Skip to main content

மானுடம் மலிந்து போனதால் மதிப்பில்லாமல் போனதா?


             இதோ இன்றும் ஒரு செய்தி மதிய உணவு இடைவேளையில் நம் தொண்டையை அடைத்து உணவு இறங்க மறைத்தது. அது திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து இறந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் இது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு ஒரு உச் கொட்டுதலோடு மீண்டும் நம் வேலை பார்ப்போம். தமிழக ஊடகங்களுக்கு ஆகா, இன்றொரு செய்தி கிடைத்துவிட்டது என்ற நிம்மதி உணர்வு. இந்திய ஊடகங்களுக்கு அமிதாப்புக்கு தலைவலி வந்தால் மட்டுமே தலைப்பு செய்தி. எங்கோ ஒரு மூலையில் நேரும் குழந்தை இறப்பென்பது செய்தியல்ல. 

                      ஏன் இப்படி? நம் வீட்டு குழந்தை லேசாக மூக்கு உறிஞ்சினாலே பிரபல டாக்டரை பார்த்து ஒரு 200 ரூபாயை அழுதுவிட்டுதானே மறுவேலை பார்க்கிறபோது, ஒரு குழந்தை இறப்பு என்பதை, இதில் நம் இனம், நம் நாடு என்ற அடையாளங்களுக்குக் கூட விலக்கில்லாமல் நம்மால் யதார்த்தமாய் ஒரு குற்ற உணர்வு கூட வேண்டாம், குறைந்தபட்ச அனுதாப உணர்வு கூட இல்லாமல் கடக்க முடிகிறது? உணர்வுகள் மறத்த ஊனமான யந்திரன்களாக ஏன் நாம் இருக்கிறோம்?

                     நம் தேசத்தில் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 70000 குழந்தைகள் பிறப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதே சமயம் பிறந்த குழந்தைகளில் 1 முதல் 5 வயது வரை இறப்புச் சதவீதம் என்பது சுமார் 16.85% என்பதும் ஒரு புள்ளிவிவரத்தின் கணக்கு. இது உலகில் உள்ள 199 நாடுகளில் முதல் இடத்தை நமக்கு அளித்திருக்கிறது. இது போதாதென்று, எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் விகிதத்திலும் நமக்கு முதல் இடம். பிறக்கும் 1000 குழந்தைகளில் சுமார் 46 சதமான குழந்தைகள் எடை குறைவாகவே பிறக்கின்றன. நாம் வெட்கப்படுகிறோமா உண்மையாக?

                     கல்வி தனியார்மயம், தேசமெங்கும் விரவியிருக்கும் வறுமை அதனால் பெருகும் ஊட்டச்சத்துக் குறைவு, ஏழைகளை அவனது வறுமையகலாமல் காலத்திற்கும் வாட்டுவது, அரசின் அக்கறையின்மை, அரசின் பொறுப்பின்மை, அரசு இயந்திரத்தின் போலித்தனம் போன்ற பெரிய விஷயங்களில் விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். எனினும், லேசாக ஒரு தளத்தில் வைத்து பார்த்தால் என்ன என்று தோன்றியதில், ஒரு வேளை நூறுகோடி மக்கள் என்பதுதான் பிரச்சனையாயிருக்குமோ? பரப்பளவில் அவ்வளவாய்ப் பெரிதாக இல்லாத தேசத்தில் இருக்கின்ற பரப்பில் பெரும்பகுதி மனித இனமாக இருந்தால் உயிர் என்பது மதிப்பில்லாது போகுமோ?

