Skip to main content

ஆங்கில செய்தி சேனல்கள்




நேற்று முன் தினம் ஏதேச்சையாய் TIMES NOW சேனலை ரிமோட்டில்திருப்பியபோது (அப்பாடா, அர்னாப் கோஸ்வாமி இல்லை), வழக்கம்போல ஒரு"breaking news" ஓடிக்கொண்டிருந்தது. "Democracy at low" என்ற தலைப்பிட்டு ஒருபெண்மணி கையில் மைக்கோடு கத்திக் கொண்டிருந்தார்.

விஷயம் இதுதான். கேரள மாநில மேதகு(!) ஆளுநர் அவர்களுக்கு சௌதி யில் இருந்து ஒருகொலை மிரட்டல் வந்ததாம். 24 மணி நேரத்திற்குள் அவர் கொலைசெய்யப்படலாம் என்று. சி.பி.எம் கேரள மாநில செயலர் தோழர் பினராயி விஜயன்மீது CBI விசாரணை நடத்த உத்தரவிட்ட அந்த அதிநியாய செயலுக்குத்தான் இந்தமிரட்டலாம். ஒரு ஆளுநர் மீது கொலை மிரட்டல் என்பது உயர்ந்த இந்தியஜனநாயகத்திற்கு எத்தனை பெரிய அவமானம் என்று திரும்ப திரும்ப அந்தபெண்மணி கிட்டதட்ட அலறிக்கொண்டிருந்தார். ஆங்கில செய்தி சேனல்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். மைக்கை கையில் வைத்துக்கொண்டு ஏன் கத்துகிறார்கள் என்பது என் சிற்றறிவுக்கு மட்டும் ஏனோ எட்டமாட்டேன் என்கிறது.


என்னங்க, என்ன சொல்ல வர்றீங்க? "ஆயிலா" புயலில் வங்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கையில் அந்த மாநில முதலமைச்சர் நிவாரணத்திற்காக ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டும்போதும் வரமாட்டேன்என்று அராஜகமாக மறுத்தும், மத்திய அரசின் நிவாரண நிதியை மாநில அரசுக்குதரக்கூடாது என்ற‌ மம்தா பானர்ஜியின் செய்கைகளும் ஜனநாயகத்திற்குஆபத்தில்லையா? பல லட்சம் கோடி ஊழல், "சினிமா டிக்கெட்" போல டென்டர் தரப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றமே சொன்னபோதும் மீண்டும் ஊழல் செய்த அமைச்சருக்கே அந்தத் துறையினை தந்ததும், அந்த ஊழல் குறித்து விசாரணையே தேவையில்லை என்றும் சொன்ன இந்நாட்டின் மிக நல்லவர் மன்மோகனின்செய்கை ஜனநாயக விரோதமில்லையா? தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்னமே அமெரிக்காவின் பிரதிநிதி இந்திய மாநில அரசியல்வாதிகளை சந்தித்து பேசியது என்ன ரொம்ப நல்லதா? கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கைவரையில் பின்னுக்கு இருந்த வேட்பாளர் பங்குசந்தை சிதம்பரம் இறுதியில் ஜெயித்ததாக அறிவித்தது என்ன வகை? (குறிப்பு : ஒரு மிக ஆபத்தான விஷயம் பலரும் பேசாதது : போட்டியிட்டு தோற்ற ராஜ. கண்ணப்பன் இதுவரைவழக்கேதும் தொடுத்ததாக தெரியவில்லை). அட போங்க, நீங்க எப்பவும் இப்படித்தான், ஏதேதோ பேசிக்கிட்டு.

