Skip to main content

Posts

மணல் பூத்த காடு - நூல் அறிமுகம்

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? உங்களை கார் வாங்கி நீண்ட தூரம் டிரைவ் போக சொல்லும். சவூதி அரேபியா என்னும் அழகிய தேசத்தை ஒரு முறையேனும் முழுசாய் சுத்தி பார்த்துவிட தூண்டும். அந்த ஒட்டகப் பால் எப்படி இருக்கும், கிடைக்குமா என ஏங்க வைக்கும்? அரபி மொழி கத்துப்போமா என யோசிக்க வைக்கும். மத நம்பிக்கை இருக்கோ இல்லையா ஒரு முறை மெக்கா சென்றுவர தோணும். இறைதூதர் வாழ்க்கை வரலாற்றை படிக்க, காயல்பட்டண காற்றில் இருக்கும் வட்டார மொழி வழக்கினை சுவாசிக்க என பலவும் செய்யும். அப்படியான ரசனையான அதகளமான புத்தகமாக எனக்குப் படுகிறது, மணல் பூத்த காடு. திரைப்படம் போல மனதில் காட்சிப் படிவங்களாக எழுத்துக்களை சமைப்பதில் வல்லவராக இருக்கிறார் முகமது யூசூப், மணல் பூத்த காடு நாவலின் ஆசிரியர். எனக்கு இவரது எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது. நாவல் முழுக்கவே டிராவல்தான். சவூதி அரேபியா (17 ஆம் நுற்றாண்டு முதல் தான் சவூதி என்னும் அடைமொழி இணைக்கப்பட்டிருக்கிறது) என்னும் நாட்டின் நீள அகலத்தை, வரலாற்றை, தட்ப வெப்ப சூழலை, மக்களை படிக்க நிச்சயம் இந்த புத்தகம் உதவும். எது குறித்தும் கதையின் நாயகன் அனீசுக்கு எதிர் ...

Dear Mrs. Naidu - என் வாசிப்பு அனுபவத்தில்

குழந்தை இலக்கியம் குறித்து கருத்து சொல்லவெல்லாம் நான் இல்லை . இருந்தாலும் கடினமாக வார்த்தைகளை , தொடர் சங்கிலிகளாக வாக்கியங்களை அமைத்தல் என்பதை SMS காலத்தில் குழந்தைகள் பெரிதும் விரும்புவதில்லை என்பது என் கணிப்பு . இவையெல்லாம் தாண்டி வாசிக்க வைக்க வேண்டுமென்றால் , ஒன்று அவை சித்திரக்கதையாக இருக்க வேண்டும் அல்லது விஷ்ணுபுரம் சரவணின் வாத்து ராஜா போல் மிகவும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் . என் வீட்டில் அப்படித்தான் , இப்படியே எங்கும் என நான் சொல்லவில்லை . என் அனுமானம் படியே Dear Mrs. Naidu இருக்கிறது . 12-13 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் எளிதாக படிக்கக் கூடிய புத்தகம்தான் . பெங்களூர் மாநகரில் ஒரு ” காக்கா முட்டை ” குழந்தை . பெண் குழந்தை . 12 வயதான சரோஜினி . அவள் தன் பள்ளியில் கொடுக்கப்பட்ட பிராஜெக்ட்களில் ஒன்றாக ஒரு பிரபலத்திற்கு கடிதம் எழுதுகிறாள் . அது ஆன்னி மிஸ்ஸால் கொடுக்கப்பட்டது . சுற்றுச்சுவர் , கேட் போன்றவை இல்லாத வழக்கமான அம்பேத்கர் கார்ப்பரேஷன் ஸ்கூலில் பிராஜெக்ட் கொடுப்பது என்றால...

