Skip to main content

Posts

தாழிடப்பட்ட கதவுகள் - நூலினை குறித்து

தாழிடப்பட்ட கதவுகள் , தமிழ் சிறுகதை நூல் வரிசைகளில் நல்லதொரு வரவு . 25 ஆண்டு கால கோவை கலவரங்களின் பின்னணியில் எழுந்து வரும் அடுத்த படைப்பு . ஒவ்வொரு கலவரம் எனப்படுவையும் அந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது. கோவை கலவரமும் அப்படியே . இந்துத்துவ தீய சக்திகள் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போட்டியில் பெரும்பான்மையான இந்துக்களை அதுநாள் வரை இணக்கம், சகோதரத்துவம் பாராட்டியிருந்தவர்களை சிதைத்து எதிரிகளாக மாற்றுவது கோவை, குஜராத், மும்பை என நெடுக நடந்திருக்கிறது. தாழிடப்பட்ட கதவுகள். கதவுகள் என்றிருந்தாலும் அவை திறந்திருக்கும்போதுதான் அங்கே மகிழ்ச்சி, இயல்புத்தன்மை இருப்பதாக தமிழ்ச்சமூகம் நம்புகிறது என நினைக்கிறேன். ஒரு வீடு தாழிட்டு இருந்தால் அங்கே ஏதோ சரியில்லையோ என சந்தேகிக்க வைப்பதும் உண்டு. இன்று அந்த நிலையில்லை. ஆனால், ஒரு 20 வருடங்கள் முன்பெல்லாம் வீடுகளின் கதவுகள் பகல் முழுவதும் திறந்தே இருக்கும். அவ்வகையில் தாழிடப்பட்ட கதவுகள் என பெயர்க்காரணமும் சிறப்பே. மரணங்கள் எல்லாக் கதைகளிலும். மரணங்கள் கலைத்...

அதிகாரம் அறிதல் - மீட்சி (ஒல்கா)

இதிகாச ப் புராணங்கள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை , அநேகமாக எக்காலத்தும் . சிறு வயதில் அதன் மாயங்களில் மகிழ்ந்தும் , பின் அதன் வீரத்தில் வியந்தும் , பின் அதன் வளத்தில் கிறங்குவதுமாக இதிகாச புராணங்கள் இருக்கின்றன . நம் நாட்டின் இதிகாசங்களான மகாபாரதம் , ராமாயணம் என இவை இரண்டுமே அநேகரை எப்போதோ ஒரு வயதில் வசீகரித்திருக்க கூடியவையே என்பதில் ஐயமில்லை . இப்புராணங்கள் மூலம் , தோன்றிய கால , உள்ளடகத்தின் நம்பகத்தன்மை ஆகியவை எப்போதுமே விவாதத்திற்கு உரியவை . ராமனும் , சீதையும் , கிருஷ்ணனும் , அனுமானும் , பரதனும் , வாலியும் , வீமனும் இன்றும் நம்மோடு கலந்துள்ள பெயர்களே . நாடு முழுவதும் ஏதோ ஒரு பெயரில் ராமனாக , கிருஷ்ணனாக , அர்ச்சுன்னாக , சீதையாக , பாஞ்சாலியாக பலரை காணலாம் . எனக்கென்னவோ ராமாயணமே ரொம்ப இஷ்டம் . கம்பனும் ஒரு காரணமோ . ஆனால் , நிச்சயமாய் சொல்லலாம் என் தமிழ் ஆர்வத்திற்கு கம்பன் கழகமே காரணம் . சிறுவயதில் இராமனின் வீரத்தில் , அனுமனின் சூரத்தனத்தில் என இராமாயணம் பிடித்திருந்தது . ஒரு சமயத்தில் வாலி மீது இழைக்கப...

புதுவையில் பாரதி புத்தகாலயம் – மாற்றுக் கல்விக்கான முதல் வாசிப்பு முகாம்

புதுவையில் பாரதி புத்தகாலயம் –  மாற்றுக் கல்விக்கான  முதல் வாசிப்பு முகாம் 23.08.2014. அன்று ஆகஸ்ட் 23 சனிக்கிழமை. புதுவையில் முதல்முறையாக பாரதி புத்தகாலயம், புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான் வாசிப்பு முகாம் NKC அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, குருசுக்குப்பத்தில் நடைபெற்றது. மதியம் 0300 மணி என்று சொல்லியிருந்தோம். உருவையாறு பள்ளி ஆசிரியர் சதீஷ், பாரதி புத்தகாலய ராம்கோபால், புதுவை அறிவியல் இயக்கத்தின் விஜயமூர்த்தி, முருகவேல், ஆசிரியர் விசாகன் என எல்லாரும் காத்திருந்தோம். நேரங்கள் கழிய கழிய ஒன்று, இரண்டு என ஆசிரியர்கள் வருகையில் நம்பிக்கையற்று நின்றிருந்த எங்களுக்கு முகாம் ஆரம்பிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்தது நம்பிக்கையும் மகிழ்வினையும் தந்தது. ஆசிரியர் சதீஷ் தொடங்க, வரிசையாய் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்தினார்கள். விரைவில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவரும், பேராசிரியருமான நா. மணி அவர்கள் எழுதிய “பள்ளிக்கூட தே...

