சிறார்களுக்கான புத்தகம் நம்மை மாதிரி பெரிசுகள் ஏன் படிக்க வேண்டும் என என் நண்பர்கள் சிலர் நினைக்கிறார்கள். எந்தப் புத்தகத்திலும் என்ன புதுசா இருக்கப் போகுது என நினைக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து சிறார்களுக்கென வரும் நூல்களையும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். என்னமோ அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. அப்படியாக நான் வாசித்த மூன்று நூல்களை மட்டுமே இங்கு பேசப் போகிறேன். மூன்றுமே புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. மூன்றுமே அன்பு வாகினி என்பவர் மொழியாகத்தில் வந்துள்ளது. 1. துள்ளி 2. உழைப்பாளி வாத்து 3. மாடுகளின் வேலைநிறுத்தம். இப்புத்தகங்கள் ஏற்கெனவே புக்ஸ் பார் சில்ரன் வெளியிட்ட ஆதி வள்ளியப்பன் அவர்களின் மொழியாக்கத்தில் நீ கரடி என யார் சொன்னது, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்பவனவற்றின் வகை சார்ந்தது. இவையெல்லாம் சிறார்களுக்கு என மட்டுமே எழுதப்பட்டதா என தெரியவில்லை. அவ்வாறு இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நேற்றைய இரவு என் குழந்தைகளுடனான நேரத்தில் நான் இவ்வாறு சொன்னேன், “எனக்கென்னவோ, இவை குழந்தைகளுக்காகவென எழுதப்பட்டதாக த...