Skip to main content

Posts

DESPITE THE STATE - நூல் அறிமுகம்

  Despite the state. கடந்த 15-20 நாட்களாக ஒரே புத்தகத்துடன் சுற்றி வருகிறேன் . உலகமயத்திற்கு பின்னான இந்தியாவில் எப்படி மாநிலங்களில் "state” அதாவது அரசு என்னும் identity என்ன role play செய்கிறது என்ற ஆய்வும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளும் கருத்துக்களுமே இந்நூல் . இயக்கங்களில் இருப்பவர்கள் இப்புத்தகத்தை படித்தால் நல்லது . ஏனெனில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் rhetoric வசனங்களின் பின்னே இருக்கும் வெறுமையும் , நாம் எதிர்பாராத திசையில் ஒளிந்திருக்கும் உண்மைகளும் , கண் முன்னே நடந்தாலும் ஒரு மூடு திரை நம் கண் முன் ஒரு மகத்தான உண்மைநிலையை மறைப்பதை கண்டுணர முடியும் . மிசோரம் , ஒரிசா , பீகார் , தமிழ்நாடு , பஞ்சாப் , குஜராத் என இந்த மாநிலங்களுக்கு சென்று அங்கே நடப்பவைகளை கண்டுணர்ந்து பிரச்சனைகளின் தன்மையை உணர stakeholders எனப்படுவோரை பேட்டி கண்டும் தான் வாசித்தவற்றில் இருந்தும் சில உண்மைகளை கண்டடைவது என அசல் ஆய்வினை நடத்தியுள்ளார் இப்பத்திரிகையாளர் . இது தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் சொல்கிறேன் , மீடியாக்களில் விவாதத்தை சரிவர நடத்துபவர்கள் மட்டுமே பெரிய பத்திரிகைய...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்

தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க . சினிமா குறித்ததாகட்டும் , இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள் , எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை . எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம் , அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள் , பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880 இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல் . சும்மா எதுவும் சொல்வதில்லை , தியடோர் பாஸ்கரன் அவர்கள் . ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார் . ஆம் மக்களே , The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது . வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க . “ வெள்ளை வெள்ளை கொக்குகளா ...

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற...

பார்த்தீனியம் - தமிழ்நதி

ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு " பார்த்தீனியம் ". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு . அப்படியே ஷோபாசக்தி அவர்களின் " ம் ", “ கொரில்லா ", “ இச்சா " என தொடர்ந்து கூர்வாளின் நிழலில் , நீண்ட காத்திருப்பு என தொடர்ந்து இப்போது பார்த்தீனியம் . சில பெயர்கள் மறந்துவிட்டன . { ஒரு பனை ... என தொடங்கும் நூலும் இதில் அடக்கம் }. நாவல்கள் வாசிப்பில் ஒரு சுக அனுபவம் இருக்கிறது . அது நமக்காக காலங்களை கடத்தும் . கொரானா நோய் தொற்று பரவல் ஊரடங்கு என வெறுமை சூழந்திருந்த காலத்தில் பரணி , தமயந்தி , அமரநாயகம் , தனபாக்கியம் , ஜெனிபர் என பாவப்பட்ட ஈழதமிழர்களோடும் , எங்கே வானூர்தியும் ஹெலிகாப்டரும் தலைக்குமேல் பொம்ப் இடுமோ என்ற கவலையுமாக 512 பக்கங்கள் சுவாரசியமாக கடக்க செய்திட்ட எழுத்து வித்தைக்கும் , நாவல் நிகழ் காலத்தில் நம்மை காலமாற்றம் செய்தமைக்காக தமிழ்நதி பாராட்டுக்குரியவர் . 80 களில் நடக்கும் கதை களம் . இதில் எத்தனை கதாபாத்திர...

நீண்ட காத்திருப்பு - அறிமுகம்

எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை . ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை . இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்காமல் நெஞ்சம் கனத்து படிக்க முடியாமல் வைக்கப்பட்ட புத்தகங்களில் இது சேராது . ஆனாலும் , ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது , இப்புத்தகம் தன்னுடைய வார்த்தைகளில் அதை பொதிந்து வைத்திருக்கிறது . ஒரு மூச்சில் படித்துவிட என்னால் முடிந்தது . போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் சிறை அனுபவமும் , விடுதலைக்கான பின்னான சில தினங்களுமே இப்புத்தகம் . இலங்கை கடற்படையின் அதிகாரி கொமடோர் அஜித் போயகொட போரில் விடுதலைப்புலிகளால் சிறைபிடிக்கப்படுகிறார் . அவரோடு அப்போரில் கைதான ஒருவர் என தொடங்கி , பின் 22 பேர் இணைகின்றனர் . சிறை வாழ்வின் ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான எந்த சிந்தனையும் இல்லை , எனினும் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை . ஆனாலும் போரில் இராணுவம் முன்னேறும் தருணங்களில் இவர்கள் சிக்கலுக்கும் , புலிகள் முன்னேறும் தருணங்களில் ஆசுவாசமும் பெறுகிறார்கள் . இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் கடைசிவரை கொமடோராகவே இலங்கை அ...

வெக்க - நூல் வாசிப்பனுபவம்

முதலிலேயே சொல்லிடறேன் ஆமா, இது புத்தக விமர்சனம் அல்ல. இது மட்டுமல்ல இதற்கு முன் நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவும் இனி வருபவையும் அப்படியே. ஒரு புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன பதிய தோன்றுமோ, அதையே பதிவிடுகிறேன். (அப்பாடா..!). ரொம்ப ரொம்ப தயங்கித்தான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அஞ்ஞாடிக்கு விருதெல்லாம் கொடுத்தது தெரிந்த பிறகுமே எனக்கு தயக்கந்தான். ஏனென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னவோ தோணி புத்தகம் எடுத்தேன். ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கியவுடன் அப்புத்தகத்தை படிப்பதெல்லாம் உடனே சாத்தியப்படுவதில்லை. சில நேரங்களில் அபூர்வமாக உடனே படிப்பதும் உண்டு. அது புத்தகத்தின் அளவினை பொறுத்தது. முதல் 10 பக்கங்களை படித்து முடிப்பதற்குள் ரொம்ப சிரமாகிவிட்டது. இப்படியே இன்னும், 25 பக்கங்கள் போனால் அவ்வளவுதான். 180 பக்கமே உள்ள இந்த நாவல் மட்டுமல்ல, இனி பூமணி அவர்களுக்கு டாட்டா காட்டிவிடலாம் என்று கூட எண்ணந்தான். சென்னையை ஒட்டிய குட்டி நகரமான காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்து இதோ இனி வரும் காலமும் கூட புதுவையிலே என்றான எனக்கு அதாவது முழுக்க முழுக்க வட தமிழகத்துகாரனுக்கு தென் திசை தமி...