எனக்கு ஏன் இல்லை கல்வி - களப்பணிக்கான கையேடு

எப்போதும் போலத்தான் அன்றும் அபிகுட்டி ஒரு கேள்வி கேட்டது. ஒரு போக்குவரத்து சிக்னலில் வண்டியுடன் காத்திருந்த அந்த அரும்பொழுது. “ஏம்ப்பா, அவர் யாரு? ”, “ அவரா பிச்சைக்காரர்ம்மா ”. உடனே அடுத்த கேள்வி, “அவர் ஏன் இப்படி இருக்காரு ”, “ அவர் அப்படித்தான்ம்மா, அவருக்கு வேலை செய்ய முடியாது அதனாலதான் மற்றவங்ககிட்ட காசு வாங்கி அந்தக் காசுல சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்ம்மா ”.  இப்படித்தான் குழந்தைகள் ஒரு கேள்விக்கு அவர்கள் திருப்தியடைகிற பதிலை நாம் சொல்லிவிட்டால் கேள்விகளை சரம்சரமாக தொடுப்பார்கள். அப்படி தொடரும் கேள்விகள் நம்மால் விடை காண இயலாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரியாவிட்டாலோ பட்டென்று அறும்.  “அவர் எப்பப்பா வேலை முடிப்பாரு, அவர் வீடு எங்கிருக்கு, எனத் தொடங்கி அவர் பசங்கள் எல்லாம் எந்த ஸ்கூல்ல படிப்பாங்க? என்ற கேள்விக்கு என்ன சொல்வது என விளங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க அபிக்குட்டி ” ச்சே, போப்பா“ என்ற ஒற்றை முனகலுடன் கேள்விகளை அப்போதைக்கு முடித்துக்கொண்டது. எனக்குத்தான் மிகப் பாவமாக போய்விட்டது. ஆமாங்க, அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்ப...

காட்டிலே ஒரு பள்ளி - நீதிக்கதை!!

,e;jpahtpy; jw;NghJ cs;s fy;tp epiyia nrhy;tjhf ePq;fs; epidj;jhy; mjw;F ehd; nghWg;gy;y Tpyq;Ffspd; gs;sp – xU ePjpf;fij Kd;ndhU fhyj;jpy; fhl;by; xU rpy tpyq;Ffs; mth;fsJ r%fj;jpy; ngUfp tUk; rpf;fy;fis Ghpe;J nfhs;s KbntLj;J $l;lk; Nghl;L xU gs;sp njhlq;FtJ vd KbntLj;jd. gs;spapy; ghlj;jpl;lkhf XLjy;> VWjy;> ePe;Jjy;> gwj;jy; vd vy;yh tpyq;Ffspd; nghJthd Fzq;fNs ,Uf;fl;Lk; vd KbT nra;jd. midj;J tpyq;FfSk; midj;J ghlq;fSk; fw;f Ntz;Lk; vd KbthdJ. thj;J Mrphpaiutpl kpf ed;whf ePe;jp “ rpwg;G ” vd Njh;r;rp fpNuLk; ngw;wJ. gwg;gjpYk; mt;thNw. Mdhy; vd;d nrhy;y> thj;jpdhy; XLtjpy; Nrhgpf;f Kbatpy;iy. mjdhy; ghtk;> mJ gs;sp tpl;Lk; rpwpJ Neuk; XLtjpy; gapw;rp vLf;f Ntz;b ,Ue;jJ. vjpy; rpwg;ghf ,y;iyNah mjpy; jhNd gapw;rp vLf;f Ntz;;Lk;. XLk; gapw;rpapy; $Ljy; ftdk; nrytopf;f> nrytopf;f mJ jd;Dila tiyg;gpd;dy; fhy;fs; NrjKw> ePe;Jtjpy; “ Rkhh; ” fpNuNl vLf;f Kbe;;jJ. Mdhy; thj;ij jtpu NtW ahUk; mJ Fwpj;J ftiyg;gltpy;iy.      ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...