படிச்சாச்சு . பாந்த் சிங் முடிச்சாச்சு . பாரதி புத்தகாலயம் - காம்ரேட் டாக்கீஸ் கூட்டு வெளியீடு . கமலாலயன் தோழரின் சலிப்படைய செய்யாத மொழிபெயர்ப்பு . வாசிக்க எளிதாக இருக்கிறது . போராளியும் கலைஞருமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு ஆதலால் , அவ்வப்போது வருகிற சின்ன சின்ன பாடல் வரிகளோடு புத்தகம் படிக்க சுகமாகிறது . இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு போராளியின் வாழ்க்கை சம்பவங்களே , இப்புத்தகம் . ஆனால் அதோடு சேர்த்து பஞ்சாப் மாநிலம் என்பதன் சிறிதான வரலாறு , மக்களின் கலாச்சாரம் , சீக்கிய மதத்தின் வழிமுறைகள் , கொள்கைகள் , 2000 ஆம் ஆண்டு தொடங்கி பஞ்சாப் மக்களிடையே பரவி வரும் போதை மருந்து கொடும் பழக்கம் என்று கலவையாக பாந்த் சிங் தோழரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது . அதுவே இப்புத்தகத்தின் சிறப்பு . இந்தியாவில் இந்து மதம் அல்லாது வந்த அல்லது புதிதாக தொடங்கப்பட்ட எந்த மதமும் சரி , சாதி அடுக்குகளில் இருந்து தப்பவே இல்லை . குரு நானக் தன்னுடைய மதத்தில் தலித்துகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தும் accommodate செய்தும் காலப் போக்கில் வழக்கம் போல் தலித்துகள் ஒடுக்கப்படுவதும் , ஜாட்