குரங்கு பெடல் – இரண்டு நாட்கள் முன்பு பார்த்த படம். முதலிலேயே சொல்லிடறேன். அந்த லாங் ஷாட் , டிரோன் ஷாட் என்பதாக தொடங்கி விஎபெக்ஸ் சரியில்ல என்பது மாதிரியான சினிமா மொழி எல்லாம் எனக்கு தெரியாது. நான் எல்லாம் ஒரு சராசரி தமிழன் , சினிமாவும் முக்கியமான உலகம் என்று நம்புகிறேன். அதன் மாயாஜாலத்தில் மகிழ்ந்து போகிறேன் , அவ்வளவே. Disclaimer எல்லாம் முடிஞ்சு , இனி விஷயத்துக்கு வருவோமா.. உண்மையிலேயே என்னை மாதிரி 80 களின் மக்களுக்கு இன்ப நினைவலைகளை இனிமையாய் மீட்டு கொடுக்கும் , எனக்குக் கொடுத்த திரைப்படம் தான் குரங்கு பெடல். நான் ஒன்னும் கிராமத்தில் வளர்ந்தவன் இல்லை. ஆனால் காஞ்சிபுரம் மாதிரியான ஒரு டவுனில் எங்களுக்கு ஒரு குசால் சா இருந்தார் , அவர் ஹவர் சைக்கிள் வச்சிருந்தார் , நாங்களும் ஓட்டி இருக்கோம் , பந்தயம் வைச்சிருக்கோம் , விழுந்து முட்டி எல்லாம் பேத்து இருக்கோம் , பார்த்துக்குங்க. சைக்கிள் … அதுதாங்க வாகனம். நம்ம மனசறிந்து நடக்கும் ஒரே வாகனம் அதுவே. இன்னைக்கு வரை அரை டிரவுசரில் இருக்கும் குசால் சா அப்போது வகை வகையாய் சைக்கிள் வைத்திருந்தார். வேகவதி பாலத்தின் கரையோரத்தில் (நான
அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு