Skip to main content

THE ANATOMY OF HATE - நூல் அறிமுகம்



வெறுப்பின் உடற்கூறியல், இப்படி மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். ரேவதி லால் என்னும் பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகம் இது. குஜராத் கலவரம் 2002 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. பாசிசத்தின் தொடக்கம் அது. ஒரு மாநிலத்தில் தொடங்கிய பாசிசம், பின்பு நாட்டின் அரசு அதிகாரமாக உருப்பெற உதவிய கலவரம். இந்நூலின் ஆசிரியர் குஜராத் கலவரங்கள் 2002ல் ஈடுபட்ட மூவரின் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் மூலம் இந்த வெறுப்பின் பின்னணியை அறிய முயல்கிறார், '


சுமார் 3 வருட உழைப்பில் பல்வேறு சிரமங்கள் இடையே இந்தப் புத்தகம் உருவானது. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடுகளான ராணா அயூப்பின் குஜராத் கோப்புகள் மற்றும் ஸ்ரீகுமாரின் குஜராத் கலவரம் ஆகிய இரு புத்தகங்களை படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிக அதிர்ச்சிகளை தராது. மூன்று வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள் இந்தக் கலவரங்களில் எவ்வாறு பங்கெடுத்தனர், கலவரங்களுக்கு பின்னான காலங்களில் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையே ஆசிரியர் ஆய்ந்து இருக்கிறார். கலவரம், மோதல் என என்னதான் சொன்னாலும் அதில் ஈடுபட்ட மக்களின் உளவியலும், சமூக சுழல் ஆகிய காரணிகளும் முக்கியமாகின்றன.
குஜராத் மிகவும் முன்னேறிய மாநிலம் எனப்படும் தொடர் பொய்யினை இந்த நூலும் உறுதி செய்கிறது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்தால் தான் அவளை பழிவாங்க முடியும் என்ற கருதி மணம் முடித்து அவளை அவ்வப்போது கொடுமை செய்கிறான். எந்தவித குற்ற உணர்வும் இல்லாது கலவர காலங்களில் இஸ்லாமிய பெண்களை வல்லுறுவு செய்து கொன்றதை மிக பெருமையோடு மனைவியிடம் சொல்கிறான்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சட்டத்திற்கு முன் காப்பாற்ற அரசு இருக்கிறது என்ற நினைப்பே அவர்களை குற்றச் செயல்களை செய்ய தூண்டுகிறது. ஒன்றாகவே வாழிடம் இருந்தாலும் ஒன்னுக்குள் ஒன்றாகவே இருந்தாலும் இஸ்லாமியர்களை விரோதம் கொள்ள மட்டுமல்ல, அவர்களை கொன்று அழிக்கும் வன்மமும் நீறு பூத்த நெருப்பாக அந்த சமூகத்தில் வைத்திருந்த மோசடி வித்தையை சங் பரிவாரம எவ்வாறு செய்கிறது என்பதையும் அறிய முடிகிறது. கலவரங்களில் ஈடுபட்டவர்கள் பின்னர் பாஜகவின் பிரதிநிதிகளாக தேர்தலில் நிறுத்தப்பட்டு, மந்திரிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக மாறியதையும் இப்புத்தகம் சொல்கிறது.
குஜராத் பூகம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உதவி செய்வதை கண்டு அதன் மேல் ஈர்ப்பு கொண்டு பின்னாள் கலவர காலங்களில் தான் கொல்லுதல், அடித்தல் ஆகியவைகளில் ஈடுபடாவிட்டாலும் வேடிக்கை பார்க்கவும் மனம் வந்தது எவ்வாறு என் அறிய ஒருவர் துடிக்கிறார். பின்னாள் எந்தக் கலவரத்தில் வேடிக்கை மட்டும் பார்த்தாரோ அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதே பாவத்தின் பிரகாரம் என செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. அவர் திருமணத்தில் சடங்கினை மறுப்பதையும், தன் குழந்தையை நாத்திகம் சொல்லி வளர்ப்பதையும் அவர் முற்றிலும் விஷமான சமூகத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் அந்த நச்சு வாயு தாக்காமல் தற்காத்து கொள்ளும் வித்தையாக கைகொள்வதை காண முடிகிறது.
இதை படிக்கையில் எனது நினைவுக்கு வந்த ஒரு விஷயம். இது போன்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் குஜராத் கலவரங்களில் பாஜகவின் முக்கிய பங்கினை வெளிப்படையாக ஆதாரங்களோடு பேசி பல புத்தகங்கள் வந்துள்ளன. இந்தப் புத்தகங்களை படிக்கும் எவரும் பாஜகவை பிரதமர் மோடியை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியிருக்க, இந்த புத்தகங்களுக்கு பாஜக தரும் எதிர்வினை தான் என்ன? முதலில் வணிக ரீதியாக அந்தப் புத்தகங்களின் ரேட்டிங்கினை குறைக்கும் விதமாக செயல்படுவது, இல்லை கண்டும் காணாமல் விடுவது.
அது சரி, பாரதி புத்தகாலயத்தின் குஜராத் கோப்புகள் எத்தனை பிரதிகள் விற்பனையானது? தமிழகம் பாஜக சங் பரிவாரங்களில் தற்காத்து கொள்ள இது போன்ற புத்தகங்கள் வாசிப்பும், விற்பனையும் மிக முக்கியமானது. தமிழகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற ஒன்று மட்டுமே தமிழகம் பாஜக தாக்குதலில் இருந்து தப்ப உதவாது. சங் பரிவாரங்களின் செயல்பாடுகள், செயல் திட்டங்கள், மக்களிடையே அவர்கள் செயல்படும் விதம் இவற்றோடு பாஜக தலைவர்களின் மோசடிகளையும் படிப்பது நல்லது.
பார்ப்போம், நிழல் இராணுவங்கள் போல் இந்தப் புத்தகமும் தமிழாக்கம் காணும் என நம்புவோம்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன் (பாகம் ‍ 2)

இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். ......... ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது. "நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" ‍ இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில் ...