Skip to main content

வானவாசிகள் - என் பார்வையில்

 விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே..

இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி….

விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.

 


 

பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்சு.

பறவைகளில் எவை எவை பறக்கும்? பறக்காது இருக்கும் கோழிக்கும், அதன் பெரியம்மா நெருப்புக்கோழிக்கும் என்ன ஆச்சு? எல்லாப் பறவைகளுக்கும் இறக்கை ஒரே அளவா.. சிறியதும் பெறியதும் ஏன் ஆச்சு.. அதாவது கொஞ்சமா பறந்தா சிறிய இறக்கை போதுமாம், ரொம்ப தூரம் பறக்கிற மாதிரி இருந்தா பெரிசா வேணுமாம்… புறா, காக்கா, குருவி என்பவை நம் வீட்டில் பறந்துகொண்டு கீழே லேண்ட் ஆவதற்கும், ஒரு கழுகு லேண்ட் ஆவதற்கும் வித்தியாசம் இருக்காம், அதற்கு ஒரு அறிவியலும் இருக்காம்.

கழுகு லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும், காக்காய் அண்ணன் லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும் கூட வித்தியாசம் இருக்காம், கழுகு செம ஸ்பீடு.. 200 கிமீ வேகமாம். இது காக்கா இறகு, மயிலிறகு என புஸ்தகத்தில் வைக்கிறோமே, அது தானா விழுகாதாம்.. அவங்களா மனசு வைச்சு சரி இது தேவையில்ல, புதுசு வேணும் என நினைச்சாதான் விழுமாம். இத்தனூண்டு இறகுதான் என்னென்ன வகையில் அதற்கு பறப்பதற்கு, உணவிற்கு, தேவைப்படும் வெப்பத்திற்கு உதவுதாம்… பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கும் என்ன காரணம் என்ன, ஏழு கடல் தாண்டி வேடங்தாங்கல் வந்தடையும் பறவை பறந்துகிட்டே தூங்குமாம், தண்ணீரை சேர்த்து வைச்சு குடிச்சுக்குமாம், ஒரு பறவை (ரீங்காரப் பறவை என நினைக்கிறேன்), பறந்துகிட்டே ஒரே இடத்தில் நின்னு அப்படியே பூவின் தேனை ஸ்ட்ரா இல்லாமலே, பூவும் கசங்காமல் குடிக்குமாம்…

அடப் போங்கப்பா… பறவைகள் பறக்கும் நுட்பம் குறித்து ஏராளமான தகவல்கள், எளிய புரிந்துகொள்ள கூடிய வகையான மொழியில்.. தமிழில் இவ்வளவு எளிமையா சுவாரசியமா ஒரு அறிவியல் புஸ்தகம் நான் படிச்சு நாளாச்சு. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்னும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு ஒன்னு இருக்கு.. அது செம்ம சூப்பராக இருக்கும். அது போலவே இது இருக்கு. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.. சொற்பிழை எழுத்துப்பிழை இல்லாம, ஒவ்வொரு பக்கத்திற்கும் அதன் வலது பக்க மேல் மூலையில் ஒவ்வொரு வகையான பறவையின் படம், என உண்மையிலே அமர்க்களமான வரவு.

ஆனா என்ன இப்படியான புத்தகங்களில் நான் காணும் ஒரே குறை இருக்கு. தேவையான இடங்களில் வண்ணங்களை பயன்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் பறவைகள் பறத்தல் என்பதற்கெல்லாம் என்ன என்ன வண்ணத்தில் படங்கள் கிடைக்கின்றன, அதையும் பயன்படுத்தி இருக்கலாம். கேட்டா இதன் விலையே ரூ.120/-.. அதையும் போட்டா இன்னும் கூடும் என சொல்வாங்க (எங்காளுங்க தான்!) . அதற்கும் ஒரு பதில் இருக்கு என்கிட்டே. அதாவது ஆங்கிலத்தில் பேப்பர்ப்பேக் ஹார்ட்பவுண்ட் வடிவங்கள் என இரு வடிவங்கள் பயன்படுத்துகிற மாதிரி பாரதி புத்தகாலயமும் ஒன்றை பேப்பர்பேக் என்ற வடிவத்தில் வண்ணங்கள் இல்லாம குறைந்த விலையில் நிறைய பிரதிகளாகவும், ஹார்ட்பவுண்ட் வடிவமாக வண்ணங்களுடன் வழவழ தாளில் தேவைப்படும் விலையை வைத்து குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து அதையும் வெளியிடலாம்..

சீக்கிரம் செய்யுங்க தோழர்களே..

வானவாசிகள் என்னும் முனைவர் பெ. சசிக்குமார் அவர்களின் பிரமாதமான இந்நூலிற்கு ஆசிரியருக்கும், புக்ஸ்பார் சிலரன் (பாரதி புத்தகாலயம்) நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்… இவரின் இதே நிறுவனத்தின் விண்வெளி மனிதர்கள் என்னும் மற்றொரு அறிவியல் புத்தகத்தையும் கையில் எடுத்துள்ளேன், இதே போன்ற சுவாரசியத்தை எளிய வகையில் அறிவியலை சொல்லும் மொழியை கொண்டிருக்கும் என்ற உறுதியில்…..

 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...