தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்
தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க . சினிமா குறித்ததாகட்டும் , இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள் , எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை . எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம் , அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள் , பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880 இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல் . சும்மா எதுவும் சொல்வதில்லை , தியடோர் பாஸ்கரன் அவர்கள் . ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார் . ஆம் மக்களே , The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது . வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க . “ வெள்ளை வெள்ளை கொக்குகளா ...