இதுதான் அவைகளின் வர்க்கப்பாசம். இடது சாரிகள் நடந்து முடிந்த தேர்தலில்ஒரு சரிவை சந்தித்தபோது மிக அசிங்கமாக எக்காளம் செய்து கொண்டாடியது இந்த சேனல்கள்தான். ஒரு சேனலி ல் விவாதத்திற்கு வந்த ஒரு மேதை "ஆகா, கம்யூனிசம் முன்பு கேரளா, கொல்கட்டா, சீனாவில்தான் இருந்தது, இப்போது சீனாவில் மட்டும்தான்" என்று தனது மேதாவித்தனத்தை உரைத்தபோது அந்த panelists எல்லாம் ஆமாம் சாமி போட்டார்கள். அமெரிக்க நாடுகள் பலவற்றிலும், சமீபமாக ஐஸ்லாந்திலும் இடதுசாரிகள் ஜெயித்திருப்பது இவர்களுக்குதெரியாததல்ல. இப்போது மட்டுமல்ல, 2004 தேர்தலில் இடதுசாரிகளின்தலைமையோடு ஆட்சி அமையவிருக்கும் தருவாயில் பங்கு சந்தை வீழ்ச்சிகண்டபோது சீதாராம் யெச்சூரியே காரணம் என்று புது கண்டுபிடிப்பை செய்தவர்கள் இவர்கள். உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி கண்டப்பொழுதில் பங்குசந்தை 20,000 புள்ளிகள் சுருண்டு 9000 புள்ளிகள் கண்டபோது இவைகளின் மௌனம்பெரும் சத்தமாக இருந்தது. தற்கொலை செய்துகொண்டு மந்தையாய் மந்தையாய் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் மடிந்த வேளையில் வேறு வழியில்லாமல்அரை மனதோடு சென்ற அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தபோது பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டதே, அப்போது பங்கு சந்தை என்பது இந்நாட்டின் உழைப்பாளிகளுக்கு எதிரானது என்பதை இவ்வூடகங்கள் சொன்னதா? அதுமட்டுமா இந்த கடன் தள்ளுபடி என்பது நாட்டின் வளர்ச்சிக்கும் , நாடு குறித்தஅயல் நாடுகளின் பார்வைக்கும் கேடு விளைவிக்கும் என்றொரு கண்டுபிடிப்புசெய்து அதை விவாதம் என்ற பெயரில் பல மேதாவிகளை வைத்து பிரச்சாரமும்செய்து மகிழ்ந்தன. வங்கிகள், LIC, பொதுத்துறை நிறுவனங்கள், ஓய்வூதியம் எனஅனைத்தும் தனியார்மயம் என்று மன்மோகன் இப்போது அறிவித்திருப்பதற்கு பங்குச்சந்தையும், இந்த சேனல்களும் அல்லாது மகிழ்ந்தவர்கள் யார்?

நீங்கள் இதைப் படித்துவிட்டு CNN-IBN என்றொரு செய்தி சேனலில் இரவு 10 மணிக்கு வரும் சகாரிகா போஸ் என்பாரை கொஞ்ச நாள் கவனியுங்களேன். இடது சாரிகள் என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும்போது அவர் கண்களில்ஒரு வெறுப்பு, வாயில் ஒரு ஏளனம் என்பது நிச்சயமாய் இருக்கும். நந்திகிராம் பிரச்சனையை இவர்கள் காட்டியபோது ஒவ்வொரு நாளும் இந்தப் பெண்மணியின் கண்ணில் ஒரு குரூரம் தென்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள்தான் இப்போது இந்த மண்ணில் படித்த மற்றும் குறிப்பாக கணிணிதுறைசாப்ட்வேர் இளைஞர்களுக்கும் உலக அறிவினை சொல்பவர்கள். 2007ல் சிறந்தஅரசியல்வாதி என்று NDTV பரிசளித்த அத்வானி இன்று என்ன ஆனார்?

நண்பர்களே, இதுதான் லெனின் சொன்னது, "ஆளும் வர்க்கத்தின் குணத்திற்கேற்பவே அரசும், நீதியும் இருக்கும்". ஊடகங்களும் இப்படித்தான். காந்தியை ஒரு பைத்தியக்காரன் என்று வர்ணித்த TIMES பத்திரிகை இன்றுஅவரை மாமனிதர் என்று சொல்கிறது. அப்படியென்றால், திருந்திவிட்டதா என்ன? இல்லை, அது காலத்தின் கட்டாயம். மாறி இருக்கும் சூழலின், அரசியலின் விளைவு. காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸே ஒரு பிராமணன் என்பதை அன்றும் இன்றும் தமிழுலகத்தின் பல முன்னணி பத்திரிகைகள் சொல்வதில்லை. எங்கே, பல இலட்சம் இஸ்லாமிய சகோதரர்களை எழுத்தில் வடிக்க இயலா குரூர கொலை வெறியாட்டம் (டீஸ்டா சீதல்வாத் COMMUNALISM COMBAT பத்திரிகையில் ஒரு இடத்தில் எரிந்து முடிந்த போயிருந்த ஒரு மண்டையோட்டினை கையில் சூலம் கொண்டிருந்த சிலர் ஒருவருக்கொருவர் காலால் உதைத்து விளையாடினர் என சொல்கிறார்) நடத்திய மோடிக்கு அடுத்த பிரதமராகும் அருகதை இருக்கிறது என்றும், அவர் திறமையான வகையில் ஆட்சிசெய்கிறார் என்றும் மகுடம் சூட்டுகின்றன இச்சேனல்கள். (குஜராத் மாநிலத்தில் 110 பள்ளிகளில் தேர்வு விழுக்காடு பத்துக்கும் கீழ் என்பது ஒரு செய்தி).

