Skip to main content

Posts

நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...

நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...  நியாய விலைக்கடைகளை அரசு நடத்துவது என்பதே பொருட்கள் வெளிச்சந்தையில் நியாய விலைக்கு கிடைப்பதில்லை என்கிறபோது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுப்பது என்பது வெளிச்சந்தையில் பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் மோசமான நிலைக்கு மக்களை தள்ளும்.   வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை குறைக்கவுமே அரசு தொடர்ந்து நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது என்ற நிலையில் தற்போது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் தருவதென்பது மேலும் வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை அரசே ஊக்குவிப்பதாக இருக்கும். புதுவையில் தானே புயல் தாக்கப்பட்டபோது புதுவை அரசின் பான்லே பால் அதன் பார்லர்களில் மட்டுமே அதன் உரிய விலையில் கிடைக்க, வெளிச்சந்தையில் ஈவு இரக்கமில்லாமல் ரூ. 40க்கும் ரூ. 50க்கும் விற்றதே இதற்கு சாட்சி.   நியாய விலைக்கடை என்பது வெளிச்சந்தையில் பொருட்களின் விலைவாசி ஏறும்போதும், சாதாரண மக்களுக்கு அதன் பாதிப்பினை தவிர்த்து மக்களை காக்கும் அருமருந்தாக இருக்கும்போது, பொருட்களுக்கு பணம் என்ற நிலை வந்தால்...

பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்

பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிமுகமான பெயராக இருக்கிறார். வாழ்த்துக்கள்.  அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி நூலினை தொடர்ந்து அவர் இந்தியாவில் எப்போதோ நிகழ்த்திய உரையாடலினை (கவனிக்கவும், உரையல்ல!) சற்றும் சளைக்காமல், ஒரே நேரத்தில் தமிழிலும், அதன் ஆங்கில மூலத்தினையும், விற்பனை சந்தை குறித்து பயமோ தயக்கமோ இல்லாமல், சமூக கடமையாக மட்டுமே கருதி அச்சிட்டு வெளியிடும் அவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் அப்புத்தகங்களை, “இருளும் ஒளியும்” நூலில் தோழர் ச. தமிழ்செல்வன் சொல்வதைப் போல தோள் வலிக்க ஏந்தி பொதுவெளியில் சேர்ப்போம். அது ஒன்றே நம் கடமை. நிற்க. பாவ்லோ பிரையரே குறித்து இன்னமும் இன்னமும் ஏதாவது செய்திகள் கிடைக்காதா, அவை நமக்கு ஏதேனும் சொல்லிச் செல்லாதா என ஒரு அதிகாலை வேளையில் இணையத்தை துழாவிய போது ஒரு அதிசயமான, ஆச்சரியமான செய்தி கிடைத்தது. இன்னமும் மாறா புல்லரிப்போடே தொடர்கிறேன்.  ஆண்டு 1962, இடம் பிரேசில் நாடு. MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும...

ஒரு கோழியின் கதை

ஒரு ஊரில் ஒரு கோழி தன் இடத்தில் இருந்த உணவை உண்டு இனிமையாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு ஒரு தானியம் கிடைக்க, அது அதை விதைத்து பயிராக்கி உண்ணலாமே என நினைத்தது. ”ஆனால் எனக்கு இந்த தானியத்தை விதைக்க உதவுவார்கள்” என புலம்பியது கோழி. “என்னால் உதவ முடியாது, ஆனால் உனக்கு சில காபி கொட்டைகளை தருகிறேன். நீ அதை விதைத்து பணம் பண்ணுவதை விட்டுவிட்டு தானியத்தை பயிரிடுகிறேன் என்கிறாயே” என்றது வாத்து. “என்னாலும் உனக்கு உதவ முடியாது, ஆனாலும் இந்த காபி கொட்டைகள் வளர்ந்தவுடன் அதை நான் உன்னிடமிருந்து விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்” என்றது பன்னி. “எனக்கும் அதே நிலைதான், என்னாலும் உதவ முடியாது, ஆனால் என்னால் உனக்கு இந்த காபி கொட்டைகளை விதைக்க பணம் தர முடியும்” என்றது பெருச்சாளி. ஆக, கோழியும் தானியத்திற்கு பதிலாக காபி கொட்டைகளை விதைத்தது. ”எல்லாம் சரி, ஆனால் எனக்கு இந்த காபி கொட்டைகளை வளர்ப்பதற்கு யாரேனும் உதவ வருவார்களா” என வினவியது கோழி. “என்னால் முடியாதுப்பா, இருப்பினும் இந்த காபி பயிர்கள் வளர என்னால் உனக்கு உரம் விற்பனை செய்ய முடியும்” என்றது வாத்து. “எனக்கு உனக்கு உதவுவது முடியாது, இருப்பினும் இந்த ...

ஏப்ரல் 23 : உலக புத்தக தினம்

வாசிக்கும் ஒவ்வொரு தினமும் வாழ்கின்ற தினம் எஸ் வி வேணுகோபாலன் அறிவின் காட்டாறு ஓடுகிறது சுழித்துக் கொண்டு.. அருள் ஒளியின் தகதகப்பில் மின்னிக்கொண்டிருக்கிறது அன்பி ன் ஓடை வாழ்வியலின் சாரம் குளமாக நிற்கிறது ஒரு ஞானியின் புன்னகையோடு - அடிமனத்தின் ஈரத்தைப் புதுப்பி க்கப் பெருகுகின்றது புத்தக நதி புவியெங்கும்... ஊன்றப்பட்ட எழுத்துவிதைகளை பார்வை பிய்த்தெடுத்தாலும் நகலெடுத்துக் கொடுத்துவிட்டு நகராதிருக்கும் எழுத்துக்கள் புத்தகத்தின் மேற்பரப்பில்.. உள்ளிருந்தொரு குரல் வாசித்துக் கொண்டிருக்க தவத்தின் மெருகை முகத்திற்கு ஏற்றும் மவுன வாசிப்பு.. மெல்லிய வருடுதலில் நூலின் இதம் பருகி வேட்கை ஆறும் காலங்கள்... புத்தக தினம் வாசிப்போர் யாவருக்கும் 'இன்று புதிதாய்ப்' பிறந்த தினம் வாசிக்கும் ஒவ்வொரு தினமும் மனிதர்கள் வாழ்கின்ற தினம்.