                     சந்தையில் ஒரு பொருள் மிகுதியாய் கிடைக்கும்போது அதன் மதிப்பு வீழ்வது என்பது இயற்கை. உதாரணமாக விளைச்சல் பன்மடங்கு பெருத்ததால் தக்காளி விலை வீழ்ச்சி என்று நம் நாளிதழில் பார்த்திருக்கிறோம். அஃது இயல்பு. அப்படியானால் மனித இனமும் பெருகிக் கொண்டேயிருந்தால் அதன் மதிப்பும் வீழுமா? அப்படியென்றால் மனித உயிர் என்பதும் சரக்கு என்பதும் ஒன்றா? மனிதம் என்பது ஆற்றல், சக்தியல்லவா? ஒவ்வொரு மனிதனும் இந்த உலகை, இந்த இயற்கையில் ஏதேனும் வகையில் அசைவினை செய்துவிட்டுப் போகிறான். அழுகை ஒன்றே பிரதான இயக்கமாய்த் தொடங்கி, பின் தவழ்ந்து, நடந்து, மழலை கூறி, ஒலி-சொல்-வாக்கியம் என்று பரிமாணம் கண்டு, சுயம் பெற்று வாழ்ந்து மறையும் மனிதத்தினையும் பொருளினையும் ஒன்று போலவே கருதுகிறோமா? பொருளின் அழிவும், மனித இழப்பும் ஒன்றா? அவ்வாறு நாம் தன்னிலை மறந்து கருத நம்மை எது தூண்டுகிறது? 


                      சுயநலமா? மனிதாபிமான இழப்பா? இல்லை, போதுமான சமூக  கடமைகளை தான் தராமல் தொடர்ந்து நாம் நம்மைக் காத்துக்கொள்ள, நம் சந்ததிகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நம்மைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டாற்போன்ற போராடப் பலவந்தப்படுத்தும் நம் அரசா? விடைகள் சுயவிமர்சனத்தோடு காணப்பட வேண்டும்.

                       வெண்மணி தீ நீண்டு கும்பகோணம் சரஸ்வதி பள்ளிவரை வந்தபோதும், கோர்குவானின் மஹி கண்ட ஆழ்குழாய் இறப்பு தொடர்ந்து இன்று நேரிட்டுள்ள துரையூர் குழந்தை இறப்பு வரை நமக்கு என்ன சேதி சொல்கிறது? இறந்து போன பின்பும் குழந்தையைப் பெருச்சாளிக்கு தீனியாக்கும் நிலையினைக் கண்டுநாம் என்ன செய்யப் போகிறோம்?

"பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துக் கொள்! உன்னை சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!" 
                  – விடை சொல்லி நிற்கிறான் பாவேந்தன் பாரதிதாசன். விடை காணுவோமா?

Comments

Anonymous said…
ஜீவகாருண்யமற்ற தேசத்தின் விம்பங்கள் தான், குழந்தைகளின் மரணங்கள் ~ தனியார் மயமாக்கப்பட்ட கல்வியும் சரி, பொதுப் பள்ளிக் கூடங்கள் தரும் கல்வியும் சரி ~ குழந்தைகள் மீது அக்கறைக் காட்டுவதில்லை .. முக்கியமாக தனியார் பள்ளிகள் யாவுமே பணமே பிரதானமாக எண்ணி செயல்படுகின்றன ..

ஒரு குழந்தையின் உடல், உள்ளம் ஆகிய இரண்டையும் இவர்கள் நோகடிக்கின்றார்கள். இறுதியில் அக்கறை இல்லாமையால் அவர்களை பலியாக்குகின்றனர்.

ஒரு பள்ளியில் ஒரு குழந்தை மரணித்தால் அப்பள்ளியின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட யாவரும் இனிமேல் கல்வி துறையில் செயல்பட தடை விதிக்க வேண்டும். மரணித்தக் குழந்தைகளின் குடும்பத்துக்கு அப்பள்ளிகள் நட்ட ஈடுக் கொடுக்க வேண்டும் ... !

எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோர் - ஆசிரியர் கழகங்களை மேலும் வலுப் பெற செய்து, பெற்றோர்களும் - ஆசிரியர்களும் சீரிய முறையில் செயல்பட வேண்டும் ..

எத்தனை எத்தனை குழந்தைகள் இப்படி மரணிக்கும். நினைத்தாலே பதறுகின்றது ..

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...