பதிமுகம் - நூல் அறிமுகம்

நீங்கள் கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கடைசியாக படித்த நாவல் வந்து எத்தனை வருடமிருக்கும் ? அந்த வாழ்வியல் அழகில் மயங்கி சொக்கி நின்ற தருணங்களும் அந்த நாவலின் / கதையின் நாயக நாயகிகள் பெயர்களும் உங்களோடு இன்னும் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது தானே ! ஆமாம் அதே போன்று ஒரு அழகியல் பயணத்திற்கு தயாராகுங்கள் . பாரதி புத்தகாலயம் அதற்கான தருணத்தை உண்டாக்கி இருக்கிறது . " பதிமுகம் " என்னும் கோ . செழியன் அவர்களின் குறுநாவலை வெளியிட்டுள்ளது . இதில் மிக முக்கியமானது இந்த நாவலின் பாத்திரங்கள் எல்லாவரும் இடது சாரி மாணவர் இயக்கத்தை சார்ந்தவர்களே ! ஒரு சிட்டிங்கில் படித்து முடித்தேன் . அப்படியாக நான் கடைசியாக படித்து முடித்த நாவல் பூமணி அவர்களின் " வெக்கை ". அதற்குப் பிறகு பதிமுகம் தான் . கதைக்களம் கேரள தமிழக மாநிலங்களில் எல்லைப் பகுதியில் . பேசும் பொருள் கேரள மாநில மாணவர் சங்க செயல்பாடுகளைப் பற்றி . ஏன் கேரளம் ? இது என்ன கேள்வி , இடதுசாரி அரசியல் என்றாலே கேரளம் தானே . கேரள இடதுசாரிகள் அழகியல் மிகுந்தவர்கள் , உணர்வு மிக்கவர்கள் என்பதில் கேள்வி இருக்க...

நிழல் இராணுவங்கள் - இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் - நூல் அறிமுகம்

இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்? எங்கள் மீது அவர்களுள் இத்தனை வன்மமா? இந்த வன்மம் திடீரென்று அவர்களுள் வந்துவிட்டதா, இல்லை அந்த வன்மம் அவர்கள் மனதில் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது, இப்போது திடீரென்று பொங்கியதா? அவர்களின் இத்திடீர் வன்மம் ஏற்பட நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? – கலவர பூமிகளில் பாதிக்கப்பட்ட வா ழ்விழந்த மத சிறுபான்மையினர்களின் கேள்விகள் தான் இவை. இங்கே இந்திய திருநாட்டில் பெரும்பாலும் கலவரங்களின் பொது இரை இஸ்லாமியர்களே. எப்படி இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு மீதான மத துவேஷத்திற்கு இரையானார்கள்? இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 90 சதமானமாக இருக்கும் இந்து மக்களுக்கு வெறும் 5.3 சதமானம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களின் மீதான பயம் ஏன்? ஆர்.எஸ்.எஸ் ஒரு டிசிப்பிளின் சொல்லிக் கொடுக்கிற, தேசபக்தியை ஊட்டுகிற ஒரு அமைப்பு, அவ்வளவே. அதை போய் நாட்டில் நடக்கிற கலவரங்கள் பலவற்றிற்கும் பங்காளிகள் ஆக்குவது சரியா? ஆங்காங்கே தீவிரவாத குணம் கொண்ட இந்து அமைப்புகள் சில செய்யும் ...

THE ANATOMY OF HATE - நூல் அறிமுகம்

வெறுப்பின் உடற்கூறியல் , இப்படி மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன் . ரேவதி லால் என்னும் பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகம் இது . குஜராத் கலவரம் 2002 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று . பாசிசத்தின் தொடக்கம் அது . ஒரு மாநிலத்தில் தொடங்கிய பாசிசம் , பின்பு நாட்டின் அரசு அதிகாரமாக உருப்பெற உதவிய கலவரம் . இந்நூலின் ஆசிரியர் குஜராத் கலவரங்கள் 2002 ல் ஈடுபட்ட மூவரின் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் மூலம் இந்த வெறுப்பின் பின்னணியை அறிய முயல்கிறார் , ' சுமார் 3 வருட உழைப்பில் பல்வேறு சிரமங்கள் இடையே இந்தப் புத்தகம் உருவானது . பாரதி புத்தகாலயத்தின் வெளியீடுகளான ராணா அயூப்பின் குஜராத் கோப்புகள் மற்றும் ஸ்ரீகுமாரின் குஜராத் கலவரம் ஆகிய இரு புத்தகங்களை படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிக அதிர்ச்சிகளை தராது . மூன்று வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள் இந்தக் கலவரங்களில் எவ்வாறு பங்கெடுத்தனர் , கலவரங்களுக்கு பின்னான காலங்களில் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையே ஆசிரியர் ஆய்ந்து இருக்கிறார் . கலவரம் , மோதல் என என்னதான் சொன்னாலும் அதில் ஈடுபட்ட மக்களின் உளவியலும் , சமூக சுழல் ஆகிய கா...