சிவந்து விடிகிறது மார்ச் எட்டு !

ஓ எங்கள் கிளாரா கடந்த நூற்றாண்டின் கனல் பொறியே காலகாலத்திற்குமான அணையாத தீபமே ஓர் எண்ணத்தின் விதை ஊன்றப்பட்டதில் உலகு கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகளிர் தினத்தை உரிமைகளின் ஆவேச உருவமே உணர்வுகளின் தூரிகைத் தீற்றலே நூற்றாண்டு நிறைவின் சிலிர்ப்பில் விடிகிறது இந்த மார்ச் எட்டு... உழைக்கும் பெண்களின் ஓங்கிய குரலே உணர்ச்சிகளின் காவியப் பெருக்கே கோபன்ஹெகனில் நடந்த கூட்டத்திற்கு வயது நூற்றியொன்று தீப் பற்றி எரிந்த டிரயாங்கில் தொழிற்சாலையின் வெளியேற இயலாத சுவர்களுக்குள் இரும்புக் கதவுகளுக்குள் தகர்த்தெறிய முடியாதுபோன சாளரங்களுக்குள் சிக்கித் திணறிய பெண் தொழிலாளரிடமிருந்து குமுறிப் புறப்பட்ட கதறல்களை- நெருப்பில் வீழ்ந்து கொதித்த கண்ணீர்த் துளிகளை - அவற்றிலிருந்து சினந்து கிளர்ந்த பதாகைகளில் ஏந்தினீர்கள் சமத்துவ வேட்கையின் நெடிய மூச்சே பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமே எதிரொலிக்கிறது பெண்களின் எழுச்சி கீதம் இப்போது மேற்காசியாவிலும்.... சுதந்திரத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் நீதியின் பெயரால் நம்பிக்கை வானத்துத் தாரகையே கரை கடந்து சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளமே ஓ எங்கள் கிளாரா ஜெட்கின்...

எரியும் பனிக்காடு படித்த பூக்குட்டி

பொதுவாகவே புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தினை அது ஏதாவது வகையிலும் ஏற்படுத்த வல்லவை. ஒரு சில நம்முள் அதிர்வுகள் ஏற்படுத்தலாம், அசைத்தும் போடலாம். சிலவே நம்மை புரட்டி போட, நம்மை முற்றாக குலைத்து விட மிகுந்த சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலானது (அநேகமாக எல்லாமும்), எளிய மக்களின் ஏழ்மையைம், அவமானங்களையும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முற்றாக சுரண்டுதலையும், சுரண்டலை, அவமானங்களை எதிர்த்து விடுதலை வேண்டி அவர்களின் கூட்டு போராட்ட நிகழ்வையும், உணர்வையுமே சொல்பவனவாக உள்ளன. சில அவ்வாறான எளிய மனிதர்களாக இருந்து பின் பெரும் தலைவர்களாக அவர்கள் மாறிய வாழ்க்கை வரலாற்றினையும், பலகோடி எளிய மனிதர்களுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்த பல புரட்சி நாயகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களாகவும், எளிய மனிதர்களின் வாழ்க்கை முன்னெடுக்க வல்ல தத்துவ நூல்களாகவும் உள்ளன. இவ்வகையான புத்தகங்களில் பலருக்கும் பலவித தேர்வுகள் இருக்கலாம். சிலருக்கு ஏன், பலருக்கும் ” மார்க்ஸிம் கார்க்கியின் அழியா காவியம் தாய் ” , நிரஞ்சனாவின் அற்புத படைப்பு “நினைவுகள் அழிவத...

மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம்

மாற்றுக் கல்விக்கான அடுத்த புத்தக வாசிப்பு முகாம் (ஜனவரி 8,9) ”அடடா, நான் விட்டுவிட்டேனே, என்னை கொஞ்சம் “அலர்ட்” பண்ணியிருக்கக் கூடாதா, மிஸ் பண்ணிட்டேனே”, “தோழர், இப்படியிருக்கும் என்று சொல்லியிருக்கக் கூடாதா, நான் கூட வந்திருப்பேனே”, “புதிய ஆசிரியன் அக்டோபர், நவம்பர் மாத இதழ் படித்தேன், ஐயா, அடுத்த முகாம் எப்போது?” “அடுத்த முகாமிற்கு என் பெயரை இப்பொழுதே எழுதிவிடுங்க” என்று கடந்த செப்டம்பர் 4,5 தேதிகளில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் ஈரோடு அறிவியல் இயக்கம் நடத்திய முதல் புத்தக வாசிப்பு முகாமிற்கு வர இயலாத பலருடைய ஆதங்கத்தினையும், ஏக்கத்தினையும் போக்கும் வகையில் அடுத்த வாசிப்பு முகாம் இதோ வருகின்ற புதிய வருடத்தில் (2011) ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் ஈரோடு நகரிலேயே நடைபெற உள்ளது. சென்ற முகாம் குறித்த பதிவுகள் www.puthiyaaasiriyan.com என்கிற வலைத்தளத்திலும் காணலாம். புதிய ஆசிரியன் இதழின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=10&pageid=6 http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=11&pageid...