சிறார் நாவல் அல்லது குழந்தைகளுக்கானது என்று வெளியாகும் பலதையும் படித்திடும் பழக்கம் எனக்கு உண்டு. அதில் இரண்டு பலனுண்டு. ஒன்று, என் குழந்தைகளுக்கு புதிதாக கதை கிடைப்பது. மற்றொன்று 44 வயதை கடந்த பின்னும் இன்னும் இனித்திடும் அந்த fantasy part. ஆக, என்னுடைய அடுத்த வாசிப்பாக இருந்தது ஞா. கலையரசி அவர்களின் மந்திரக்குடை. குடையை வைத்து என்ன மந்திரம் செய்துவிட முடியும், குடையை பிடித்து கொண்டு பறக்கலாம் என்பதே முதலில் வரும் கற்பனை. சரி, பறக்கிறார்கள் அல்லது பறக்கிறாள்(ன்) .. அப்புறம்? பறந்து எங்கே செல்கிறார்கள்? என்ன ஆனது? ஒருவர் மட்டுமே பறந்தனரா அல்லது பழங்கதை ஒன்றில் வருவது போல இந்திரனின் ஆனையை தொடர் சங்கிலியாக பிடித்து பின் கீழே விழுந்த கதை போலவா? பறப்பதல்லாமல் குடை மழையிலிருந்து வெயிலிலிருந்து காத்திட்ட போதும் வேறு ஏதும் பொத்துகிட்டு வர வழிவகை செய்கிறதா? கடலில் படகாக மாறி ஒரு புதிஅய் உலகை காட்டியதா குடை? …………. படித்துப் பாருங்கள். விலை குறைவுதானே! சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நிச்சயமாய் புக்ஸ் பார் சில்ரனின் படைப்பில் வரவேற்க்கத்க்க ஒன்று என எனக்குத் தோன்றுகிறது. என் தேர்விலா