Skip to main content

சிவந்து விடிகிறது மார்ச் எட்டு !



ஓ எங்கள் கிளாரா
கடந்த நூற்றாண்டின் கனல் பொறியே
காலகாலத்திற்குமான அணையாத தீபமே
ஓர் எண்ணத்தின் விதை ஊன்றப்பட்டதில்
உலகு கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகளிர் தினத்தை

உரிமைகளின் ஆவேச உருவமே
உணர்வுகளின் தூரிகைத் தீற்றலே
நூற்றாண்டு நிறைவின் சிலிர்ப்பில் விடிகிறது இந்த மார்ச் எட்டு...

உழைக்கும் பெண்களின் ஓங்கிய குரலே
உணர்ச்சிகளின் காவியப் பெருக்கே
கோபன்ஹெகனில் நடந்த கூட்டத்திற்கு வயது நூற்றியொன்று

தீப் பற்றி எரிந்த டிரயாங்கில் தொழிற்சாலையின்
வெளியேற இயலாத சுவர்களுக்குள்
இரும்புக் கதவுகளுக்குள்
தகர்த்தெறிய முடியாதுபோன சாளரங்களுக்குள்
சிக்கித் திணறிய பெண் தொழிலாளரிடமிருந்து
குமுறிப் புறப்பட்ட கதறல்களை-
நெருப்பில் வீழ்ந்து கொதித்த கண்ணீர்த் துளிகளை -
அவற்றிலிருந்து சினந்து கிளர்ந்த பதாகைகளில் ஏந்தினீர்கள்

சமத்துவ வேட்கையின் நெடிய மூச்சே
பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமே
எதிரொலிக்கிறது பெண்களின் எழுச்சி கீதம் இப்போது மேற்காசியாவிலும்....
சுதந்திரத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் நீதியின் பெயரால்

நம்பிக்கை வானத்துத் தாரகையே
கரை கடந்து சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளமே
ஓ எங்கள் கிளாரா ஜெட்கின்
மகளிர் தின நூற்றாண்டு சிவந்து விடிகிறது
உனது நினைவுகளின் கிளர்ச்சியோடு!

- எஸ் வி வேணுகோபாலன் ( 9445259691 / svvenu@gmail.com)

நண்பர்களே, சமையற்கூடங்களிலும், சடங்குகளிலும் இன்னும் முடக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்திற்கு இக்கவிதை கேள்விகளை விட்டெறிகிறது. இன்னும் ”அவள் பெண்” என்று பகடி செய்பவர்களை இக்கவிதை தன் எழுச்சி வீச்சால் ஏதோ செய்யும்.

ஆண்டுதோறும் கடந்து செல்கிற ஒரு தினமல்ல மார்ச் 8. கரைகிற ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு மகளிரையாவது அவர்களை “அவர்களாக” இருக்க விட சபதமேற்க வேண்டிய நாள். ஒரு கிளாரா ஜெட்கினால் ஏற்பட்ட மாற்றங்களின் துவக்க நிலையே இன்னும் தேக்க நிலையாக இருக்கிறது.

தேக்க நிலை களைந்து இன்னும் பெண்கள் பீடு நடை போட, பல்வேறு காரணிகளால் புரையோடி போயிருக்கும் இச்சமூகத்தை மாற்றிட அவர்கள் ஆண்களையும் கைபிடித்து அழைத்து செல்லட்டும் . தாய் கைபற்றி போகும் குழந்தைகள் நம்பிக்கையோடு, மகிழ்வோடு, பயமில்லாமல் செல்வதை இவ்வுலகம் நன்கறியும்.

Comments

superlinks said…
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நன்றி
தங்கள் இ-மெயில் முகவரி தாங்களேன்
தங்கள் இ-மெயில் முகவரி தாருங்களேன்.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும்

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும் என்ற தலைப்பைக் கண்டவுடன் பலர் முகத்தைஸ் சுருக்கலாம். இன்னும் சிலர் "ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க" எனக் கூறலாம். கட்டுரையைப் படித்து முடித்த பிறகு நித்தியானந்தாக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நீங்களே உணர்வீர்கள். 1. நித்தியானந்தா முதல் அனைத்து ஆனந்தாகளும் அல்லது சாமியார்களும் 25 முதல் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்கக் காரணமென்ன? 2. அனைத்து ஆனந்தாகளும் நுனி நாக்கு ஆங்கிலம் எங்கு கற்று வந்தார்கள்? 3.இத்தகைய எல்லா சாமியார்களும் இங்கு மடத்தை துவங்கும் முன்னர் அமெரிக்காவிலோ கனடாவிலோ இரண்டாண்டுகள் வரை தங்கியிருந்து பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறதே எப்படி? 4.ஒவ்வொரு ஆனந்தாவின் மடமும் துவக்கத்திலேயே பலகோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுகிறதே அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? உதாரணமாக, நித்தியானந்தா ஆசிரமம், வேலூர் நாராயிணி அம்மன்(சுமார் 400 கோடி), ஆந்திர மா நில இராஜமுந்திரி இளவட்ட சாமியார் (பெயர் தெரியவில்லை), இத்தனை நூறு கோடிகள் எங்கிருந்து வந்தது? 5.நித்தியானந்தாவிற்கு நிதி மேலாளர் கனடா ந...