூத்த தோழர் ஜெயராமன் புறபப்டுகிறார். அவருக்கு உடல்நலம் சுகமில்லை அவ்வளவாக, முதுகுவலி. இருந்தாலும் செல்ல ஆயத்தமாகிறார். என்ன தோழர், அவசியம் போகப்போகிறீர்களா என கேட்டதற்கு, சட்டனெ வந்த பதில், "தோழர், கேரள மாநிலத்தில் நடைபெறும் சின்னஞ்சிறு இடதுசாரி அரசியல் நிகழ்வு கூட மனதிற்கு ரம்மியமாக, எழுச்சியூட்டும் விதத்தில் இருக்கும். அங்கே சென்று அப்போது சென்று வந்த எனர்ஜியை வைத்து ஒரு வருட காலம் கூட செயல்படுவேன்". அநேருகருக்கு இதில் கருத்து மாறுபாடு இருக்காது என்றே எண்ணுகிறேன். அதனால் தான் இந்த நாவலின் கதைக்களம் இந்த நாவலுக்கு அழகியலும், உணர்வும் சேர்க்கிறது. படியுங்கள் நீங்களும் உணர்வீர்கள்.
நாவலின் பெரும் வெற்றி என நான் எண்ணுவது, இந்த நாவலில் அநேகமாக எல்லா முன்னாள் இன்னாள் மாணவர் சங்க தோழர்களும் தங்களை காண்பார்கள் என்பதுதான். ஒரு ரொமாண்டிக்கான சாகச வாழ்வை எந்த இளைஞர்தாம் விரும்ப மாட்டார்? அவற்றோடு சமூக நீதி , பெண் விடுதலை என விரிந்து மானுட விடுதலை என்றான ஒரு மகத்தான இலட்சியத்தையும் கைகொள்ளுகையில் என்றென்றும் அந்த சிறுவாழ்வு உணர்வூட்டக்கூடியதாக, புத்துணர்வு கொடுக்க கூடியதாக, மீண்டும் வலு தருவதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆம், சுதந்திரம், சகோதரத்துவம், சோசலிஷம் என்ற முழக்கங்களை கொண்ட அந்த வெண் பதாகை காணுறும் போதும், நினைவில் வரும் போதும் அந்த மாணவ இயக்க தோழர்களின் பெருமித உணர்வை என்ன வென்று சொல்வது?!! ஆம், அந்த களியுறு வாழ்வை இலக்கியத்தில் எந்த வடிவத்தில் பதிவிட்டாலும் அது சுவையானதுதானே!
என்னுடைய மாணவ பருவத்தில் ஆங்கில இந்து பத்திரிகையில் வந்த அந்த புகைப்படம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு திறந்த வேனில் ஒரு மாணவரை குண்டுகட்டாக தூக்கி போடும் படம் அது. அந்த மாணவர் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் ஜி.செல்வா. கல்லூரி படிக்கையில் சமச்சீர் கல்விக்காக போலீசாரின் கண்ணீர் வீச்சில் லத்தி அடியை தாங்கிக் கொண்டு போராடிய மாணவர் படை இன்னும் நினைவில் இருக்கிறது. ஈரோட்டில் பணி நிமித்தம் தங்கியிருந்த காலத்தில் தனி ஒருத்தியாக சுதா என்னும் இந்திய மாணவர் சங்க தோழர் ஒரு பள்ளிக்கு முன்பாக சமர் செய்து அந்த பள்ளியில் நடைபெற்ற அநியாயத்தை தட்டிக் கேட்டாள் என நினைக்கையில் இப்போதும் வியப்பு மேலிடுகிறது. புதுவைக்கு வந்த புதிதில் தோழர் பிரபுராஜ் என்னும் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரை ஏரிக்கரையோரம் போலீஸ் பூட்ஸ்காலால் மிதி வாங்கியது என் கவனத்திற்கு வந்தது. அப்படியானால் இன்னும் எத்தனை என் பார்வைக்கு வராத, 80களில், 90களில் என எத்தனை எத்தனை மாணவ மணிகள் இடது சாரி மாணவர் இயக்கங்களில் எத்தனை இன்னல்களை போராட்டக் களங்களில் அனுபவித்து இருப்பர்? ஆனால், அவர்களை இப்போது கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னல்களை பட்டியலிட மாட்டார்கள். வென்ற போராட்டங்களை பற்றி பெருமிதத்துடன் பேசுவர். அதுதான் மாணவர் சங்க உணர்வு.
புதுச்சேரியின் இந்திய மாணவர் சங்க தலைவர் ஒருவ கண் பார்வையற்ற ஒரு மாற்று திறனாளி. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் குறித்து எந்த பதிவுகள் இருக்கிறது? அவர் குறித்து இப்போதைய மாணவர் சங்க தோழர்களுக்கு தெரியுமா? அவரின் அந்த மாணவர் இயக்க வாழ்வு எப்படி இருந்திருக்கும்? இவையெல்லாம் நாம் அறிய வேண்டாமா? மதுரை தோழர்கள் சோமு செம்பு குறித்து தோழர் பி.கே.ராஜன் புத்தகமாக கொடுக்காவிட்டால் நாம் அறிந்திருப்போமா? அது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சியுறும் வகையில் ஓராயிரம் கதைகள் இருக்கும். ஒரு வித மந்த தன்மை நிலவும் சமூகத்தில் சமூகத்திற்காக, பெரிதான உழைப்பாளி மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை வாழ்பவர்கள் எப்படி உணர்வு பெறுவார்கள்? பெரும்பகுதி அரசியல் நீக்கம் நடந்துள்ள கல்விகூட சூழலில், தனியார்மய கல்வியில், போராளிகளின் வாழ்க்கை அனுபவங்களே மாணவர்களை இயக்கங்களை நோக்கி இழுக்கும்.
வாட்ஸ்ப்பில் கூட ஒரு ஸ்கிரீணுக்கு மேல் படிக்க தயங்குகிற படிக்காத விரும்பாத ஒரு தலைமுறையினருக்கு கதைகள் நாவல் வகைகளே படிக்க தூண்டும் என நம்புவோம். அப்படியானால், வரலாறுகள் கதை வடிவிலோ அல்லது நாவல் வடிவிலோ வழங்கினால் படிக்க கூடும். அவ்வாறான ஒரு நாவல் தான் பதிமுகம்.
பாரதி புத்தகாலயத்தின் பெருமை மிகு வரவு. சலிக்காமல் சுவையோடு ஒரு நாவலை படைத்திட்ட ஆசீரியருக்கு சிறப்பு வாழ்த்துகள். மாணவர் சங்கத்தின் முன்னாள் இன்னாள் என பலரும் படித்து மகிழ வேண்டிய புத்தகம்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன் (பாகம் ‍ 2)

இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். ......... ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது. "நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" ‍ இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில் ...