இந்திய நாட்டின் மிக மதிப்புமிக்க விருதான பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுத்த சாய்நாத் சொன்னது, "பத்திரிகையாளர்களுக்கு அரசு விருது கொடுப்பதும், அதைஅவர்கள் ஏற்பதும் சரியல்ல. அது எந்த ஒரு கம்பெனியின் கணக்குகளை நாம் கணக்கீடு செய்கிறோமோ அந்தக் கம்பெனியிடமே விருதினை பெறுவதற்கு சமம்". இந்த விருதினை ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், சேகர் குப்த போன்ற இதரர் ஏற்றனர். விதர்பா மாநிலத்தின் விவசாயிகளின் போராட்ட குழு (விதர்பா ஜனன்ஆந்தோலன் சமிதி), "தோழர் சாய்நாத் விருது பெறுவது என்பது எங்களுக்கு மிக்கமகிழ்ச்சியே, ஆனாலும் எந்த அரசின் நாசகர கொள்கைகளின் மூலம் 1,82,000 விவசாயிகளை தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனரோ அந்த அரசின் விருதினை அவர் எப்படி ஏற்க முடியும்?" என்று சொன்னது. வழக்கம்போல் ஊடகங்கள் சாய்நாத் விருது பெற மறுத்த செய்தியை சொல்லாமல், அந்தபரிசளிப்பு விழாவிற்கு தோனி வராதது ஏன் என்ற ஒரு பெரிய ஆராய்ச்சியில்இருந்தனர்.




Comments

kamaraj said…
பை நிறைய்ய புத்தகங்களையும்,
வாய் நிரைய்ய புகையையும்,
மனசு நிறய்ய அன்பையும் சுமந்துகொண்டு
பார்க்கிறவர்களுக்கெல்லாம் வாரிக்கொடுக்கும்
அந்தக்கருத்தப் பொரியாளனுக்கு நன்றி.
ராம்கோபால், நான் காமராஜ்.
உங்கள் வலைப்பக்கம் வந்தேன்
முழூசும் படிக்கவில்லை, படிப்பேன்.
நமக்கு நிறைய்ய வேலை இருக்கிறது.
ramgopal said…
நன்றி நண்பருக்கு. அந்தக் கருத்த பொரியாளனோடு கழித்த நாட்கள் மறக்க முடியாதவை. நன்றி அவருக்கும். மீண்டும் வரவும்.
ramgopal said…
நன்றி என்னைப் எப்போதும் ஊக்குவிக்கும் எஸ்.வி.வி. அவர்களுக்கும்

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும்

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும் என்ற தலைப்பைக் கண்டவுடன் பலர் முகத்தைஸ் சுருக்கலாம். இன்னும் சிலர் "ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க" எனக் கூறலாம். கட்டுரையைப் படித்து முடித்த பிறகு நித்தியானந்தாக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நீங்களே உணர்வீர்கள். 1. நித்தியானந்தா முதல் அனைத்து ஆனந்தாகளும் அல்லது சாமியார்களும் 25 முதல் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்கக் காரணமென்ன? 2. அனைத்து ஆனந்தாகளும் நுனி நாக்கு ஆங்கிலம் எங்கு கற்று வந்தார்கள்? 3.இத்தகைய எல்லா சாமியார்களும் இங்கு மடத்தை துவங்கும் முன்னர் அமெரிக்காவிலோ கனடாவிலோ இரண்டாண்டுகள் வரை தங்கியிருந்து பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறதே எப்படி? 4.ஒவ்வொரு ஆனந்தாவின் மடமும் துவக்கத்திலேயே பலகோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுகிறதே அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? உதாரணமாக, நித்தியானந்தா ஆசிரமம், வேலூர் நாராயிணி அம்மன்(சுமார் 400 கோடி), ஆந்திர மா நில இராஜமுந்திரி இளவட்ட சாமியார் (பெயர் தெரியவில்லை), இத்தனை நூறு கோடிகள் எங்கிருந்து வந்தது? 5.நித்தியானந்தாவிற்கு நிதி மேலாளர் கனடா ந...