Skip to main content

Posts

சுகந்தி டீச்சரும் அண்ணா விருதும்

சுகந்தி டீச்சர், இந்தப் பெயர் சென்ற ஆண்டு (2009) டிசம்பர் மாத துவக்கத்தில் அசாத்திய தைரியத்திற்கும், கடமையுணர்ச்சியின் உச்சத்திற்கும், மிக உயர்ந்த தியாகத்திற்கும் அர்த்தம் கொடுப்பதாக தமிழ் சமூகத்தில் பலராலும் பேசப்பட்டது. அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இந்தப் பெயர் குறித்து அவர் அவர்களுக்கே உரிய பாணியில் செய்தி வெளியிட்டது. இன்னும் தெரியாதவர்களுக்கு, சுகந்தி டீச்சர் என்பவர் 21 வயதே ஆன பெண் ஆசிரியர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியம் அருகே கட்டிப்புலம் கிராமத்தின் கலைவாணி பள்ளி என்கிற தனியார் கிராமப் பள்ளியின் ஆசிரியை. இப்போது தெரிந்திருக்குமே. இன்னும் தெரியாதவர்களுக்கு, உங்கள் மேல் தப்பல்ல. உங்கள் மறதியே காரணம். வேறு ஒன்றுமல்ல. மக்களின் மறதியில்தானே பல தவறுகளும், ஊழல்களும், பெரிய குற்றங்களும், ஏன் படுகொலைகளுமே மறைக்கப்படுகின்றன, தீயர்களும், கொடும்பாவிகளும், பொய்யர்களும் தலைவர்கள் ஆகிறார்கள். இப்போதும் தெரியாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஏனெனில், அது யாதொரு பயனும் தரப்போவதில்லை. நீங்கள் மானாட மயிலாட, டீல் நோ டீல் என் எதையும் பார்க்கலாம். இது எதற்கு? அஜய் செல்வபார...

சிவப்பின் உவப்பில் சிந்தை முழுக்க சித்தாந்தம்...........

என்னவோ தெரியவில்லை, அண்மைக்காலமாக மிக நெருக்கமாக பாதிப்பு ஏற்படுத்திய நண்பர்கள், தோழர்களை மிகக் குறைந்த இடைவெளியில் இழக்க நேரிட்டிருக்கிறது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் அசோகன் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று மாரடைப்பில் விடைபெற்றிருந்தார். அதற்கு இரண்டே தினங்களுக்குமுன் தான் அவரது திருமணம் நடந்திருந்தது. 47 வயது அவருக்கு என்பது நெருங்கிப் பழகிய பலருக்கு வியப்பளித்தது. அத்தனை இளமையும் துள்ளலுமாகச் செயலாற்றியவர். அடுத்தது, தூங்காமல் தூங்கி (சந்தியா பதிப்பகம்) என்ற அற்புதமான நூலை எழுதிய மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம். 60 வயதுவரை அறுவை சிகிச்சை மேசைக்கருகில் நோயாளிகளின் புனர்வாழ்விற்கு வரமளிக்கத் தக்க ஆற்றலோடும், அது மறுக்கப்பட்ட வேளைகளில் உறவினர்களுக்கு ஆறுதல் மொழிகளோடும் வளையவந்த அவரே அறுவை சிகிச்சை மேசை மீது படுக்க நேர்ந்த கணத்தில் உரமழிந்து தவித்தவர். புற்றுநோய் அவரை அதிகம் தவிக்கவிடாது நான்கைந்து மாதங்களுக்குள் விடுதலை கொடுத்துவிட்ட நிகழ்வு சென்ற அக்டோபர் 23ல் நடந்தது. இளம்வயதில் செயலூக்கப் போராளியாக தெருவீதியில் மட்டுமின்றி, இணையவீதிகளிலும் முழங்...

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடதிட்டமே (பாகம் - 2)

சென்ற பதிவின் தொடர்ச்சி 6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது? தாய், தவ்தை அல்லது குடும்பத்திலிருந்து குழந்தையின் பிறப்பு முதல் கற்றுக் கொள்ளும் மொழியே தாய் மொழி. இந்தத் தாய் மொழியே சிந்தனை மொழி. இதுவே படைப்பாற்றலுக்கு ஆணிவேர். உயிரைக் கொடுத்து ஆங்கிலம் மட்டும் படிக்க வைத்தால் அவர் நல்ல வேலைக்குக்கூட செல்லலாம். நல்ல வருவாய் ஈட்டலாம். ஆனால் நல்ல மனிதனாக, குடிமகனாக இருக்க முடியாது. நல்ல "ரோபோ"வாக இயங்க முடியும். சாதியத்தால் வதைபட்டு சீரழிந்து போயுள்ள தலித் மக்கள் ரோபோக்களாக மாறினாலும...

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடத்திட்டமே

அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை : 1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே சமச்சீர்கல்விதானா?" சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏ...

என் "இனிய" தமிழ் மக்களுக்கு..........

நவம்பர் 14: உலக டயாபடீஸ் தினம் என் "இனிய" தமிழ் மக்களுக்கு.......... எஸ் வி வேணுகோபாலன் நவம்பர் 14, குழந்தைகள் தினம் மட்டுமல்ல, உலக 'டயாபடீஸ் தினமும் கூட. டயாபடீஸ் என்ற சொல்லுக்கு சர்க்கரை நோய் என்று எழுதுவதற்குக் கைவர மறுக்கிறது. ஏனென்றால், சர்க்கரை நோய் என்பது முழுதும் சர்க்கரை தொடர்பானதுமல்ல, அந்தப் பிரச்சனை நோயும் அல்ல. நீரிழிவு பிரச்சனை என்று சொல்வது பரவாயில்லை போல் தோன்றுகிறது. பெயர் பொருத்தம் ஒருபுறம் இருக்கட்டும். விஷயத்திற்கு வருவோம். டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் பற்றிய பேச்சு ஊடகங்களில் எப்போதும் இருப்பது தான். இந்தப் பொருள் மீது ஒரு லட்சம் நகைச்சுவை துணுக்குகளாவது எழுதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், உலக தினமாக அது அனுசரிக்கப்படும் வேளையில், இதன் மீதான கவன ஈர்ப்பு அதிகமாக எழுகிறது. அப்படி பேசப்படுவதில் நல்ல அம்சங்களும் உண்டு. மிரட்டல் வேலைகளும் உண்டு. இப்படியான ஒரு உலக டயாபடீஸ் தினத்தன்று, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வந்தது. காட்சியின் துவக்கத்தில், ஒரு தேக்கரண்டியிலிருந்து சர்க்கரை கொட்டப்படுகிறது. அது கொட்டக் கொட்ட மலையாகக் கீழே நிறைகிறது. ...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன் (பாகம் ‍ 2)

இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். ......... ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது. "நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" ‍ இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில் ...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...